Translate this blog to any language

வெள்ளி, 7 ஜனவரி, 2011

The 'Wheel' Will Rotate On!! குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!






















சிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்
செய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்!

"மாற்றமுடிந்தவை முடியாதன"  என
மாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்!

பெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-
சிறியதும் அதுபோல் மலையென மாறும்!

தினந்தினம் வேகம் வேறு திசைகளில் 
மனமது அடங்காதோடி விரைகையில்

சிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ?
அறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்!

'நாணான்' என்னும்  நாணமற்றதை
வண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்

வாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்
ஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்!

இதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்
பொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்!

நிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை?
தாழ்வறு பூமி தரணியில் உண்டோ?

உயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை
சின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ?

உலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்
உள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்!

சிறிது பெரிதென-பெரிது சிறிதென
செப்புதல் மனமே- மனமே நோயாம்!

இன்றைய இரவு நாளை விடிந்து
விடியல் இரவாய் மாறுதல் இயற்கை!

போனது திரும்பி - வந்தது போகும்
நாடுகள் அழிந்து பாலையும் ஆகும்!

பாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;
"இருமை" இறைவன் லீலையே அன்றோ?

பொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்
தேதி குறிப்பவர் சேதிகள் அறியார்!

இருப்பது கொண்டு நலமுடன் வாழும்
திருப்பதம் பற்றிய அடியவன் துறவி!

கடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்
சோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்!

இருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்
பிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்!

அறிவறியாத குழவிகள் போன்றே
அழிவது யாவும் தனக்கென வேண்டும்;

அழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;
குரங்குப் புண்ணாம் அறிவினை என்செய?

பிறவிக் குற்றமோ பெருமான் விதியோ? 
உறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ?

"அவனருளால்தான்" அவன் தாள் வேண்டி
அவனியில் அமைதி பெற்றிடலாகுமாம்!

ஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்!
அகத்துள் அண்டம் மறையும்-திரியும்!

அடங்கா மனதை அடக்கும் ஞானியின்
அன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்!

எல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க
ஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை!

கோடி வார்த்தைகள் கூறியும் என்ன?
குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!

yozenbalki

செவ்வாய், 21 டிசம்பர், 2010

Onion - Eye watering price-rise! "வெங்காயம்"... என்று நினைத்தாலே கண்ணீர் வருகிறது!!




'வெங்காயம்'. அதை உரித்தால் தான் கண்ணீர் வரும்!

இன்றோ "வெங்காயம்" என்று நினைத்தாலே நடுத்தரக் குடும்பங்களில் கண்ணீர் வருகிறது! 

ஒரு கிலோ வெங்காயம் விலை, மொத்த விலை கடைகளில் Rs.50/ - Rs. 60/- என்றும் அதுவே சிறு கடைகளில் Rs. 90/- Rs.100/- என்றும் போய் கொண்டிருக்கிறது. 
ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், இது போன்ற அநியாய விலைகள் அவ்வப்போது அத்யாவசியப் பொருட்கள் மீது ஏற்றப் படுவதும், மக்கள் கொஞ்ச நாள் அதைப் பற்றி பொருமுவதும், பிறகு அதைப் பொறுத்துக் கொண்டு போவதும் சகஜமாகி விட்டது!'

அத்யாவசியப் பொருட்கள்:
1. அரிசி
2. கோதுமை
3. துவரம் பருப்பு  (வட நாட்டில் 'தால்' என்பர் )
4. உளுத்தம் பருப்பு
5. உப்பு
6. சர்க்கரை.
7. வெங்காயம்
8. தக்காளி
9. உருளைக் கிழங்கு
10. எரி வாயு /மண் எண்ணெய்/ அல்லது விறகு
11. மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும் டீசல் / பெட்ரோல்
12. பால்
13. மக்கள் அடிக்கடி பருகும் டீ/ காபி 
இது போன்ற ஒரு பத்து-பதினைந்து பொருட்கள்தான் இன்றியமையாதன; மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதனவாகும் !!


