Translate this blog to any language

புதன், 25 மே, 2022

எத்தனை வரி வசூல் டா ங்கப்பா!!!

ஒரே ஒரு 'வரி' கேட்டதுக்கே கட்டபொம்மனுக்கு அவ்வளவு கோபம் வந்தது...

கடவுளே!

நான் I.T. கட்டி விட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டி விட்டேன்
CST கட்டி விட்டேன்
Service Tax கட்டி விட்டேன்
Excise Duty கட்டி விட்டேன்
Customs Duty கட்டி விட்டேன்
Octroi கட்டி விட்டேன்
TDS கட்டி விட்டேன்
ESI கட்டி விட்டேன்
Property Tax கட்டி விட்டேன்
Stamp duty கட்டி விட்டேன்
CGT கட்டி விட்டேன்
Water Tax கட்டி விட்டேன்
Professional Tax கட்டி விட்டேன்
Corporate Tax கட்டி விட்டேன்
Road Tax கட்டி விட்டேன்
STT கட்டி விட்டேன்
Education Cess கட்டி விட்டேன்
Wealth Tax கட்டி விட்டேன்
TOT கட்டி விட்டேன்
Capital Gain Tax கட்டி விட்டேன்
Congestion Levy etc etc etc...
கட்டி விட்டேன்
TOLL GATE FEE - யும் 
 மாமூல்-ஐயும் கூட கட்டி விட்டேன்

இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாம் மை லார்டு.
😭😭😭

from Whatsapp University
-யாரோ

சனி, 21 மே, 2022

பெரியார் சொத்துக்கள் பெரியாரது முக்கிய கொள்கைகள் பரவ உபயோகப்படுகிறதா?

தந்தை பெரியார் அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்க நிறுவனம் என்று பெயர் வைத்து விட்டுப் போனார்; கூடவே இன்றைய பண மதிப்பு சில ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும்!


எந்த காரணத்துக்காக துவங்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக 90% வருமான மிச்சத்து வட்டியை செலவிடுவது தான் தம் வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைத்த அன்புப் பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அறத்தொண்டு ஆகும்! 

மாதந்தோறும் வரும் உபரி வருமானத்தில் 80-90% பணத்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்க முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதிய இலவச புத்தகங்கள் உலகம் முழுவதும் அனுப்பலாம், மாவட்ட செயலாளர்களுக்கு மாதம்தோறும் ஓரிரு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒரு நியாயமான தொகையைப் பிரித்து தரலாம்!

அதே போல, இந்திய மாநிலங்கள்/உலகம் முழுவதும் பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துக்களை (ஆர்எஸ்எஸ் வைத்துள்ள ஆயிரக்கணக்கான Paid Staffs முழு நேரத் தொண்டர்களைப் போல), சில நூறு பேரையாவது நியமித்து கொள்கைகள் பரப்பலாம்! 

இது போன்ற எந்தவொரு நீண்டகால பிரச்சார திட்டங்களும், கூர்நோக்கு பார்வையும் இல்லாமல் எப்படி தந்தை பெரியாரின் கருத்துக்கள், எதிரிகள் மற்றும் துரோகிகளின் பண-பலம் பிரச்சார-பலத்தை மீறி வளர இயலும்? 
நன்றாக யோசித்துப் பாருங்கள்!

தற்போது பெரியார் திடலில் உள்ளவர்கள், அச்சு அசலாக பிற பல உலகிலுள்ள
மதவாதிகளைப் போலவே கல்வி நிறுவனங்கள் நடத்துவது, அதில் வரும் இலாபத்தில் இன்னொரு கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது, திராவிட நலநிதி என்று வட்டிக்கு விடுவது, என்ற வகையில் மட்டும் 90% பணம், உழைப்பு, நேரத்தை செலவு செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது! உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

நாம் மிக மிக அபாயமான பெருநோய்கள் பீடிக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்! தந்தை பெரியார் கொள்கைகள்தான் அதற்கு அருமருந்து என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதே! அந்த "சமத்துவம்-சமூக நீதி", என்னும் மாமருந்து மானுட சமூகம் முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டாமா?

ஆக, பெரியார் கொள்கைகள் மீது உண்மையான பற்று உள்ளவர்கள்
பெரியார் சம்பாதித்த சொத்துக்கள், அவரது முக்கிய கொள்கைகளைப் பரப்புவதற்கு எத்தனை சதவீதம் பயன்படுகிறது என்ற மிக மிக முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்! 

இது யாரையும் கொச்சை படுத்துவதற்காக அல்ல; காலமெல்லாம் நமது சூத்திர மக்கள் இழிவு நீங்க மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு உழைத்த, ஈடிணையற்ற அந்த அன்பின் பேரொளி, தந்தை பெரியாரின் நோக்கங்கள் சீக்கிரம் நிறைவேறத் தாம்!

-YozenBalki