Translate this blog to any language

திங்கள், 15 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி? Ways to escape from Dengue fever!


டெங்கு, பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: 

டெங்கு காய்ச்சலில் தப்புவது எப்படி?




எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது.ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.



டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.



டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்கின்றனர் !

சித்த, ஆயுர்வேத மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன.

நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.

சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
____________________________________________________________

எனது அணுக்க நண்பர் ஒருவர் தன் 17 வயது மகனுக்கு டெங்கு சுரம் வந்து ரத்தத் தட்டணுக்கள் குறைவு ஏற்பட்டதையும், பிறகு அதனை பப்பாளி மரத்தின் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு அரை தம்ளர்/ இருவேளை வீதம் இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்து அதிசயப் படும்படி குணப்படுத்தியதையும் அடிக்கடி குறிப்பிடுவார். மூன்றாம் நாளே அவரது மகனுக்கு இலட்சக்கணக்கில் ரத்தத் தட்டணுக்கள் கூடியதைக் கண்டு அவரது குடும்ப மருத்துவரே ஆச்சர்யப் பட்டு அந்த வழிமுறையை கேட்டுக் குறித்து வைத்துக் கொண்டாராம்.

Accordingly it is raw papaya leaves, 2 pcs just cleaned and pound and squeeze with filter cloth.
You will only get then one tablespoon per leaf. So two tablespoon per serving once a day is enough. Do not boil or cook or rinse with hot water, it will loose its strength. Only the leafy part and no stem or sap. It is very bitter and you have to swallow it. But it works.
மேலதிகச் செய்திகளுக்கு: http://www.herbalpapaya.com/blog/increase-platelet-count

-Yozen Balki
________________________________________________________________

ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?


உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.

1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.

ஆதாரம் :http:/www.delhihomeo.com/php/treatment/dengu-pre.htm.

நண்பர்களே! அச்சம் வேண்டாம்!

பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில்நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்க முடியும்! நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்த வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.

எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது! மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க வீண் பயமும் பீதியும் எதற்கு? டெங்கு சுரத்தை முறியடிப்போம்!

Web source:

திங்கள், 8 அக்டோபர், 2012

அணு உலையா? ஐயோ வேண்டவே வேண்டாம்! ? We don't need Nuke danger!



நண்பர்களே! 

அணு உலைகளால் கிடைக்கும் அபாய- மின்சாரம் நமக்குத் தேவை இல்லை!
அணுஉலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட கோரமான பேராபத்துக்கள்
உலகில் பல!

எனினும், மக்கள் விரோத அரசுகள் மக்களுக்கும், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கும் அதில் துளியும் விருப்பம் இல்லாத போதும், சில பல மறைமுக சுயநல காரணங்களால், அணுஉலைகளை ஏமாந்த மக்களின் தலையில் கட்டுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கின்றன. இத்தனைக்கும், அணுஉலைகள் வழியாக வரும் 'அபாய'-மின்சாரம் நமது நாட்டில் 4%-க்கு மேல் கிடையாது. மிச்சமுள்ள 96% 'அபய'- மின்சாரம் அனல், புனல், காற்று, சூரிய ஒளி போன்ற பிற வழிகளில்தான் நமக்குக் கிடைக்கிறது.

மேலும், அணுஉலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகள் பத்திரமாக பலநூறு ஆண்டுகள் சேமித்துவைக்கப் படவேண்டும். இந்தியர்கள் நாம் அதை ஒழுங்காய்ச் செய்வோமா-நம்பிக்கை உள்ளதா ? தெருக்களில் இருக்கும் குப்பைக் கழிவுகளையே நாம் ஒழுங்காய்க் கையாளுவதில்லையே! அப்படியிருக்க அணுக்கழிவுகளில் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அது பல லட்சம் வருடங்களுக்கு கதிர்வீசும் அபாயமும், அதனால் புல்பூண்டுகள் கூட அழிந்துபோகும் நிலையும் உள்ளதை நாம் தெளிவாய் அறியவேண்டும்! 

எதையும் கவனமாய் அழகாய்ச் செய்யும் ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளே அணு உலைகளால் மரண அடிபட்டுக் கிடக்க, ஒன்றையும் உருப்படியாய் இதுவரை செய்யாத நமது அரசுகளின், மற்றும் நம்மைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு உள்நாட்டுத் தொழிலதிபர்களின் உதட்டளவு உறுதிமொழியை யார் நம்புவது? (ஒன்று தெரியுமா? புக்குஷிமா பேரழிவுக்குப் பிறகு ஜப்பான் பயந்துபோய் தனது அணு உலைகளை இயங்கவிடாமல் நிறுத்தி வருகிறது)

http://www.youtube.com/watch?v=SUy-iPvd4lc

சரி! ஒருவேளை ஏதேனும் அப்படி கூடங்குளத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டால் பாதிக்கப் படும் பொது மக்களுக்கு இழப்பீடு தருவது பற்றிகூட இதுவரை மத்திய அரசு பேச தயாராயில்லையே! இது என்ன நியாயம்?

ஆக, அப்படிப்பட்ட அபாயமான அணுஉலைகளை நல்லறிவும் நியாய உணர்வும் உள்ள நாம் எல்லோரும் நம் குழந்தைகளின்/சந்ததிகளின் நலன் கருதி பலமாய் எதிர்க்கவேண்டும். இதில் தேவையில்லாமல், 'மதம்' அது-இது என்று வீண் பேச்சு பேசி குழப்புவது அறியாமை ஆகும். சமீபத்தில் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் மற்றும் கேஜ்ரிவால் போன்றோர் இதேபோன்று ஊழலை எதிர்த்த போதும், அவர்களை ஒரு காங்கிரசை எதிர்க்கும் இந்துமத வெறியர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று விமர்சனம் செய்து அவர்களது பொது-நோக்கத்தை கொச்சைப் படுத்திப் பேசியதை நினைத்துப் பாருங்கள். பொது விஷயங்களை நாம் எப்போதும் பொதுவாகவே பார்க்கவேண்டும். அதில் மதச் சாயம் பூசக்கூடாது. ஏனென்றால்...

