பேராசை உருவாக்கும் பெருந்துயர்கள் என்சொல்வேன்!
நூறாசை கொண்டலையும் நரிக்குணங்கள் பெருகுதையோ!
வெறித்தனங்கள் வீணாசை அலங்காரப் பெருவாழ்வு
தடித்தமனம் திகிடுதத்தம் அகங்கார பேயாட்டம்
பரபரப்பு பழிகூறல் தீயறிவின் பிணவாசம்
மரமரத்த நல்லுணர்வு தன்னனலத்துப் புழுவாழ்வு
நாளும் வளர்க்கின்ற சூழலிலே கிடக்கின்றோம்
மேலும் தீவினையே எந்நாளும் புரிகின்றோம்!
நல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்
அல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்!
பணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்
விதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்!
நல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்
அல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்!
பணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்
விதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்!
வேதிப் பொருள்கூட்டி ஓராயிரம் பண்டம்
தீதுதர இராப்பகலாய் உற்பத்தி பண்ணுகிறோம்!
அண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு
யாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்!
அண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு
யாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்!
'வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்'
பக்கமுள பந்தமின்றி 'பேசியிலே' யாருக்கோ ஈசுகிறோம்!
புன்மை விஞ்ஞானம் அருளழித்துப் பொருள் பெருக்க
உண்மைகளை உதறிவிட்டு பொய்யுடனே வாழுகிறோம்!
அய்யகோ! அழிக்கின்றோம் அன்னைஇயற்கை தனை
உய்யவழியில்லை உதிரும் இனிமனிதம் தான்!