Translate this blog to any language

திங்கள், 29 ஏப்ரல், 2024

நான் படித்த பார்ப்பன பள்ளியில் அவாள் ஆதிக்க கதைகள்!!


"இட ஒதுக்கீடு ஏன் தேவை?" என்ற விழிப்புணர்வு வலைத்தளங்களில் பேசப்படும் இவ்வேளையில்,

நான் படித்த சென்னை (கே கே நகர்) பாப்பார குரூப் பத்மா சேஷாத்திரி பள்ளியில் எனக்கு நடந்த நிகழ்வை பகிர விரும்புகிறேன்.

ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் அனைத்து பள்ளி மாணவர்களும் காணும்படியாக “ஜெனரல் அசெம்பிளி" (பொதுக் கூடுதல்) நடத்துவார்கள். இதில் பல வகை போட்டிகள் நடத்தப்படும் - வினாடி வினா, பாட்டுப் போட்டி, கருவிகள் இசைக்கும் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள்.

விவாதப் பேச்சுப் போட்டி (debate) ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். என் வகுப்பில் , மற்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் என் அளவுக்கு பேசும் திறமை இல்லாததால், என் அளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆகையால் பங்கேற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்கேற்றுக் கொண்டேன்.

எட்டாவது படிக்கையில் முதல் முறை பங்கேற்றுச் சிறப்பாக பேசினேன். ஆனால், பரிசு ஏதும் கிடைக்கவில்லை. 

ஒன்பதாவது படிக்கையில் மீண்டும் பங்கேற்றுக் கொண்டேன். ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. 

ஆனால், நான் அப்போது கவனித்தது, பரிசு பெற்ற இரண்டு பாப்பார மாணவர்கள் பேச்சை வெகு சுருக்கமாக முடித்துக் கொண்டவர்கள். பெரிதாக புள்ளிகளோ, விடயங்களோ, அவர்கள் பேச்சில் இல்லை. 

சந்திரா சீனிவாசன் என்ற ஆசிரியை போட்டியின் ஒருங்கிணைப்பாளர். அவரை சந்தித்து, என்னிடம் உள்ள குறைகள் என்ன, திருத்திக்கொள்ள உதவுமே, என்று பல முறை கேட்டேன். 

கடைசி வரை அவள் சொல்லவே இல்லை.

பத்தாவது படிக்கையிலும் பங்கேற்றுக் கொண்டேன். தோல்வி தான். இந்த முறை வகுப்பில் எனக்கிருந்த ஓரிரு நண்பர்கள் அவர்களாகவே முன் வந்து என்னைப் பாராட்டினார்கள். 

ஆனால், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பரிசு கிடைக்காததால், அப்பொழுது எனக்கு,“ ஒரு வேளை நாம் அவ்வளவு நல்ல பேச்சாளர் இல்லை போலிருக்கு” என்று முதல் முறையாக தாழ்மனப்பான்மையோடு எண்ணத் தொடங்கினேன்.

என் திறமையில் எனது நம்பிக்கை அடி வாங்கியதால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் நான் என் பெயரைக் கூட கொடுக்க முயற்சிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் எந்த மேடையும் ஏறாமல் கழிந்தன. பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமே மறந்து போனது. 

இப்படியிருக்க, சென்னையில் அப்பொழுது அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் ஒதுக்கும் ஒரு சாதாரண கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கல்லூரி எப்பொழுதாவது, மாணவர்களுக்கு உரை ஆற்ற, சாதனையாளர்கள், துறை வல்லுநர்கள், மற்ற கல்லூரி ஆசிரியர்கள், என்று பெரியவர்களை அழைப்பார்கள்.

அப்படி ஒரு முறை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி என்பவரை பேச அழைத்திருந்தார்கள். அவருடைய அமெரிக்க வாழ்க்கை அனுபவம், அமெரிக்க கல்வி முறை, அமெரிக்கர்களின் உளவியல், என்று இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற அவ்வளவு கருத்துக்களை தமிழிலே அவ்வளவு அழகாக, தெளிவாக பேசினார்.

அந்த பேச்சில் திரு.எம்.எஸ் உதயமூர்த்தி கூறிய ஒரு வாக்கியம் என்னை தட்டி எழுப்பியது:

“உங்களால் ஒன்றை சாதிக்க முடியும்! முடியும், என்று மீண்டும் மீண்டும் தோன்றினால், அது உங்களால் முடியும்!". என்றார்.

அந்த அரங்கில், என் தலையில் அவர் ஒரு ஆயிரம் வாட்ஸ் விளக்கை போட்டுவிட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்தது. மெய் சிலிர்த்தது.

“ஓ !! நாம் நல்ல பேச்சாளர் என்ற நம்பிக்கை வந்து கொண்டே இருக்கிறதே. நான் மேடையில் பல சைகைகள் செய்து, பல புள்ளிகளை எடுத்துரைத்து, அமோக கைதட்டல் பெறுவது போல் காட்சிகள் உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றனவே. ஒரு வேளை, இவர் சொல்வது போல் நம்மால் சிறந்த பேச்சாளராக வெல்ல முடியும் என்பது உண்மையோ?!! அதனால் தான் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ?!!!” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.

இரண்டே வாரங்கள் கழித்து, சென்னையில் ஒரு மிகவும் புகழ் பெற்ற பெண்கள் கல்லூரியில், ஒரு விவாதப்போட்டி இருப்பதாக அறிவிப்பு ஒட்டினார்கள். மூன்று ஆண்டுகள் மேடையே ஏறாத நான், துணிந்து என் பெயரை, என் கல்லூரியின் சார்பாகக் கொடுத்தேன்.

