இன்னைக்கு என்னமோ இந்து சனாதன தர்மம் பற்றி ரொம்ப பெருமையா பீத்திக்கிறானுங்க!!
(இதையெல்லாம் ஒழித்தது முற்போக்கான சில வெள்ளையர்கள், அதற்குப் பிறகு வந்த நமது நீதிக் கட்சி, அதற்கு பின் வந்த நம் பெரியார் இயக்க சிந்தனைகள் தாம்!
தந்தை பெரியார் அவர்கள் இதே திருவாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவே கூடாது, நடந்தால் தீட்டு, என்ற கொடுமையை எதிர்த்து வைக்கம் போராட்டம் நிகழ்த்தி வெற்றி கண்டவர், என்பதும் நினைவு கூறத்தக்கது!)
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை (மாராப்பு) அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
ஆக, இவர்கள் எல்லாம் மார்பகத்தை மூடாமலே எப்பொழுதும் இருக்க வேண்டும், பொது இடங்களில் வேலை பார்க்க வேண்டும் என்ற அநீதியான சட்டம் இருந்தது! ஒருவேளை அதில் ஒரு அழகிய பெண் இருந்தால் அந்த பெண்ணை மணமுடிக்கும் அல்லது வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த பெண்ணுக்கு மட்டும் சிறப்புரிமை வாங்க வேண்டும் என்றால் ம*** வரி கட்ட வேண்டும்! Breast Tax!!
அப்படி மு*** வரி கட்டாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு!
ஆதாரம்:
https://en.m.wikipedia.org/wiki/Breast_tax
இது ஏதோ மன்னர் காலத்தில் மட்டும் போடப்பட்ட சட்டமல்ல; ஈராயிரம் வருடங்களாக இந்த நாட்டில் இருந்த கொடுஞ்சட்டமே ஆகும்!
அந்த 18 சாதி பெண்கள் யார் யார் அறிவோமா?
1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)
4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.
5) இடையர் (கோனார்).
6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
😎 சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.
9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.
10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.
11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.
12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.
13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.
14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.
15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.
16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.
17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.
18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.
மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ, அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலை, இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என வஞ்சகமாக அறிவித்திருக்கிறது.
மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து, முன்னேற விடாமல் தடுப்பதற்கு இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனால்தான், "சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமான குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது; ஒலிக்கட்டும்!
-From Twitter Friends