Translate this blog to any language

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

டயாபடீஸ் சை ஒழிக்க உமிழ்நீர் சுரக்கணும்பா!!

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே 
700 மருந்து நிறுவனங்கள் (கம்பெனிகள்) ஆண்டுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்  ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.

இதற்கான 
அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்!

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

 அது உமிழ்நீர் தான்!

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக் கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
 கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

 
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 
 
வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. 
 
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
 
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
 
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.
******
ஆக்சிஜன் நம் உடம்பில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவோம்:

*உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .

1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;

1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* .........   5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும். வாழ்க வளமுடன்! அனைவருக்கும் ஷேர் செய்யவும்....எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க  வேண்டுகிறேன்!

🙏🙏🌈🌈🙏🙏

WhatsApp University:
படித்ததில் பிடித்தது..

புதன், 30 செப்டம்பர், 2020

இந்தித் திணிப்பு Vs இந்தி விருப்பம்


இந்தித் திணிப்புக்கும் இந்தி விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாமர மங்கிகளுக்கு!

டாடா ஸ்கையில் இருந்து ஒரு அம்மணி அழைத்திருந்தார். எடுத்தவுடன் நமஸ்த்தே என்று ஆரம்பித்தார். 

எனக்கு இந்தி மராத்தி தெரியும் என்றாலும் நான் வணக்கம் என்று தமிழில் பதில் சொன்னேன். 

``மே பாலா ஸே பாத் கர்ராகும்..?” என்றார்..

``ஆமா” என்றேன் மீண்டும் தமிழில். சற்றுத் தடுமாறியவர்,

``டாடா ஸ்கைகீ சர்வீஸ்கீ பாரேமே கஸ்டமர்கீ ஜான்காரி ஜானா சாத்தாகும்..” 

சொல்லுங்க.. என்றேன்..

’’முஜே ஆப்கீ பாஷா சமஜ்மே நஹி ஆத்தாஹே.. ஆப் இந்தி நஹி ஜான் தே ஹோ..”என்றார். (அம்மணிக்கு நான் பேசும் மொழி புரியலையாம்.. உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்கிறார் )

``எனக்கு இந்தி மராத்தி இங்கிலீஸ்.. ஏன் பிரெஞ்ச் கூடத் தெரியும்.. அல்லது தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் எதுக்கு உங்கக் கிட்ட ஹிந்தியில் பேசணும்.. தமிழ் நாட்டில் உங்க ஓனர் வியாபாரம் பண்றார்.. அப்போ கஸ்டமர் சேவை குறைபாடுகள் குறித்து பேசுவதற்குத் தமிழைத் தான் பயன்படுத்த வேண்டும்.

தமிழர்களின் துட்டு மட்டும் வேணும்.. ஆனா நாங்க உங்களுக்காக இந்தி பேசணுமா.. தேவைனா நீங்க தமிழ் படிச்சுட்டு வந்து எங்களுக்குச் சேவை செய்யுங்க.. இந்த கஸ்டமர் ரொம்ப கேவலமா திட்டுறான்னு  இதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி உங்க முதலாளிக்கு அனுப்புங்க.. என்று 'மராத்தி'யில் சொல்லி விட்டு வைத்தேன்.

அநேகமாக போனை வைத்தப் பிறகு.. ``இந்த தமிழனுங்க எவ்வளவு மொழி வெறி பிடிச்சவனுங்களா இருக்கானுங்க பாருங்க.. ”என்று பக்கத்து சீட் தோழியிடம் திட்டியிருக்கக் கூடும்..

இது முதல்முறை அல்ல..  சமீபமாக கவனிக்கிறேன்.. ஏர்டெல்லில் ஆரம்பித்து இந்த வட ஹிந்திய கும்பல் தமிழகத்தை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கின்றன.  அதுவும் தற்போதைய  கும்பலின் வரவுக்குப் பிறகு இந்தித் திணிப்புகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

தினத்தந்தியில் அரசு விளம்பரத்தை இந்தியில் வெளியிடும் அளவுக்கு இவர்களின் அட்டகாசம் இருக்கிறது.. உங்களுக்கும் யாராவது இப்படி இந்தியில் பேசினால் தயங்காமல் தமிழிலே பதில் கொடுங்கள். இந்தி தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். 

நிறைய பாமர மங்கிகளுக்கு திணிப்புக்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன..

உலகத்தின் அத்தனை மொழியையும் கற்றுக் கொள்ளலாம். அது நம் தேவையைப் பொறுத்தது. 

தமிழ்நாட்டுக்கு வேலைக்காக படையெடுத்து வருகிறார்களே வட இந்தியர்கள்.. அவர்கள் என்ன எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்காமல் வளர்ச்சியை தடுத்து விட்டார்கள் என்றா புலம்புகிறார்கள்.. வாழ்தலுக்கு அவசியம் என்றால் ஒருவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்வான்.. 

திருநெல்வேலிக்காரன் பேசுவது போல் சுத்தமாக தமிழ் பேசும் சேட்ஜிக்களை எனக்குத் தெரியும்.. அவர்கள் தமிழ் சினிமாவில் காட்டுவது போல் நிம்பில்க்கு என்றெல்லாம் இப்போது பேசுவதில்லை..

அதேப்போல் இங்கிருந்து வேலைக்கு வட இந்தியா போகக் கூடியவர்கள் அந்த மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.. 

ஆனால் இந்தியாவின் சிறப்பான பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில் ஒற்றை மொழியாக இந்தியை திணிப்பதையோ இந்தியை தேசிய மொழியாக்குவதையோ அனுமதிக்க முடியாது..

இந்தி மொழி உயர்ந்தது..  நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று திணித்தால்  தமிழர்கள் மீண்டும் மீண்டும் மிதித்து அனுப்புவோம்!

ஏனெனில்  அடுத்தவர்கள் மீது உங்கள் மொழியை திணிப்பது தான் மொழிவெறி.. அதை எதிர்ப்பது அல்ல!

பகிர்வு

MTR
......
From a WhatsApp unknown friend!