Translate this blog to any language

ஞாயிறு, 7 மார்ச், 2021

தந்தை பெரியார் அவ்ளோ பெரிய அப்பா-டாக்கரா?


தந்தை பெரியார் யார்?
அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பா..டாக்கரா? என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே பெரியாரின் கொள்கை என்று நினைப்பவர்களுக்கும் சில பயனுள்ள தகவல்கள்:

1. பெரியார்: தான் ஏற்கனவே வகித்த 29 பதவிகளை சிறு வயதிலேயே துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் மட்டுமே ஓயாது ஈடுபட்டவர்.

2. பெரியார்: செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் 1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி! 

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை பொது மக்களுக்கு மட்டுமே விட்டுச் சென்றவர். 

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை *அரசியல் கட்சியாய் மாற்றாதவர்*, ஓட்டு அரசியலில் இல்லாமலேயே மக்கள் சமுதாயப் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர். 

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்; செயல்முறையில் மேடை தோறும் செய்து காண்பித்தவர்!

5. மனிதர்கள் அனைவரும் சமம் அவர்களுக்குள் *மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது* என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன என்றாராய்ந்து உணர்ந்து மதத்தை தூக்கி எறிந்தவர். *அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்* என்று முரசறைந்து சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த அந்த காலத்தில், மதத்தின் பெயரால், குறிப்பிட்ட சமூக மக்கள், பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை, கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசினார்.. 

8. ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான பகுத்தறிவுவாதி, பல பத்திரிகைகளையும் இதழ்களையும் நடத்தியவர்.

9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.

10. *பெரியார், புதிய உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி..." என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால்* பாராட்டப்பட்டவர்... 

11. *மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்*. பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.

12. *தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள ஆதரவளித்தவர்*.

13. *பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர். பெண்களை அடிமைபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். *பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்*

14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.

16. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், பரணில் போடப்பட்டு, மறைக்கப்பட்டு இருந்த திருக்குறளை தொடர்ச்சியாக "திருக்குறள் மாநாடுகள்" நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு போய் சேர்த்தவர் தந்தை பெரியார். கர்நாடக இசை என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு & சம்ஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர் தந்தை பெரியார்.  

17. ஹிந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர்.. 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். *தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்*

18. மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தனது சொந்த தோட்டத்தில், ஏக்கர் கணக்கில் இருந்த தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர்.

19. வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், *இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல் திருத்தமாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர். அந்த சட்ட திருத்தத்தால் தான், இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & OBCக்கான இடஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகிறது! (இப்போது அதில் கையை வைத்து அழித்து வருகின்றனர்)

20. இந்தியாவில் வெறும் 5% சதவீதம் மட்டும் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள், நாட்டின் 90% அரசு வேலைகளையும், படிப்புகளையும் ஆக்கிரமித்திருந்ததை மாற்ற, சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையான, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & தலித் மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார்..   

*தந்தை பெரியாரின் பொன்மொழிகள் சில*

1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

3. மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.

4. விதியை நம்பி மதியை இழக்காதே.

5. மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

6. மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

7. பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

8. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

9. பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

10. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

11. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

12. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

13. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

15. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

16. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

17. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் "பகுத்தறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து, சரியென்று பட்டபடி நட" என்பதேயாகும்.

18. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான் 

19. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

-- தந்தை பெரியார்

நன்றி 
மோகன் பாலகிருஷ்ணா

திங்கள், 25 ஜனவரி, 2021

எதற்கு கால் பாதத்தில் தேங்காய் எண்ணெய் மசாஜ்?

உங்கள் பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்:

   1. என் தாத்தா தனது 87 வயதில் காலமாகும் வரை அவருக்கு ஒரு முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை என்று ஒரு ஷெட்டி பெண் எழுதினார். ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார். நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன். இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.

   2. மணிப்பாலைச் சேர்ந்த ஒரு மாணவர், என் பாதங்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த என் அம்மா வற்புறுத்தியதாகக் கூறினார். ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவரது பார்வை பலவீனமடைந்தது என்று அவர் கூறினார். அவள் இந்த செயல்முறையைத் தொடர்ந்தபோது, ​​என் கண் ஒளி படிப்படியாக முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆனது.

