உங்கள் குடும்பத்திலோ அல்லது நம் வேறு யார் குடும்பத்திலோ கூலி வேலைக்கு போகிற இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா?
அப்படி இல்லாத இளைஞர்கள் எப்படி தமிழகத்தின் ஹோட்டல்களில் துணிக்கடைகளில் தள்ளுவண்டி கடைகளில் கூலி வேலைகளில் இருக்க முடியும் சொல்லுங்கள்!!
கடந்த நூறு வருட திராவிடர் இயக்க ஆட்சிகளானது கல்வியில் நம்முடைய இளைஞர்களை மேல் நோக்கி அவர்களை அதிகாரிகளாக உயர்த்தி இருக்கிறது!
வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல கூலி வேலைக்கு தமிழ்ப் பிள்ளைகள் கிடைக்காததால் படிப்பறிவற்ற வடநாட்டுப் பிள்ளைகள் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர்!
இருப்பவன் இல்லாதவனுக்கு கூலி தருகிறான்!
இதில் என்ன பொருளாதார கூந்தல் வந்து தமிழகம் பின்தங்கி விடும்?
அப்படி பார்த்தால் வெள்ளைக்காரனுடைய அச்சடித்த டாலருக்காக இங்குள்ள இந்தியர்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் எல்லாமே அல்லும் பகலும் வேலை பார்க்கின்றனரே!
அவர்கள் எல்லாம் தன்னுடைய பொருளாதாரத்தை இழக்கின்றனரா... அல்லது வளர்கின்றனரா?
இப்படி பொத்தாம் பொதுவில் பேசி ஏதோ ஒரு வகையில் தமிழ்நாட்டை குறைத்து மதிப்பிட்டு அதன் வழியாக திமுக ஆட்சி சரியில்லை என்று சொல்ல வருவது தான் அவாளின் கெட்ட உள்நோக்கம் போல தெரிகிறது!
நமது தமிழ் பிள்ளைகள் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு மகிழ்ச்சியோடு இருங்கள்!
நமது தமிழ்நாடு உலகத்தின் பிற எல்லா நாடுகளையும் விட கல்வியில், வேலைவாய்ப்பில் உயர்ந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! உலகின் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் வாழும், அதிகம் படித்த இன்ஜினியர் டாக்டர் என்று உயர்ந்திருக்கிற ஒரு பகுதி தமிழகம் தவிர வேறு எங்குமே கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற இயலும்!
அதேசமயம் தமிழ்நாட்டில் பிற மாநில மக்களை உள்ளே அனுமதித்து அவர்களுக்கு ஓட்டுரிமை, வாழ்விட உரிமை எல்லாம் அளித்து ஈழத் தமிழர்களுக்கு நடந்தது போல தமிழ்நாட்டு தமிழர்கள் ஏமாளிகளாகக் கூடாது!
அதற்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசுகள் கவனமாக சட்டம் இயற்றி நமக்கு என்று இருக்கின்ற ஒரே ஒரு தமிழ் மாநிலத்தை ஒரு புத்திசாலித்தனத்தோடு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!
இல்லாவிட்டால் நமக்கும் இலங்கையில் நடந்தது போல் நடந்து, பார்ப்பன பனியாக்களின் சூழ்ச்சியால், நாடற்றவர்களாக வீடற்றவர்களாக நாடோடிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும்!
கவனம் கவனம் கவனம்!
-YozenBalki