நண்பர்களே!
அரசும், மருத்துவர்களும் சொல்கிற பாதுகாப்பு முறைகளை தவறாமல் கடை பிடியுங்கள்!
கீழே மருத்துவர்களால் சொல்லப்பட்ட சில எளிய உணவு முறைகளைப் பின்பற்றுங்கள்!
அதே சமயம் நீங்கள்,
1. எப்பொழுதும் அந்த 'கர்ண-பரம்பரைக்' கதைகளை கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்!
2. அந்தக் கதைகளை கொஞ்சமாவது தொடர்ந்து கேட்பதைப் பார்ப்பதைத் புறந்தள்ளுங்கள்!
3. மற்றவர்களுக்கு உதவி செய்வது விளையாடுவது, மனம் விட்டு சிரிப்பது இவைதான் உங்கள் உள்ளத்தை உடலை, ஆரோக்கியமாகவும் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும்!
4. எதிர்மறை செய்திகளை தொடர்ந்து கேட்டு உங்கள் மன உறுதியைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!
அது உங்கள் நனவிலி மனத்தில் (Subconscious Mind) தேவையற்ற, நீண்டகால அடிப்படையிலான தீய தாக்கத்தை ஏற்படுத்தும்!
5. நகைச்சுவை காட்சிகளை அதிகம் பாருங்கள், வாய்விட்டு சிரியுங்கள்!
6. தன்னம்பிக்கை தரும், மகிழ்ச்சி தரும் புத்தகங்களை படியுங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் படித்துக் காட்டுங்கள்!
7. எப்பொழுதும் உங்கள் கவனத்தை மூக்கு மற்றும் தொண்டையின் மீது வைத்துக் கொண்டு, இல்லாத நோயை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு கலங்காதீர்கள்!
8. "பயம் என்ற ஓட்டை வழியாகத்தான் நோய் என்ற ஒன்று வந்து நுழைகிறது"!
9. உங்களுக்கு நம்பிக்கை தருகின்ற அறிவியலோ அல்லது ஆன்மிகமோ, எதையோ ஒன்றை அல்லது இரண்டையுமே கூட கைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்!
10. இயற்கை அல்லது இறைவன் உங்கள் குடும்பத்துக்கு நல்லதே செய்வார் என்று நம்புங்கள்! "நம்பிக்கையை" விட மிகப்பெரிய சக்தி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை!
🍀🌸😇😇
அன்புடன்
யோஜென் பால்கி
(உள இயல்)