Translate this blog to any language

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள் 1000 தெரியுமா?

நாம் உண்ணும் அரிசி வகை என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நம்மில் பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்! 

மிகவும் முக்கியமான இரகங்களான, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி இவை யாவும் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை தெரியுமா?

மேலும், நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசியானது பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவென தின்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் அத்தியாவசிய வகைகளில் ஒன்றுதான் நெல். பாரம்பரிய நெல் சாகுபடி சில வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும். நமது பாரம்பரிய உணவு அரிசி அதிக ஆற்றலை அளிக்கிறது, உடல் பருமன், புற்றுநோய், அல்சைமர் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. 

செரிமான குணங்கள்:
நன்கு சமைத்த அரிசியில் 68% நீர், 28% கார்போஹைட்ரேட், 3% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது.

அத்துணை சிறப்புகள் பெற்ற அரிசியில் இன்று நாம் முழுக்க முழுக்க பாலிஷ் செய்துவிட்டு சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். 

அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்த்து விடாமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ 
திரு. நம்மாழ்வார் அய்யா கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. 

நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

தமிழகத்தில் இப்போதும் பலர் உங்களுக்காக அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகின்றனர்.

Thooyamalli Rice – Traditional Rice - Gramiyum  https://gramiyum.in

The nine traditional rice varieties of Tamilnadu - UlaMart https://www.ulamart.com

Traditional Rice: B&B Organics https://bnborganics.com

Buy Organic Traditional Rice Online https://www.thanjaiorganics.com

Buy Organic Rice online https://www.ulamart.com

தற்போது அமேசானில் கூட கிட்டத்தட்ட இவை எல்லாமே கிடைக்கிறது!
www.amazon.in 
www.amazon.com

சரி போகட்டும்!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள் இவை:

மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
 பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்

அரசர்களின் அரிசி:

"கறுப்பு கவுனி" அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி

கல்லுண்டை
முற்றின சம்பா
சேலம் சம்பா
மரத்தொண்டி
சிவப்புக்கவுனி
இலுப்பைப் பூச்சம்பா
திருப்பதி சாரம்
சிவப்புக் குருவிக்கார்
சண்டிக்கார்
குள்ளக்கார்
அனந்தனூர் சன்னம்
கைவரச்சம்பா
ஒட்டடையான்
பனங்காட்டுக் குடைவாழை
கொச்சின் சம்பா
பொன்னி
கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

கள்ளிமடையான்
 காட்டுச்சம்பா
 மாப்பிள்ளைச் சம்பா
 சிறுகமணி சம்பா
 சண்டிகார்
 நீலம் சம்பா
 மடுமுழுங்கி
 சேலம் சன்னா
 பாசுமுகி
 காலா ஜீரா
 கைவரச் சம்பா
 சிங்கார்
 சித்த சன்னா

மாப்பிள்ளை சம்பா

 வைகுண்டா
 தீகார்
 சன்ன சம்பா
 முற்றின சம்பா
 ராஜமன்னார்
 மிளகுச் சம்பா
 ரத்தசாலி
 பிசினி
 கொத்தமல்லிச் சம்பா
 வாழைப்பூ சம்பா
 பொலிநெல்
 பால் குடைவாழை
 காட்டுப்பொன்னி
 ராஜயோகம்
 யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா
 ராம ஜடாலே
வாலன் சம்பா
 இரவைப்பாண்டி
 ரசகடம்
 மரநெல்
 துளசி வாசனை சம்பா
 சீரகச் சம்பா
 காட்டுயானம்
 தூயமல்லி
 கல்லுண்டைச் சம்பா
 கண்டசாலி
 கந்தசாலா
 சிவன்சம்பா
 கலர்பாலை
 சீரகச் சன்னா
 ஒட்டடம்
 அனந்தனூர் சன்னம்
 பச்சை பெருமாள்
 கருத்தகார்
 கட்டச்சம்பா