ஆனால், ஒவ்வொரு முறையும் இவை போன்ற அனைத்துப் பொருட்களும் காரணமின்றி விலை ஏறுவதற்கு என்ன காரணம்? 
வெங்காயம் விலை ஏறி, மக்கள் கோபப் பட்டு ஆட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இன்று சரத் பவார் அறிக்கை விடுகிறார்..."வெங்காய ஏற்றுமதிக்குத் தடை என்று! ". இப்போது நமக்குப் புரிகிறது! எங்கே தவறு நடக்கிறது என்று!

* ஆட்சியாளர்கள் முதலாளிகளுக்குச் சலாம் போடுகிறார்கள்!
*தரகு முதலாளிகள் இந்தியாவில் விளையும் எல்லா அத்யாவசியப் பொருட்களையும் கப்பலேற்றி பணம் பார்க்கிறார்கள்!
*முதல் தர/இரண்டாம் தரப் பொருட்கள் யாவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது; அந்நியச் செலாவணி பணம் பெரு முதலாளிகளுக்கு டாலர்களில் வந்துக் குவிகிறது!
* மூன்றாம் தரப் பொருட்களை இந்தியாவிலேயே குப்பை போல போட்டு அதையும் விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்கள்!
* வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின் போதும்    உள்நாட்டு மக்களின் தேவையைப் பற்றிக் கவலைப் படாமல், கப்பல் ஏற்றுவது நடந்து கொண்டே இருக்கிறது!
* உழைக்கும் விவசாயிக்கு உரிய விலை போகாமல் இடைத் தரகர்களுக்கும், பதுக்கல் காரர்களுக்கும் பத்து பங்கு கொள்ளை லாபம் போய்க் கொண்டிருக்கிறது.
* பொது மக்கள் தலையில் தேவையின்றி ஒரு செயற்கை தட்டுப் பாடு, விலை ஏற்றம் சுமத்தப் படுகிறது.
* பதுக்கல் காரர்களை கடுமையாக தண்டித்ததாக இந்தியாவில் எங்கும் தகவல்கள் இல்லை.
* ஒரு டன் தானியம் விளைந்தால் அதில் 80% இந்தியர்களுக்குத்தான் சொந்தம்-மீதி வேண்டுமானால் ஏற்றுமதி-செய்து கொள்' , என்பது போன்ற மக்களுக்கான இறுக்கமான சட்டங்களும் இங்கு இல்லை எனத் தெரிகிறது!
* அத்யாவசியப் பொருட்கள் நமது இந்திய மக்களுக்கு தினமும் இவ்வளவு தேவைப் படுகிறது-அதை எக்காரணம் கொண்டும் விலை ஏற்றக் கூடாது என்ற நல்ல புத்தி, எந்த ஆட்சியாளருக்கும் கிடையாது!
* உதாரணமாக இந்த வருடம் 2010-ஆம் ஆண்டு மட்டும் பெட்ரோல் விலையை மத்திய அரசு  8 முறை ஏற்றி உள்ளது. விளைவு! போக்குவரத்துச் செலவுகளைக் காரணம் காட்டி எல்லாப் பொருட்களும் விலை ஏறிக் கொண்டே வருகின்றன! கீரைக் கார முனியம்மாள் கூட, மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் விற்ற கீரையை இன்று ஒரு கட்டு Rs.15/- க்கு விற்கிறாள்-கேட்டால் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் ஏறி விட்டது என்கிறாள்!! ஒரு கட்டுக் கீரையை மட்டும் பேருந்தில் கொண்டு வந்தால் கூட போக-வர ரெண்டு ரூபாய் தானே ஏற்றி விற்க வேண்டும்? ஆனால் ரொம்ப விவரமாக அவளே சந்தோசமாக விலை ஏற்றிக் கொள்கிறாள்! படிக்காத முனியம்மாளே இப்படி என்றால் படித்த அறிவாளி வியாபாரிகளை  சொல்லவே வேண்டாம்!
எரி வாயுவின் விலை இன்னும் நூறு ரூபாய் ஏறப் போகிறதாம்!
* என்னைக் கேட்டால், பெட்ரோலுக்கு மானியம் தருவதை விட, பல அமைச்சர்கள் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் பணத்தை எவனாவது ஒரு நல்லவன் பிடுங்கி  மக்களுக்கே செலவு செய்து விட்டு, மக்களுக்கே ஆள் ஆளுக்கு ஒரு அஞ்சு/பத்து லட்சம் ரூபாய் செலவுக்குக் கொடுக்கலாம்! அவ்வளவு பணம் சுவிஸ் வங்கி போன்ற பிற நாட்டு வங்கிகளில் இந்திய மக்களின் வியர்வை-உழைப்பு, கள்ளப் பணமாய் பதுங்கிக் கிடக்கிறது! 