   3. ஒரு தொழிலதிபரான உடுப்பியைச் சேர்ந்த திரு காமத் என்ற ஒரு மனிதர் நான் விடுமுறைக்காக கேரளா சென்றேன் என்று எழுதினார். நான் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தூங்கினேன். என்னால் தூங்க முடியவில்லை. நான் வெளியே நடக்க ஆரம்பித்தேன். இரவில் வெளியே உட்கார்ந்திருந்த பழைய காவலாளி என்னிடம், "என்ன விஷயம்?" நான் தூங்க முடியாது என்று சொன்னேன்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் ஏதேனும் இருக்கிறதா?" நான் இல்லை என்று சொன்னேன், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றார். பின்னர் குறட்டை போட ஆரம்பித்தார். இப்போது நான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன்.

   4. இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய முயற்சித்தேன். இது எனக்கு நன்றாக தூங்கவும் சோர்வு நீக்கவும் செய்கிறது.

   5. எனக்கு வயிற்று பிரச்சினை இருந்தது. என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை 2 நாட்களில் குணமாகியது.

   6. உண்மையில்! இந்த செயல்முறை ஒரு மந்திர விளைவைக் கொண்டுள்ளது. இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயால் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்தேன். இந்த செயல்முறை எனக்கு மிகவும் நிம்மதியான தூக்கத்தை அளித்தது.

   7. நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தந்திரத்தை செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

   8. என் கால்கள் வலிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். இந்த செயல்முறை என் கால்களில் ஏற்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளித்தது.

   9. என் கால்கள் எப்போதும் வீங்கியிருந்தன, நான் நடக்கும்போது சோர்வாக இருந்தேன். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை நான் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தொடங்கினேன். வெறும் 2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.

   10. இரவில், படுக்கைக்குச் செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய் மசாஜ் ஒரு முனறயை என் கால்களில் பயன்படுத்தினேன். இது என்னை மிகவும் நிம்மதியாக தூங்கச் செய்தது.

   11. இது ஒரு அற்புதமான விஷயம். நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது. இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.

   12. என் தாத்தாவின் காலில் எரியும் உணர்வும் தலைவலியும் இருந்தது. அவர் தனது கால்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கினார், வலி ​​நீங்கியது.

   13. எனக்கு தைராய்டு நோய் இருந்தது. என் கால் எல்லா நேரத்திலும் வலித்தது. கடந்த ஆண்டு யாரோ ஒருவர் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் காலில் தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். நான் அதை நிரந்தரமாக செய்கிறேன். இப்போது தான் அமைதியாக இருக்கிறேன்.

   14. என் கால்களில் கொப்புளங்கள் இருந்தன. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நான்கு நாட்கள் தேங்காய் எண்ணெயுடன் என் பாதங்களை மசாஜ் செய்கிறேன். ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

   15. எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய் இருந்தது. என் நண்பர் என்னை 90 வயதான ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்றார். தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில் சேர்த்து தூங்கச் செல்லுங்கள். நான் ஆலோசனையைப் பின்பற்றத் தொடங்கினேன். நான் மிகவும் நிம்மதியடைந்தேன். இந்த உதவிக்குறிப்பு எனது மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். குறட்டையை தடுக்கிறது.

   16. என் கால்களிலும் முழங்கால்களிலும் வலி ஏற்பட்டது. என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் முறையை படித்ததிலிருந்து, இப்போது நான் தினமும் செய்கிறேன், அது எனக்கு தூக்கத்தைத் தருகிறது.

   17. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜின் இந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, என் முதுகுவலி குறைந்துவிட்டது, நான் நன்றாக தூங்கினேன்.

   எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதானது. "நீங்கள் Coconut Oil மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை, எந்தவொரு எண்ணெய், கடுகு, ஆலிவ் போன்றவற்றை கால்களிலும் முழு பாதங்களிலும் தடவலாம், குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் இயற்கையின் அற்புதத்தை பாருங்கள், 

பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில் சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.
 மனித உறுப்புகளை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் குணமாகும்.
   "ஃபுட் ரிஃப்ளெக்சாலஜி" (Foot Reflexology) என்று இது கூறப்படுகிறது. இந்த கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

 தயவுசெய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்!

From
WhatsApp University!
😇😇🙏🙏