இந்தித் திணிப்புக்கும் இந்தி விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாமர மங்கிகளுக்கு!
டாடா ஸ்கையில் இருந்து ஒரு அம்மணி அழைத்திருந்தார். எடுத்தவுடன் நமஸ்த்தே என்று ஆரம்பித்தார்.
எனக்கு இந்தி மராத்தி தெரியும் என்றாலும் நான் வணக்கம் என்று தமிழில் பதில் சொன்னேன்.
``மே பாலா ஸே பாத் கர்ராகும்..?” என்றார்..
``ஆமா” என்றேன் மீண்டும் தமிழில். சற்றுத் தடுமாறியவர்,
``டாடா ஸ்கைகீ சர்வீஸ்கீ பாரேமே கஸ்டமர்கீ ஜான்காரி ஜானா சாத்தாகும்..”
சொல்லுங்க.. என்றேன்..
’’முஜே ஆப்கீ பாஷா சமஜ்மே நஹி ஆத்தாஹே.. ஆப் இந்தி நஹி ஜான் தே ஹோ..”என்றார். (அம்மணிக்கு நான் பேசும் மொழி புரியலையாம்.. உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்கிறார் )
``எனக்கு இந்தி மராத்தி இங்கிலீஸ்.. ஏன் பிரெஞ்ச் கூடத் தெரியும்.. அல்லது தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் எதுக்கு உங்கக் கிட்ட ஹிந்தியில் பேசணும்.. தமிழ் நாட்டில் உங்க ஓனர் வியாபாரம் பண்றார்.. அப்போ கஸ்டமர் சேவை குறைபாடுகள் குறித்து பேசுவதற்குத் தமிழைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தமிழர்களின் துட்டு மட்டும் வேணும்.. ஆனா நாங்க உங்களுக்காக இந்தி பேசணுமா.. தேவைனா நீங்க தமிழ் படிச்சுட்டு வந்து எங்களுக்குச் சேவை செய்யுங்க.. இந்த கஸ்டமர் ரொம்ப கேவலமா திட்டுறான்னு இதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி உங்க முதலாளிக்கு அனுப்புங்க.. என்று 'மராத்தி'யில் சொல்லி விட்டு வைத்தேன்.
அநேகமாக போனை வைத்தப் பிறகு.. ``இந்த தமிழனுங்க எவ்வளவு மொழி வெறி பிடிச்சவனுங்களா இருக்கானுங்க பாருங்க.. ”என்று பக்கத்து சீட் தோழியிடம் திட்டியிருக்கக் கூடும்..
இது முதல்முறை அல்ல.. சமீபமாக கவனிக்கிறேன்.. ஏர்டெல்லில் ஆரம்பித்து இந்த வட ஹிந்திய கும்பல் தமிழகத்தை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் தற்போதைய கும்பலின் வரவுக்குப் பிறகு இந்தித் திணிப்புகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியில் அரசு விளம்பரத்தை இந்தியில் வெளியிடும் அளவுக்கு இவர்களின் அட்டகாசம் இருக்கிறது.. உங்களுக்கும் யாராவது இப்படி இந்தியில் பேசினால் தயங்காமல் தமிழிலே பதில் கொடுங்கள். இந்தி தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள்.
நிறைய பாமர மங்கிகளுக்கு திணிப்புக்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன..
உலகத்தின் அத்தனை மொழியையும் கற்றுக் கொள்ளலாம். அது நம் தேவையைப் பொறுத்தது.
தமிழ்நாட்டுக்கு வேலைக்காக படையெடுத்து வருகிறார்களே வட இந்தியர்கள்.. அவர்கள் என்ன எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்காமல் வளர்ச்சியை தடுத்து விட்டார்கள் என்றா புலம்புகிறார்கள்.. வாழ்தலுக்கு அவசியம் என்றால் ஒருவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்வான்..
திருநெல்வேலிக்காரன் பேசுவது போல் சுத்தமாக தமிழ் பேசும் சேட்ஜிக்களை எனக்குத் தெரியும்.. அவர்கள் தமிழ் சினிமாவில் காட்டுவது போல் நிம்பில்க்கு என்றெல்லாம் இப்போது பேசுவதில்லை..
அதேப்போல் இங்கிருந்து வேலைக்கு வட இந்தியா போகக் கூடியவர்கள் அந்த மொழியைக் கற்றுக் கொள்வார்கள்..
ஆனால் இந்தியாவின் சிறப்பான பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில் ஒற்றை மொழியாக இந்தியை திணிப்பதையோ இந்தியை தேசிய மொழியாக்குவதையோ அனுமதிக்க முடியாது..
இந்தி மொழி உயர்ந்தது.. நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று திணித்தால் தமிழர்கள் மீண்டும் மீண்டும் மிதித்து அனுப்புவோம்!
ஏனெனில் அடுத்தவர்கள் மீது உங்கள் மொழியை திணிப்பது தான் மொழிவெறி.. அதை எதிர்ப்பது அல்ல!
பகிர்வு
MTR
......
From a WhatsApp unknown friend!