என்னமோ! காந்திக்குப் பிறகு ஒரு நல்லவனும் கண்ணில் படவில்லை!
(அவராவது வெள்ளைக்காரனை இந்தியாவை விட்டு விரட்டும் அளவுக்குத் தைரியம் கொண்டிருந்தார்!)

சில நல்லவர்கள்-நல்லவர்களாகவே இருப்பதிலும் ஒன்றும் பிரயோஜனம் தெரியவில்லை!

தைரியம் இல்லாத நல்லவனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப் போகிறது சொல்லுங்கள்?

yozenbalki___________________________________
பின் குறிப்பு:  
இதில் "பூண்டு" விடுபட்டுப் போய்விட்டது!
பூண்டு* விலை: தற்போது கிலோவுக்கு Rs.250/- என்று
கேள்வி !!!!

** இனிமேல் அதையெல்லாம் கண்ணில் பார்ப்பதற்கே காசு 
கேட்பார்கள் என்று தோன்றுகிறது!!!
____________________________________________
பிற்சேர்க்கை :

வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட ம.பி. முதல்வரின் மனைவி! click here: (மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவி சாதனா சிங்

________________________________________

Kitchens in India worried over Onion price:

திங்கள், 20 டிசம்பர், 2010

Aircel - Confuses its customer..for some trivial reason!!

Aircel prepaid balance checking number now : *111*6# (star one one one star six ash) as on 20.12.2010...they may change again!!!
______________________________________

Dear Friends !

I encountered some issue with Aircel to day!
My opinion is, unless an autonomous body is there to monitor the consumer issues, this is going to be an ever growing issue with all such mobile service providers.
1. Excess billing.
2. Frequent call drops.
3. Non-availability of customer care people.
    and several other issues, can then only be proved in the consumer court!

If, the judging parameter is with the accused himself, how come we prove the computerized wrong billings and their mischievous activities anywhere legally? Here where comes the transparency to the public/consumer...as the union Govt is very much bragging about?

The solution is: The Govt/Trai should possess one mother computer to handle a neutral billing system and regulating the tele-customer service in a parallel way. Otherwise, the mobile/telephone service providers, will keep on telling stories in a technical junky words, (if at all one gets doubt) and will put on excess billing in some Rs.1/- rupee to Rs.100/- in excess, that can not be proved in any way as a customer we are. 

I doubt, billions of rupees might be going to the wrong pockets!

Just view my previous blog: http://yozenbalki.blogspot.com/2010/12/airtel-looting-money-at-night.html

I already written the same subject in many mobile forums since the year 2006. Just, circulate this message in your own ways and means!
 ______________________________________________
(My today letter to Aircel
and also to consumer complaints forum:http://www.consumercomplaints.in/?search=aircel )

To 
Aircel
customer care people
Chennai

Why the hell you go on changing the balance checking number? (My Aircel number is 9710010238.) If the balance checking number is simple we can remember that. But, voluntarily you kept the number like *111*6# now, that number can not be saved in the mobile for our reference too.( I saved it in msg area)

And today it is not showing the remaining balance too in the regular way as it used to show. Rather it shows zero balance.
After each call is made, it is not showing and deducting the amount in front of my eyes.  Every time should i go and check it using the hotchy potchy number?
It is not good business practice either!
I just will post about it in Mobile forums now!
See! MNP is going to come and keep it in mind sir!

