Translate this blog to any language

புதன், 21 டிசம்பர், 2022

நன்றி Gratitude பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்!

பிறரால் நமக்கு ஒரு உதவி அல்லது நன்மை கிடைத்தால், அதை ஞாபகம் 
வைத்து, நமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நம் கடமை பட்டிருக்கிறோம் என்று உணரும் தன்மைக்குப் பெயர் நன்றி உணர்வு.

நாம் மட்டும் எப்பொழுதுமே மற்றவர்களிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நன்றி 7 வகைப்படும்.

1. வாய் நன்றி
2. மன நன்றி
3. உணர்ச்சி நன்றி
4. மன வாய் நன்றி
5. மன வாய் உணர்ச்சி நன்றி
6. நடிப்பு நன்றி
7. கடமை நன்றி

1. சிலர் நன்றி என்று வாயால் கூறுவார்கள். ஆனால் மனதில் நன்றி உணர்வு இருக்கவே இருக்காது. இது வாய் நன்றி. 

2. சிலர் மனதில் நன்றி உணர்வு இருக்கும். ஆனால் வாயை திறந்து சொல்லவே மாட்டார்கள். இது மன நின்றி.

3. சிலர் நன்றி உணர்வை, உணர்ச்சி மூலமாக தெரிவிப்பார். அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது / முடியாது/ வழக்கம் இருக்காது. எனவே உடல் அசைவு / கண்கள் கண்ணீர் / எமோஷனல் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு உணர்ச்சி நன்றி என்று பெயர். உதாரணம் குழந்தைகள்.

4. சிலர் நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதே சமயம் வார்த்தைகளால் சொல்வார்கள். இதற்கு மன - வாய் நன்றி என்று பெயர். 

5. சிலருக்கு நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதேசமயம் உணர்ச்சியாகவும் வெளிப்படுத்துவார்கள். அதே சமயம் வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். இதற்கு மன - வாய் - உணர்ச்சி நன்றி என்று பெயர். இது மிக மிக மிக சிறந்த குணம்.

இருப்பதிலேயே இந்த குணம் தான் மிக மிக சிறந்தது. தயவுசெய்து இதுபோல் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. சிலர் ஆதாயத்திற்காக நன்றி உள்ளது போல் நடிப்பார்கள். இவர்களுக்கு மனதில் நன்றி உணர்வு இருக்காது. ஆனால் வாய் மூலமாக நன்றி சொல்வார்கள். சிலர் உணர்ச்சியை கூட நடிப்பால் காட்டுவார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதற்கு நடிப்பு நன்றி அல்லது போலி நன்றி என்று பெயர்.

7. விமானத்தில் பயணம் செய்து இறங்கும் பொழுது பணிப்பெண் உங்களிடம் நன்றி கூறுவார்கள். இது கடமை நன்றி. 

வியாபாரத்தில் / கஸ்டமர் கேரில் / ஹோட்டல் ரிசப்ஷனில் / OFFICIAL MEETING ல் / அரசியலுக்காக / வாங்கும் சம்பளத்திற்காக. ECT.... நன்றி கூறுவது கடமை நன்றி என்று பெயர். OFFICIAL THANKS.

குறிப்பு : 

1. வாயில் மட்டும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் மனதிலும் நன்றியை உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்ச்சி மூலமாகவும் நன்றியை தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

2. மனதிற்குள் மற்றும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களிடம் நன்றி உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். 

நீங்கள் வாயைத் திறந்து நன்றி சொல்லவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. மனதிலும், உணர்விலும், உணர்ச்சியிலும், வார்த்தைகளிலும் நன்றி சொல்லும் நபர்கள் பெருமைப்படுங்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

4. தயவுசெய்து நன்றி உணர்வை போலியாக, நடிப்பாக பயன்படுத்தாதீர்கள். இது கேவலம். 

இது போன்ற நபர்களிடம் தயவு செய்து உஷாராக இருங்கள். போலியாக நன்றி சொல்லும் நபரை நம்பாதீர்கள். எந்த நேரத்திலும் நம்மை கவுத்து விடுவார்கள்.

