Translate this blog to any language

சனி, 9 ஜனவரி, 2021

தமிழ்: "சும்மா" என்பதில் 15 அர்த்தங்கள்

*சும்மா* இதை படியுங்கள் 
நிச்சயம் நீங்கள் *அசந்து போவீர்கள்* – 
இது தான் தமிழ் மொழியின் சிறப்பு:-

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.*
இவை அனைத்தையும் விட *தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. 
*மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த பீடிகை தொடர்ந்து படியுங்கள் புரியும்,

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

 
அது சரி *சும்மா* என்றால் என்ன? 


அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 


பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*


*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, 

நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..
 
*சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள..

..,*❤🙏❤
Source from
What's up University
With all gratitude to the unknown writer.

திங்கள், 4 ஜனவரி, 2021

என்னைத் தாயாக்கி எனக்கருளி நின்றவளே! (கவிதை)



சின்னதோர் தேவதையே 
சிறுமுகிலே ஓவியமே!

எனக்கென்றே இறைவனவன்
எடுத்துவைத்த பேரழகே!

வண்ணப் பைங்கிளியே
வாசமிகு ரோசாவே!

உன்னை நினைத்திருக்க
உசிரெல்லாம் இனிக்குதடி!

என்னப் பெருந்தவமோ
எப்படிநீ கிடைத்தாயோ!

எண்ணியெண்ணி மருகுகிறேன் 
உள்ளமெலாம் உருகுகிறேன்!

என்னைத் தாயாக்கி 
எனக்கருளி நின்றவளே!

உன்னைப் பெற்றதனால் 
எல்லாமும் பெற்றேன்யான்!

எப்படி உனை சீராட்ட
ஒருமடிதான் உள்ளதடி! 

பெருமையடி உன்னாலே
கண்படுமோ அதனாலே! 

உன்னை எனக்களித்த 
இறைமை நினைந்திருப்பேன்!  

காலமுள நாள்வரையும்
உன்விழிகள் பார்த்திருப்பேன்! 

-YozenBalki
(ட்விட்டரில் ஒரு போட்டி! அதற்கு நேற்று எழுதி அனுப்பினேன் தோழரே! 🌸🌸🙏🙏)