Your Credibility should not be spoiled and due course that will fetch bad name and deterioration of your growth.
______________________________________________
Friends!
Being the citizen of India, we have to fight and fight for many petty reasons with the Govt. authorities as well as with the service providers, which are the fundamental duties to be provided to its people/customer. Very tired-some indeed !!!


yozenbalki

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவு: 1000 விமானங்கள் ரத்து



லண்டன்: கடும்பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பா முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பா மற்றும் ரஷ்யா முழுவதிலும் இப்போது கடும் குளிர்காலம் நிலவுகிறது. ஸ்கான்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்றவற்றில் மைனஸ் 25ஐத் தாண்டுகிறது வெப்பநிலை. இரண்டு அடி உயரத்துக்கு பனி குவிந்து கிடக்கிறது சாலைகளில். மக்கள் குளிருக்கும் பனிக்கும் பயந்து வெளியில் வரமுடியாத நிலை.

ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் மோசமான குளிர் நிலவுகிறது. பிராங்க்பர்ட் நகரில் 20 செமீ உயரத்துக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இங்கு பனி கடுமையாக கொட்டுகிறது. இதை தொடர்ந்து சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் அதிகமான சிறு சிறு விபத்துக்கள் இந்த பனிப் பொழிவு காரணமாக நடந்துள்ளன. இவற்றில் 3 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று மாலை முதல் இரவு வரை மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் பனியால் மூடப்பட்டது. எனவே, அங்கு தரை இறங்க இருந்த 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிராங்பட் விமான நிலையத்திலும் ஆம்ஸ்டார் பாமின்சியோல் விமான நிலையத்திலும் இதே நிலை நீடித்தது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருந்தனர். பனியை அகற்றிய பின் விமானங்கள் அங்கு தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. 4 1/2 மணி நேர தாமதத்துக்கு பின் பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையமும் பனியால் சூழப்பட்டது. எனவே அங்கு 84 விமானங்களும், ஜெனீவாவில் 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை இங்கு விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இங்கிலாந்தில் பனிக் காற்று வீசியது. இதனால் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவியது. ரெயில்கள், பள்ளிகள் மூடப்பட்டன. சாலைப் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை பெல்பாஸ்ட் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்பட்டது.

அண்டார்டிகாவுக்கு அடுத்து மிக அதிக குளிர் நிலவும் பகுதியாகக் கருதப்படும் சைபீரியப் பகுதிகளில் மைனஸ் 90 டிகிரி வரை குளிர் நிலவுகிறது. நவோஸிபிர்ஸ்க் நகரில் மைனஸ் 70 டிகிரி குளிர்! இந்தப் பகுதிகளில் எங்கும் பசுமையே காணாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

yozenbalki

திங்கள், 13 டிசம்பர், 2010

Why Tamil Eelam is Not Free Yet! ஈழப் போராட்டம் தொய்வடையும் காரணங்கள்!!


செர்பியாவில் இருந்து பிரிந்த கொசோவாவில் நேற்றைய தினம், 12.12.2010 முதலாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 
ஈழ விடுதலை பற்றி பேசும் போது சிலர், கொசோவாவை அடிக்கடி ஒப்பிடுவது எனக்கு உடன்பாடில்லை. காரணம், அங்கு நடைபெற்றது ஒரு கிருத்துவ-முஸ்லிம் போராட்டமாக எனக்குப் படுகிறது. அதாவது பத்து சதவிகித செர்பிய தீவிர (orthodox)கிருத்துவர்களுக்கும் தொண்ணூறு சதவிகித அல்பேனிய சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற போர் அது ! தொண்ணூறு சதவிகிதம்-பத்து சதவிகிதத்தை  ஜெயித்துவிட்டது!!  
20 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட கொசோவோவில் இன்று  1,20,000 கிருத்துவ சேர்பியர்களே வசிக்கின்றனர்!  (அதனால்தான் கொசோவா முஸ்லிம்களுக்கு இன்னும் ஐ-நாவில் உறுப்புரிமை தர மேற்குலக மன்றத்தில் மனமின்றி  உள்ளனர்) 
இன்னும் யூத (கிறித்துவர்கள் உதவுகிறார்கள்) இஸ்ரேல், மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களின் பாலஸ்தீனிய போராட்டமும் அப்படியே! அது ஒரு சமயப் போராட்டம் எனலாம் !

 
அது போகட்டும்! ஈழப் போருக்கு வருவோம்! 