அணுஉலை விபத்து ஏற்படும்போது எந்த மதத்தின் கடவுளும் அந்த மதத்துக் காரர்களை மட்டும் தனியாக வெளியில் எடுத்து கைதூக்கி காப்பாற்றிவிட மாட்டார்? அப்படி ஏதாவது உலக வரலாற்றில் நடந்துதான் இருக்கிறதா? 
மத விஷயங்கள் வேறு, பொது விஷயங்கள் வேறு!



அழிவு என்று ஒன்று வரும்போது அது எல்லோருக்கும்தானே வரும்? வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள், காட்டுத்தீ, கொள்ளைநோய்கள் என்று வரும்போது அது 'ஜாதி-மதம்' பார்ப்பதில்லை. நாம் எல்லோரும்தான் மொத்தமாக பாதிக்கப் படுகிறோம்! இதுவும் அதுபோலத்தான். நம் எல்லோரின் பாதுகாப்பு பற்றித்தான் இந்தப் போராட்டம்.

வெடிக்கும்போது ஏற்படும் விபத்தினால் பல கிலோமீட்டர் தூரம் கிராமங்கள் நகரங்கள் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் கிடக்க, கடலில் அணுஉலையின் நச்சு கலந்துவிட்டால் அது உலகம் முழுவதும் சிறுக சிறுக பல லட்சம் வருடங்களுக்குப் பரவி உயிர்களைக் கொல்லாதா? இது போன்ற விஷப்-பரிட்ஷை நமது சந்ததிகளுக்குத் தேவையா?
________________________________________________

சில கேள்விகளுக்கு பதில்கள்:

திடீர் போராட்டம் ஏன்?
பதில்: கூடங்குளம் அணு உலைக்கு பூஜை போட்ட காலம் தொட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள புக்குஷிமா (Fukushima Nuclear Power Plant) அணு உலை போன வருடம் 11th March 2011-இல் சுனாமி அலையால் பெரும் அழிவை ஏற்படுத்தியதற்கு பிறகு அதைக்கேள்விப்பட்ட கூடங்குளம் அதன் சுற்றுப்புறத்து மக்கள், மேலும் பயந்து போராட்டத்தைத் தீவிரப் படுத்திவிட்டனர். ஒரு வருடத்துக்கும் மேலாக தற்போது நடந்துவரும் தொடர் போராட்டம் வழியாக அணு உலை எதிர்ப்பு நிலை என்பது இப்போதுதான் உலகத்தின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அத்தனை கோடி ரூபாய் வீணாகி விட்டதே?
பதில்: யாரைக் கேட்டு ஆரம்பித்து இப்படி வீணாக்குகிறீர்கள்? முன்பு எதிலுமே அப்படி அமைச்சர்கள்நீங்கள் மக்கள் பணத்தை வீண் ஆக்கியதில்லையா? வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட பணம், உள்நாட்டு மெகா கொள்ளைகள், தவறான பொருளாதாரக் கொள்கைகள், இதிலெல்லாம் வீணானது மக்கள்-எங்களது வரிப்பணம்தானே? எங்கள்பணம் வீணாவது பற்றி உங்களுக்கு என்ன திடீர் அக்கறை? "கணக்குப் பிள்ளைகளுக்கு "போலிக் கரிசனம் எதற்கு? எங்களின் உயிரைவிட எங்களது வரிப்பணம் வீணாவதொன்றும் பெரிதில்லை என்று 'கணக்குப் பிள்ளைகள்' உங்களுக்குத் தெரியாதா? எங்கள் சந்ததிகளின் "உயிரை அடகு வைத்து" மின்சாரம் எடுத்து, அதை உடனே இப்போது எங்களுக்குத் தாருங்கள் என்று நாங்கள் உங்களிடம் எப்போதாவது கையேந்திக் கெஞ்சினோமா? 
____________________________________________

எனவே நண்பர்களே! உங்களுக்காகவும் நம் எல்லோருக்காகவும் போராடும் சிற்சில போராட்டங்களையாவது, அவை பொதுவான போராட்டம் என்று உங்கள் இதயத்தால் அறியுங்கள்! நியாயத்துக்காக போராடும் அவற்றில்எல்லாம் 'மதம்' 'ஜாதி' என்று வழக்கமான அசிங்கமுத்திரை குத்தி, அதுபோன்ற போராட்டங்களை நசுக்கப் பார்க்கும் தீயசக்திகளுக்கு நீங்கள், அதில்உள்ள சூதறியாமல் ஒருபோதும் துணை போகாதீர்கள்.

என்றைக்குமே தர்மம்தான் வெல்லும்!

-யோஜென் பால்கி 
________________________________________

Thousands of fishermen from 40 villages around the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu have surrounded the area from about 500 metres in the sea and are shouting slogans to protest against the plant. This is a token seige of the plant, since they will not be allowed by policemen to get any closer. Activist SP Udhayakumar, who is spearheading the anti-plant protests, today said in their next action, protestors would lay siege to the Tamil Nadu Assembly in Chennai on October 29, 2012.

http://www.youtube.com/watch?v=iZnh8EWaluo