Translate this blog to any language

திங்கள், 6 மே, 2024

ரூ.150 க்கு 12 சுற்றுலாத் தலங்கள் காட்டுகிறார்கள்!



கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. 

அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க...!!

ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.

ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது.

இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.

1. Upper lake View
2. Moyar Point
3. Pine Forest
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கால்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு View
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop,)

ஆகிய இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு மேற்கண்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.

அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டடு இருக்கும். 

இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆஃபர் இந்த மே மாதம் முழுவதும் இருக்கும்.

இந்த பேருந்துகள் போதுமானதாக இல்லைன்னு மக்கள் குறைபடுவதும் தெரிகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

அப்புறம் என்ன கிளம்புங்க ஜாலியா வெறும் 150 ரூபாய்ல கொடைக்கானலை சுத்திட்டு வரலாம்.

-Courtesy
WhatsApp University 

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்!



🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்!

நன்றி 🙏 
இனிய காலை வணக்கம்.

Courtesy:
 
-எனது Twitter நண்பர் இன்பா
Mr. Vitalist