Translate this blog to any language

வியாழன், 18 ஜூலை, 2019

திமுகவுக்கு நாத்திகம் அவசியமில்லை!

திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல!
அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்!
திமுகவின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", எனும் இறைநம்பிக்கை உள்ள கட்சிதான்!


அதன் பிரதான தலைவர்கள் சிலருக்கு, அதிலும் பெரியார் அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இறை நம்பிக்கை கிடையாது! மற்றபடி, திமுகவினரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே நாத்திகர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் அந்த கட்சியில் இல்லை! 

இது பார்ப்பனர்கள் ஒன்று கூடி, இந்துக்களின் ஓட்டை திராவிட முன்னேற்ற கழகம் எடுத்துக்கொள்வதை ஒழிக்க செய்யும் நாடகம்! "திமுகவினர் முழுவதுமே நாத்திகர்களாக இருக்க வேண்டும், அதைச் சொல்லி இந்துத்துவா பிரச்சினைகளை கிளப்பி, திமுகவில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை (90% பேர்) பாஜக பக்கம் தள்ளிக் கொண்டு போக வேண்டும்", என்று உள்ளுக்குள் விரும்புகின்றார்கள்!


அவர்களது சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒரு பன்முகத்துவ மக்கள் இணைந்து இயங்கும் அரசியல் கட்சியில் "ஆத்திக-நாத்திக" பிரச்சினைகளை கிளப்பாமல் இருப்பதுதான் திமுக வளர்வதற்கு வழியாகும்!

அது ஒன்றும், சமூகப் பிரச்சினைகளை மட்டும் பேசும், "ஓட்டு கேட்கும் அவசியமில்லாத", திராவிடர் கழகம் அல்லவே!

திமுக குடும்பங்களில் உள்ள அனைவரும் திமுகவின் கட்சி உறுப்பினர்களும் அல்ல! அட! அவ்வாறு கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஆத்திகவாதிகளாக இருப்பதற்கும் தடை எதுவும் இல்லையே!

இங்கு தந்தை பெரியாரை உளமாற ஏற்றுக்கொள்ள ஆத்திகர்கள் தயங்கவும் இல்லையே! ஒரு வீட்டில் நான்கு குழந்தைகளில் இரண்டு ஆத்திகம், இரண்டு நாத்திகம் என்று இருந்தால் ஒன்றும் குடி முழுகி விடாது! அந்த நான்கு குழந்தைகள் பின்னாளில் நாற்பது கொள்கைகள் மாறுவதும் இங்கு சாத்தியம் தானே?

பார்ப்பனர்கள் செய்யும் இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கும், "நாத்திகர்கள் சிலர் செய்யும் கிண்டல்களுக்கும்", திமுக ஒருபோதும் பலியாகாமல், அது எப்பொழுதும் போல "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", என்ற முறையில் போய்க்கொண்டே இருக்கலாம்!

அதுதான் தமிழகத்துக்கு எப்போதும் நலம் பயக்கும்! 

-பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: