Translate this blog to any language

திங்கள், 25 நவம்பர், 2024

நீ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்! Run Run Run!!



Every morning in Africa, a deer wakes up
It knows it must run faster than the fastest cheetah or it will be killed.

Every morning a lion wakes up
It knows it must outrun the fastest gazelle or it will starve.

It doesn't matter whether you're a Cheetah or deer; when the sun comes up, you'd better be running.

Translation: 😂 😁 ❣️ 😁❣️ 

ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு காலையிலும் ஒரு மான் எழுகிறது,
அது வேகமான சிறுத்தையை விட வேகமாக ஓட வேண்டும்; இல்லை என்றால் அது கொல்லப்படும்.

ஒவ்வொரு காலையிலும் ஒரு சிங்கம் எழுகிறது,
அது வேகமாக ஓடும் மானை விட வேகமாக ஓட வேண்டும்; இல்லை என்றால் அது பசியால் உயிரிழக்கும்.

நீ சிறுத்தையாக இருக்கிறாயா அல்லது மானாக இருக்கிறாயா என்பது முக்கியமில்லை;
சூரியன் உதிக்கும் போது நீ ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

-இணையத்தில் எங்கோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது! அதான் இங்க போட்டு இருக்கேன்! 

🌿🌿☀️☀️



புதன், 13 நவம்பர், 2024

"தூங்கா நகரம்", மதுரை: ஏன்?

மதுரை “தூங்கா நகரம்” என அழைக்கப்படுவதற்குக் காரணங்கள் என்ன?


“#தூங்கா_நகரம்” என்பது இரவு-பகல் வேறுபாடின்றி எந்த நேரமும் (24*7) செயற்பட்டுக் கொண்டிருக்கும் நகர் என்ற பொருளில் அமையும். 

இன்று நேற்றல்ல, மதுரையானது #சங்க_காலம்_முதற்கொண்டே ‘தூங்கா நகரம்’ என்ற பெயரிற்கு ஏற்பவே தொழிற்பட்டு வந்துள்ளது. 

ஒரு சங்ககாலப் பாடல் (மதுரைக் காஞ்சி 425) இருக்கு

“மழைகொளக் குறையாது புனல்புக மிகாது கரைபொருது இரங்கு முந்நீர் போலக் கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி” -(மதுரைக்காஞ்சி 425)

மேற்குறித்த பாடலில் மதுரைச் சந்தையானது நாளங்காடி எனக் குறிக்கப்படுவதனைக் காணலாம். 

நாளங்காடி என்ற சொல்லானது #பகற்_சந்தையினையே குறிக்கும். 

#நாளங்காடி - #அல்லங்காடி (இரவுச் சந்தை) என்ற வேறுபாடு இருந்ததனாலேயே #நாளங்காடி’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

#அங்காடி என்ற பொதுப் பெயரே பயன்படுத்தப்பட்டிருக்கும். 

இதோ இன்னொரு பாடலில் அல்லங்காடி பற்றி நேரடியாகவே குறிப்பிடப்படுகின்றது.

அல் (இரவு)+ அங்காடி (சந்தை)= அல்லங்காடி (இரவுச் சந்தை).

“பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே
அல்லங்காடி அழிதரு கம்பலை” - (மதுரைக்காஞ்சி543-44)
சிலப்பதிகாரத்திலும் மதுரையின் சிறப்பு பேசப்படுகின்றது.

இவ்வாறு 2000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்திலேயே #மதுரை_தூங்கா_நகரமாகவே”காட்சியளித்துள்ளது.

இன்றும் மதுரையின் சில பகுதிகளில் பகல்- இரவு வேறுபாடு தெரியாதளவிற்கு வணிகம் நடைபெறும் பகுதிகள் உண்டு. 

எடுத்துக் காட்டாக, சிம்மக்கல்பகுதியில் இரவு நேரத்தில் திறக்கப்பட்டு, பகலினை விட பரபரப்பாக இயங்கும் தேநீர் கடைகளைக் காணலாம். 

இங்கு பழங்களை கொள்வனவு செய்ய வணிகர்கள் இரவு நேரத்திலேயே பெரிதும் கூடுவார்கள். 

#யானைக்_கல்பகுதியில் சில கடைகளிற்கு கதவுகளே இல்லை என்றும், ஏனெனில் அவை #மூடப்படுவதேயில்லை என்றும் கூட சொல்லப்படுகிறது. 

அதே போன்று #கறிமேடு_மீன் சந்தையும் நடு இரவிலேயே பரபரப்பாக இயங்கும். 

இவ்வாறான காரணங்களாலேயே மதுரையானது இன்றும் “#தூங்கா_நகரமாக” விளங்குகின்றது.
வழக்கம் போலவே இதற்கும் ஒரு புராணக்கதை கட்ட மதவாதிகள் தவறவில்லை. 

அதாவது மதுரை மீனாட்சி கண் சிமிட்டாமல் கண் விழித்து மதுரையினை காவல் காப்பதனாலேயே “தூங்கா நகர்” என்ற பெயர் வந்தது என்பதே அந்தக் கட்டுகதை. 

அவ்வாறாயின், ஏனைய ஊர்களிலுள்ள தெய்வங்கள் தூங்கி மக்களை காவல் காப்பதிலிருந்து தவறுகின்றனவா? என்பதனை இவர்கள் விளக்குவதில்லை. 

இது அறிவிற்கொவ்வா கற்பனைக் கதை.

முடிவாக, சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் மதுரை வணிகத்தில் பகல்+இரவு நேரங்களில் சிறந்து விளங்கியமையாலேயே 
‘#தூங்கா_நகர்’ என்ற 
பெயர் பெற்றது.
🌿🌿

Courtesy: எனது ட்விட்டர் தோழர்
சுவர்ணா அவர்கள் 
X தளத்தில் இன்று எழுதி இருந்தார்! 

@swarna718051021