ஈழப் போராட்ட பின்புலம், உலகின் பிற போராட்டங்களைப் போன்று பெரும்பான்மை மக்கள் ஒன்றுசேர்ந்த சமயத் தன்மை அல்லது "ஒரு-சமய-சாயம்" கொண்டிருக்கவில்லை. வெறும் மொழி, புவியியல் ஈர்ப்பு இதை மட்டுமே கொண்டு வலிமையான ஒற்றுமையை எப்படி தமிழர்களிடம் உண்டாக்க இயலும்? நியாய தர்மங்களை பற்றி பிறகு பேசுவோம்! மொழி என்று எடுத்துக் கொண்டால், ஈழப் போருக்கு உதவ வேண்டிய ஆறு கோடித் தமிழகத் தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பற்று அறவே கிடையாது! தலைவர்களுக்கு அடிமைப் பட்ட அரசியல் பற்று மட்டும் உண்டு ! 





தமிழ், என்பது இங்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு ஒட்டு வாங்கும் கருவி!  மெத்தப் படித்த பிராமணர்களுக்கும் தாம் ஒரு தமிழர் என்பதை விட 'சமஸ்கிருத -தாய்-பெற்ற ஆரியர்' என்றே நினைப்பு இருக்கிறது. அதனால்தான் இன்றுவரை ஒரு சோவும், இந்து ராம், சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட, பார்ப்பனத் தலைவர்கள் ஈழ விடுதலை இயக்கத்தை  ஒரு தீவிரவாதக் குழுவாகக் காட்டும் முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்! 


நமது மத உணர்ச்சியும் அவ்வாறே! எண்பது வருட திராவிட இயக்கங்களின் தாக்கம், ஒரு போலி "இறை-மறுப்பு-சமய மறுப்புக்' கொள்கையை மக்களிடம் புகுத்தி விட்டன!  இதற்கிடையில், எந்த அடிப்படையில் தமிழ் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு மிகப் பெரும் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது? 




விடுதலை பெற்ற எந்த ஒரு சிறு நாட்டுக்கும், வேறொரு நாட்டில் வாழும் அதே சமயம், மொழி சார்ந்த மக்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பது என் வாதம்!
இன்று மொழிப் பற்று என்பதும் வளர்க்கக் கூடிய விடயமாகப் படவில்லை. ஆங்கில மொழியின் ஏக போக நாட்டாண்மையை நிறுத்துவது/குறைப்பது என்ற சாத்தியமன்னியில், 
உலகின் பிற மொழிகள் மெல்ல அழிந்து வருவதும் கண்கூடு!


சரி! ஸ்ரீ லங்காவை எடுத்துக் கொண்டால், அங்குள்ள சிங்கள பவுத்தர்களுக்கு, இன்று சீன பவுத்தர்கள் உதவிக் கொண்டு இருக்கின்றனர்! அந்த வரிசையில் சிங்கள- இட்லர்-ராஜ பக்ஷேவுக்கு உதவத் தயாராய் இருக்கும் பிற பவுத்த நாடுகளின் வரிசை இதோ:
ஈழத் தமிழர்களுக்கு அது போல் ஏதோ ஒரு ஆழமான அடிப்படை மீது அமைந்த உணர்வோடு, அதாவது மதம் அல்லது மொழியின் அடிப்படையில் உதவக் கூடிய நாடு(கள்) இங்கு எங்கே இருக்கின்றன? 

இதைத் தயை கூர்ந்து கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவும்!
புரிதல்! முதல் படி! அது - ஏதேனும் நல்லதொரு தீர்வுக்கு வழிகோலக் கூடும்!

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

உங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா? ஒழிக்கும் வழிகள் இதோ! Kill the rats at your home!!


 (எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரியும்! தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது?)
 __________________________________________
எலித் தொல்லை தாளவே முடியவில்லை!
எலிகளைக் கண்டவுடன் தயவு தாட்சண்யம் பாராமல் ஒழித்துக் காட்டுங்கள்!
இரண்டாவது மாடியில் கூட எலிகள் வந்து நாசம் பண்ணும் என்று நம்ப முடிவில்லை 
ஒருவர் முணு முணுக்கிறார்...அதுகள் நூறாவது மாடிக்குக் கூட வரும்...மலை எலிகள் இல்லையா என்ன என்று..