செம்புளிச் சம்பா
 காலா நமக்
 சூரக்குறுவை
 கருப்பு சீரகச்சம்பா
 ராமஹல்லி
 குருவா
 கேரள சுந்தரி
 வெள்ளசீரா
 பாராபாங்க்
 காலாபத்தி பிளாக்
 மாலாபத்தி
 வடக்கன் சீரா
 தோடா பெருநெல்லு
 ஜீமாய்நாடு
 ஜீரக சாலா
 அரிமோடன்
 ஆனமோடன்
 பாளியாறல்
 குரியாகயாமா
 காலாச்சி பிட்

மரத்தொண்டி
 செந்நெல்
 கரிகஜனவள்ளி
 வெள்ளைக்கார்
  ரக்தாசுடி
 ராணிசால்
 நாசர்பாத்
 புல்பாப்ரி
 தங்கச் சம்பா
 மஞ்சள் பொன்னி
 அறுபதாம் குறுவை
 கொடகுவிளையான்
 துளுநாடான்
 சன்ன நெல்
 விஷ்ணுபோகம்
 ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
 சௌபாக்கி
 ஆம்பிமோகர்
 ஹரித்திகத்தி
 எளாய்ச்சி
 பாசுபதி
 தில்கஸ்தூரி

நமது தமிழக அரிசி வகைகள் யாவும் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளன. நம்மிடம் 5000 அரிசி வகைகள் அந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது கிட்டத்தட்ட 200 ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் சேமிக்க முடிந்தது. இந்த 200 வகைகளும் அழிந்துவிடக் கூடாது. 

குறைந்த பட்சம் நம் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க இத்தகு அரிசி இனங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டு அதை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்கு உண்டு.

மேற்படி அரிசி வகைகளை இணையம் மூலம் தேடி கண்டுபிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ ஒரு கிலோவாவது ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் நாம் மேற்கொண்டால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அத்தகு அரிசி வகைகளை, கைவிடாமல் விளைவித்துக் கொண்டு வருவார்கள்! 

இல்லை என்றால் அந்த மிச்ச சொச்சம் இருக்கிற அரிசி வகைகளும், நம்மிடமிருந்து அழிந்து போய்விடும்! அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதை காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்!

இது பற்றி நமது பற்பல அரசியல் தலைவர்களும் தமிழக அரசாங்கமும் கூடிக் கலந்து பேசி "தமிழர் பாரம்பரிய நெல் ரகங்கள் காப்பாற்றும்" ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் மிக்க  அன்புரிமையுடன் கோருகிறேன்!

-YozenBalki 

(இவை இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்கள்! இது போன்ற நம் மரபு சார்ந்த செய்திகள், கடல் கடந்த நாடுகளில் வாழும் நம் தமிழின குடும்பங்களிலும் இது பரவ வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறேன்!)

புதன், 27 செப்டம்பர், 2023

நீதிபதி சந்துருவைப் போல வாழுங்கள்!

1996ல் எனக்கு திருமணம். 
அது சாதி மறுப்புக் காதல் மணம்.

அவர்கள் பெயர் பாரதி. 
பச்சையப்பன் கல்லூரியில் 
அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். 

பாரதியின் வருகைக்குப் 
பிறகுதான் மறுபடியும் 
எனக்குக் குடும்பம் வந்தது. 
பொறுப்புகளும் வந்தன. தான் தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. 

எங்களுக்கு 
கீர்த்தி என்று ஒரு மகள். 

பொருளாதார ரீதியாக 
ஓரளவு நல்ல நிலை 
என்றாலும் 
பணத்துக்காக எந்த வழக்கையும் 
நான் எடுத்து நடத்தியதில்லை. 

ஏழைகளுக்காகவே அதிகம்
வாதாடி இருக்கிறேன்.

இந்நிலையில் 
அப்போது நீதிபதியாக இருந்த 
வி.ஆர்.கிருஷ்ணய்யர், 
என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். 

அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக 
விண்ணப்பித்தேன். 
'இவர் தீவிரவாதிகளுக்கான 
வக்கீல்’ என்று சொல்லி 
அப்போது தமிழக 
முதல்வராக இருந்த ஜெயலலிதா 
எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.

பிறகு 2006 ஆம் ஆண்டில்
 ‘வழக்கறிஞர் என்பது தொழில். 

யாருக்காகவும் 
யாரும் வாதாடலாம். 
இதைக் காரணம் காட்டி 

நீதிபதி பொறுப்பைக் 
கொடுக்காமல் இருக்க முடியாது’ 
என உச்ச நீதி மன்றம் 
சொல்லிய பிறகு 
என்னை நீதிபதியாக நியமித்தார்கள். 

நீதிபதியாக நான் பணியில் 
இருந்த காலத்தில் 

*96 ஆயிரம்*
 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.

இந்தியாவிலேயே 
இவ்வளவு வழக்குகளுக்கு 
யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. 

ஆந்திராவைச் சேர்ந்த 
நீதிபதி ஒருவர், ‘

இந்திய நீதிமன்றங்களின் 

*சச்சின் சந்துருதான்*… 

அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ 
என எழுதியிருக்கிறார்.

நான் அமர்ந்தால் 
எந்த வாய்தாவும் கிடையாது. 
தீர்ப்புதான். 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட 
டிக்டேஷன் செய்வேன். 

*‘சந்துருவுக்கு மட்டும்*
*வாரத்துக்கு 8 நாள்’ என* 
வி.ஆர்.கிருஷ்ணய்யர்*
கிண்டல் அடிப்பார். 

நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் 
காவலர் கொடுப்பது வழக்கம். 

எனக்கு அப்படி யாரும் வேண்டாம் 
என எழுதிக் கொடுத்தேன். 

மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. 

கார் கூட பயன்படுத்த மாட்டேன். 

பெரும்பாலும் 
பஸ், ரயில்தான்.

பதவிக்கு வந்ததுமே 
என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். 

பல சீனியர்கள் இதனால் 
என் மீது கோபம் அடைந்தார்கள். 

கடைசியில் அனைவரும் 
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் 
என வேண்டுகோள் வந்தது. 

எனது மகள் கீர்த்தி 
*பல் மருத்துவராக இருக்கிறார்*. ‘

ஒருவேளை நான் வழக்கறிஞராகி 
சுமாராக இருந்தால்… ‘

என்ன, 

சந்துரு மகளா இருந்துட்டு 
இப்படி சுமாரா இருக்க’ 
என்ற பேச்சு வரும். 
அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ 
என கீர்த்தி சொல்லி விட்டார். 

என் நிழலில் வாழாமல் 
அவர் தன் துறையில் முன்னேறுவது 
மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு, 
என் மனைவிக்கு, 
மகளுக்கு 
எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது 
*கல்விதான்.*

 எங்களுக்கு மட்டுமில்லை… 
என் சகோதரர் களுக்கும் 
சகோதரிக்கும் 
கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது 
*இந்த கல்வி மட்டும் தான்.*

நாம் மேற்கொள்ளும் பணியை 
எந்த அளவுக்கு சின்சியராக 
மக்கள் நலன் சார்ந்து 
செய்கிறோமோ 
அந்தளவுக்குச் சமூகத்தில் 
நமக்கு பெயர் கிடைக்கும். 
என் வாழ்க்கை 
எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.

ஓய்வுக்குப் பிறகு 
இன்றும் தினமும் படிக்கிறேன். 
படித்த நூல்களை லாரியில் 
ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். 

இப்போது நடைபெறும் 
வழக்குகள் சார்ந்து 
என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். 

அந்த வகையிலேயே 
சமீபத்தில் 
மிசாவில் 
திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை 
என அவதூறு கிளம்பியபோது 

அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். 

*மனித உரிமைகளுக்காகவும்* 
*ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்*
 என்றும் குரல் கொடுப்பேன்!

-நீதிபதி சந்துரு

கூடுதலாக அவர் 
இந்தியமாணவர்சங்கத்தில் 
SFI யில் செயல்பட்டவர் 
இடதுசாரி எண்ணம் கொண்டவர்.
 
நன்றி: 
சக்கரம்.காம்

Courtesy: Whatsapp University !!