அன்னமும் ஆடையும் இல்லமும் ஈந்துஉயிர்காற்றினை
ஊதினை எந்தையே ஏழையென்ஐயனேஒளியே ஓமெனும்நாதமே
ஒளவியம் தீர்த்தாட்
கொண்டனை
அக துன் அருளே !
*******
முத்தொழில் மூலவர் அத்தொழில் முதல்வ
எத்தொழில் ஏவிட 'இத்தைப்" படைத்தையோ
அத்தொழில் மேவிட வித்தகம் செய்திட
சத்தெனக் கருள்க ஆள்க !
*******
கருவாய் துவங்கி எருவாய் வரையும்
உருவாய் அருவாய் திருமால் மறையே
தருவாய் திருவாய் தருவன வெல்லாம்
நிறைவாய் எம்பணி செய்திடு மாறே !
********
சுடலையின் நடனம் இடுகிற சங்கர
உடலையின் உள்ளொளி சிவசிவ சங்கர
கடலுறை விடமும் பகையும் அங்கற
பிறவாத் தவநிலை சிவசிவ நமசிவ!
********
அன்புரு அன்னைஎந்தை ஆடலின் கூடலண்டம்
பின்புருக்கொண்டும் விண்டும் அகண்டிடுமின்னு மண்டம்
இன்மையில் இருப்பும்தன்மைக் காற்றினில்நெருப்பும் வைத்த
வன்மைஅவ் இறைவ வாழி!
-மோகன் பால்கி