* எனது பல நல்ல புத்தகங்களை நாசம் பண்ணிவிட்டன...
* குழந்தைகளின் துணிகள் பலவும் இவ்வாறே ...
* போன வாரம் வாஷிங் மஷினுக்குள் புகுந்து ஒயர்களைக் கடித்துத் துப்பி Rs.1750/- காலி.
* போன மாதம் ஒரு நாள் அதி காலை (இரவு?) இரண்டு மணி சமயம் எனது மகளின் விரலை, ஒரு எலி லேசாகக் கடிக்க கொஞ்சம் ரத்தம் வந்து..நாங்கள் எல்லாம் பயந்து போய் பெரம்பூர் பாரதி சாலை 24 hours மருத்துவ மனை சென்று அதற்கு  ஊசி, மருந்து போட்டுகொண்டு வந்தோம்.

* அந்த அறையில் படுக்க பயந்த குழந்தைகள் வேறு அறைகளில் உறங்குகின்றனர். அந்த அறைக் கதவை இரவில் பூட்டி வைக்க, நேற்று இரவு, கதவின் கீழ்ப் பகுதியை துவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது அந்த அசகாய எலி!
* எலி பிடிக்கும் அந்த மரத்தால் செய்யப் பட்ட கூண்டை வைத்துவிட்டு மாதக் கணக்காகிறது...எதுவும் அதில் விழவில்லை.
* ஒரு முறை விழுந்ததை, கொண்டு போய் வாட்ச்மேன் இடம் சொல்லி ரோட்டில் விட்டு விட்டு வரச்சொன்னோம்...சாகடிக்க மனம் இன்றி! அது திரும்பவும் அடுத்த வீட்டுக்கு போயிருக்கும்!
* அது பண்ணும் தீமைகளைப் பார்த்ததால் அப்படி விடுவது தவறு என்று தோன்றுகிறது.
* ஒரு எலி வருஷத்துக்கு முப்பது குட்டிகள் போடுமாம்!
* ஒரு முறை எலி வந்த வீடு...அதோ கதிதான் என்று இணைய தளங்களில் கண்டேன்! 'எலித் தலைமுறை' அந்த வீட்டில் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்!
* சுண்டெலி-பெருச்சாளி இதெல்லாம் அதில் அடக்கம்!
* எலிகள் இனி சென்னை போன்ற நகரங்களில் பெருகி விடும் என்றே தோன்றுகிறது. காரணம் அடுக்குமாடி கலாசாரம். எலிகள் எப்போதுமே உயரங்களில் வாழ விரும்பும் ஜந்து. மேலும் நம்மால் பூனைகளை அடுக்குமாடிகளில் வளர்க்கும் சாத்தியம் குறைவு!
பூனை ஓரிரு குட்டிகள் போட-எலிகள் சில சேர்ந்து நூற்றுக் கணக்கில் பெருக..ஒரு பூனை தான் என்ன செய்ய முடியும்?
* அதற்கு உதாரணம், அமெரிக்க நகரங்கள். அங்கு எலிப் பிரச்சினைகள் அதிகம்-எலி ஒழிக்கும் கம்பனிகளும் உள்ளன. 
 _______________________________________
எலித்தொல்லை தடுக்கும் வழிகள்:
* வருமுன் காத்தல்.
* எலி வரும் வழிகளைக் கண்டு..எலி கடிக்காத பொருட்களால் அடித்தல்-வேலி போடுதல்.
* உணவுப் பொருட்கள் எலிகளுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுதல். இரவில் அவற்றைத் தின்னவே எலிகள் வருகின்றன. 
தின்றுவிட்டு பிறகு தம் பற்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்...கண்டதையும் கடித்து நாசம் பண்ணி...தான் குட்டி போட்டு வம்ச விருத்தி பண்ண ஒரு இடம் பார்த்துக் கொண்டு அந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறது.
* எலிகள் இருக்கும் வீட்டில், எலிகளால் அங்குள்ள மனிதர்களுக்கும் சில நோய்கள் ஏற்படும் என்று வேறு  சொல்கிறார்கள். 
 
