Translate this blog to any language

செவ்வாய், 20 மார்ச், 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)


வெள்ளி, 16 மார்ச், 2012

நம் அன்னைத் தமிழ் வளர முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? What do we do to protect our Tamil Language?


முதியவர்: என்ன தம்பி! உங்கப்பா ஒரு நல்ல தமிழ் பேச்சாளர். நீ போயி ஃபிரெஞ்சு பாட மொழி எடுத்திருக்கே!

மாணவன்: போங்க "அங்கிள்"! உங்களுக்கு விவரம் பத்தாது! தமிழ்ல என்னதான் நல்லா எழுதினாலும் இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு மார்க்கு போடவே மனசு வராது. அது என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பாத்துப் பாத்துப் பிச்சை போடுவாங்க! அதுவே சான்ஸ்க்ரிட், பிரெஞ்சு, ஹிந்தி ஆசிரியர்கள் நல்லவர்கள், அவங்க மார்க்க அள்ளி விடுவாங்க! அதான் அங்கிள் நான் தமிழ எடுக்கல!

முதியவர்: என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழிய நாம மறக்கலாமா தம்பி?

மாணவன்: அங்கிள் 'டோடல் மார்க் குறைஞ்சா எனக்கு நல்ல காலேஜ்-நல்ல வேலை கெடைக்குமா அங்கிள்? அதுவும் பாக்கணும் இல்லியா? தமிழ் மட்டும் நல்லா இருந்து தமிழன் நல்லா இருக்கலன்னா அது பரவா இல்லியா உங்களுக்கு? தமிழன் இல்லாத இடத்தில் தமிழ் மட்டும் எப்படி வாழுமாம்?

முதியவர்: அது சரி! தமிழ்ல மாணவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை? ஏன் நல்ல மார்க் உங்களால...(Contd...)