5. கடமைக்காக நன்றி சொல்லும் நபர்கள் இனிமேல் அதை மனதார சொல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் தன் கடமையை செய்தால் கூட நன்றி சொல்லலாம். ஏன் நமக்கு உபத்திரவம் செய்யாத நபருக்கு கூட நன்றி சொல்லலாம். உதாரணமாக மருத்துவர் / செவிலியர் / பேருந்து ஓட்டுனர் / ஆட்டோ ஓட்டுனர் / சர்வர் / கடைக்காரர் /பிளம்பர் / எலக்ட்ரீசியன் / அரசாங்க அதிகாரிகள் / நண்பர்கள்/ குடும்ப உறுப்பினர்கள் / சோந்த காரர்கள் / சக ஊழியர்கள் / குப்பை அள்ளுபவர்கள்/ உங்கள் வீட்டு வேலைக்காரர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்கிறோம் பிறகு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம்!! பின்னர், ஓட்டுநருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது ஓட்டுனருக்கு அவர் செய்த கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு சமைத்த அம்மாவுக்கு அல்லது மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த எந்த இடத்தில் முடியுமோ எல்லா இடங்களிலும் நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் வாங்கும் போதெல்லாம் தொழிலாளி முதலாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் கொடுக்கும் போதெல்லாம் தொழிலாளிக்கு முதலாளி நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இப்பொழுது உயிரோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி உணர்வு என்பது ஒரு அருமையான குணம்.

இது எந்த அளவுக்கு நம்மிடம் உள்ளதோ நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வரும். நிம்மதியாக வாழ்வோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் ஒழுங்காக, பாசிட்டிவாக நடந்து கொள்வார்கள்.

நன்றி உணவு இல்லாத பொழுது நம் உடலுக்கு நோய்கள் வருகிறது. மனதில் துன்பம் வருகிறது. நம் உடன் இருப்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்கள். பல நேரங்களில் நஷ்டமும் வரும் கஷ்டமும் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் டைரியில் இன்று எந்த எந்த விஷயங்களுக்கு, யார் யாருக்கு கடமைப்பட்டு உள்ளீர்களோ, அவர்களுக்கு நன்றியை எழுதி விட்டு தூங்குங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

நன்றி உணர்வு என்பது ஒரு சாதாரண மனித குணம். இதை கட்டுரை எழுதி / வகுப்பு எடுத்து / உதாரணங்களை கூறி புரிய வைக்க வேண்டும் என்ற நிலை சிந்திக்க வேண்டியது. 

எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ. வார்த்தையில் / நேரடியாக / WHATSAPP / E MAIL / TELEGRAM / SMS / CALL / INSTAGRAM / LETTER பயன்படுத்தி நன்றியை பரிமாறலாம்.

நன்றி உணர்வு. நமக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

என்னையும் மதித்து, நான் எழுதும் கட்டுரையை படிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

தீபாவளிக்கு மாற்று என்ன?

இப்போதெல்லாம் நமது தமிழினக் குடும்பங்களில்
நாம் கொண்டாடும் தீபாவளி நரகாசுரன் சம்பந்தமான மூட தீபாவளி அல்ல! 

அதே நாளில் நம்முடைய குழந்தைகள் எல்லோரும் பட்டாசு கொளுத்தி புத்தாடை அணிகிறார்கள் அவ்வளவுதான்!

மேலும், பழக்கத்தில்/புழக்கத்தில் வந்துவிட்ட அந்நிய பேண்ட் சூட் கோட்டு போன்றவற்றை உடனே சட்டென பிடுங்கிவிட முடியாது; அதற்கான மாற்று வைக்கப்பட வேண்டும்! அதுதான் நியாயம்! சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சம்+ ஏழைத் தொழிலாளர்கள் வேலை பார்த்து பிழைக்கிறார்கள்! 

அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் நமக்குள் நாம் செய்து கொள்ளும் வியாபாரம், வேலை வாய்ப்புகள் யாவும் எண்ணற்றவை!

ஒரு மாற்றுப் பண்டிகையை நாம் ஏற்பாடு செய்துவிட்டு தீபாவளி என்ற பெயரை நாம் ஓரம் கட்டி விடலாம்!

அது தமிழினத்தை நடத்திக் கொண்டிருக்கிற பற்பல தலைவர்களுடைய கடமை!

அட! தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய  தமிழ் நிலங்களும் அன்னியர்களிடம் கொள்ளை போய் விட்டன! இனி அவர்கள் சொல்லும் மொழி பேச வேண்டும் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட வேண்டும்...இப்படி வந்த 
கோட்டு சூட்டு பேண்ட் ஷர்ட்டுதான் தீபாவளி!!

தவிர்க்க முடியாதது... மாற்று ஏற்பாடு யார் எப்போது செய்வது? அப்படி செய்துவிட்டு நமது குழந்தைகளிடம் நாம் பேசலாம்!

-YozenBalki 
25th Oct 2022

🥸🥸