 
 
இதெல்லாமே எலியால் கடிக்கப் பட்ட குழந்தைகளின் விரல்கள்:
உங்கள் வீட்டிலும் ஒரு நாள் இது நடக்கலாம்.
வீடேறி வந்து உங்கள் குழந்தைகளை வதைக்கும் பகைவனுக்கு 
"அன்பே சிவம்" சொல்லிக் கொடுக்க இயலாது - தயவு பாராமல் கொல்லுங்கள்! அதுவே சரியான வழி!
(courtesy: Google)
___________________________________________
எலிகள் பற்றிய மேலதிக செய்திகளுக்கு பார்க்கவும்:
________________________________________
சென்னையில் எலி ஒழிக்கும் நிறுவனங்கள் அல்லது விஷயங்கள் பற்றி இணையத்தில் தேடப் போய் ஒரு நல்ல நிறுவனத்தின் இணைய தளம் கண்டேன்..அது அமெரிக்காவை சேர்ந்தது.
மிகப் பிரமாதமான இணையதளம். 
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒன்று அது போல் மிகச் சிறு அளவில் நிறுவனம்/ இணையம் உள்ளது..
காண்க: http://www.sriprasannaagencies.com/
(just copy this link and paste it in browser. The direct link does not go to the page and shows error400)
மேலை நாடுகளில் இது போன்ற மக்கள் தொண்டு எதையும் மிகச் சிறப்பாக செய்வார்கள். நம் நாட்டில் தற்போதைய 2G spectrum scam- போன்ற விஷயங்களைத் தான் பிரமாதமாகச் செய்கிறார்கள்!
(இது போன்ற 'அரசியல் எலிகளை' ஒழிக்கவும் ஏதாவது கருவிகள் கண்டு பிடித்தால் நம் இந்திய நாடு நலமடையும்!!)
________________________________________
வருங்காலத்தில் அடுக்குமாடிகளில் எலிப் பிரச்சினைகள் பெரிதும் பெருகி விடும் என்றே தோன்றுகிறது.
* எலிகளை 'கண்ட-உடன்-சுட' என்று சொல்லும் படியாக ஒழிக்க வேண்டிய நிர்பந்தம் நகர வாசிகளுக்கு உள்ளது.
* உங்களுக்கு எதுவும் எலிகளால் பாதிப்பு வராத வரையில் இந்த விஷயங்கள் கொஞ்சம் சிரிப்பாகவே இருக்கும்!
* பாதிப்பு வரும்போது நான் சொன்னது நினைவுக்கு வரும்-அப்போது மீண்டும் இங்கு வரவும். சில நற்செய்திகள் காத்து இருக்கும்.
______________________________________
 எலி பிடிக்கும் சில நல்ல முறைகள்:
"பாவம் பார்ப்பவனின் நாடும் வீடும் பகைவனால் சூழப் பட்டு விரைவில் அழிந்து விடும்"- பகவத் கீதை 
______________________________________
எலி ஒழிக்க அவனவன் என்னென்ன படு படுகிறான் என்று  இங்கே சொடுக்கிப் பார்த்தாலே புரியும்:

____________________________________

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :







தமிழ் நாட்டில் கடும் வெள்ளம்!
(ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக்
கெஞ்சுவதை நிறுத்த மாட்டோம்....)
இந்தத் தண்ணீரை சேர்த்து வைக்க எந்த திட்டங்களும் இங்கு எங்களிடம் இல்லை!
ஏரிகள் உடைந்து...ஏரி ஷட்டர்கள் உடைந்து...தூர்க்கடிக்கப் பட்ட கால்வாய்களை விட்டு விட்டு
தெருக்கள் சாலைகளை துண்டித்துக் கொண்டு எங்கள் வீடுகளில் நுழைந்து நாங்கள் அழிந்து அந்தத்  தண்ணீர் கடலில் கலந்து வீணானாலும் சரி! நாங்கள் கடல் தண்ணீரைக்
குடிநீராக்குவதை நிறுத்த மாட்டோம்! பிளாஸ்டிக் பைகளில் காசுக்குத் தண்ணீர் விற்பதையும் தவிர்க்க மாட்டோம்!
இதுதான் எங்க பயக்க வயக்கமுங்கோ!
வருஷா வருஷம் நாங்க அப்படித்தானுங்கோ!!!

yozenbalki