சென்னையின் பல கல்லூரிகளிலிருந்து, ஒரு 20 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள். லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ்..என்று பெரும் புகழ் பெற்ற கல்லூரிகளிலிருந்து போட்டியாளர்கள். போட்டி துவங்கும் முன் போட்டியாளர்கள் பலர் ஒருவருக்கொருவர் அறிந்த முகங்களாக இருந்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் பலரும் பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அனுபவமிக்கவர்கள். நான் தான் அதில் புதுமுகம். அனுபவம் இல்லாத எனக்கு, கல்லூரி அளவில் இது தான் எனக்கு முதல் பேச்சுப் போட்டியும் கூட.

ஒரு பதினைந்து பேர் பேசி முடித்த பிறகு எனது பெயர் அறிவிக்கப்பட்டது. கேட்பவர்கள் கவனத்தை ஈர்க்க ஒரு கவர்ச்சியான விதத்தில் வணக்கம் சொன்னேன். அரங்கமே எழுந்து கை தட்டியது !! அதற்குப் பிறகு தங்கு தடையின்றி ஆறு போல ஓடியது என் பேச்சு. இடை இடையே முக்கிய புள்ளிகள், சான்றோர்களின் கருத்துக்கள், நூல்களில் இருந்து மேற்கோள்கள், நகைச்சுவை, என்று பேச்சு செல்ல, ஆங்காங்கே நான் பேசுவதை நிறுத்த வேண்டிய அளவு கைதட்டல் வாங்கினேன் !!

பரிசுகள் அறிவிப்பு,

“மூன்றாம் பரிசு...”,

 “இரண்டாம் பரிசு...”

இரண்டிலும் என் பெயர் வரவில்லை.

முதல் பரிசு…..”காளி” !!!!!!!! 

அரங்கமே மகிழ்ச்சியில் கை தட்டியது. என் வாழ்வில் மறக்கவே முடியாத பொன் நாள். இன்றும் அந்த கணத்தை நினைக்கையில் என் உள்ளத்தில் அவ்வளவு பூரிப்பு. 

அன்றைய நாள் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மீதமிருந்த கல்லூரி வாழ்வில் கிட்டத்தட்ட 40 பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று, எத்தனையோ முதல் பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் என்று குவிந்தன. பிற்காலத்தில் இதில் வளர்ந்த என் ஆங்கில பேச்சுத் திறமையே என் வேலையிலும் தொழிலும் அவ்வளவு வெற்றிகளைத் தந்தது.

ஒரு வேளை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் உரையை நான் கேட்கவில்லை என்றால், எனக்கு அநீதி செய்த அந்த பாப்பார அயோக்கியர்களின் மதிப்பீட்டை உண்மையென நம்பி இந்த திறமை என் பள்ளிப்பருவத்திலேயே ஊக்கம் இல்லாமல் காய்ந்து கருகி காணாமல் போயிருக்கும்.

அந்த பாப்பார அயோக்கியர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து என் "முளைவிடும் திறமையில்" சத்தமே இல்லாமல் திராவகம் ஊற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இதில் திருட்டு, கொலை, குற்றம் எதுவுமில்லை. ஆனால், அவற்றை விடை கொடிய குற்றமாக, கல்வி கிடைக்கும் என்று நம்பி வந்த இடத்தில, அந்தக் கல்வியை ஒரு குழந்தைக்கு கிடைக்க விடாமல் செய்தார்கள், பாப்பார வஞ்சகர்கள்.

என் நீண்ட வாழ்வில் இன்று வரை மறக்க முடியாத, பொறுக்க முடியாத, பாப்பானின் அநீதிகள் இவை. ஒரு பேச்சுப் போட்டியிலேயே இவ்வளவு சூழ்ச்சி செய்கிறார்கள் என்றால், பாப்பான் அல்லாத பிள்ளையின் பாடப்படிப்பிலும், தேர்வுகளிலும், எவ்வளவு தடைகள் போடுவார்கள்? 

உங்கள் பிள்ளைகளை பாப்பான் ஆதிக்கம் இருக்கும் பள்ளிகளில் படிக்க வைத்திருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் அவர்களோடு அவர்கள் பள்ளி வாழ்வை பற்றி நிறைய பேசுங்கள். பள்ளியிலே நூல் படிப்பும் தேர்வும் மட்டும் பிள்ளையின் வாழ்வு இல்லை.

ஆசிரியர்கள், பாப்பான் அல்லாத பிள்ளைகளை மாண்புடன் நடத்துகிறார்களா? அடிக்கடி காரணம் இல்லாமல் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லி அவமானப்படுத்துகிறார்களா?, படிப்பு தவிர மற்ற நிகழ்வுகளில், போட்டிகளில், சரியான வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா?, பாடம் பாப்பாரப் பையனுக்கு ஒரு தரமாகவும், பாப்பான் அல்லாத பையனுக்கு மட்டமாகவும் சொல்லிக்கொடுக்கப்படுகிறதா ?, பிள்ளை கேட்கும் ஐயங்களுக்கு ஆசிரியர் 
பொறுமையாக விளக்குகிறாரா?, 

முக்கியமாக உங்கள் பிள்ளையுடன் மற்ற பிள்ளைகள் நல்லபடியாக பழகுகிறார்களா, இல்லை மறைமுகமாக ஒதுக்கப்படுகிறானா ….என்று உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் ஒரு பள்ளியின் பங்கு எவ்வளவோ இருக்கிறது... அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.

ஒவ்வொன்றிலும் பாப்பான், பிஞ்சுகள் உள்ளத்தில் இரக்கமே இல்லாமல், கண் இமைக்காமல், அமிலம் ஊற்றுவான். எச்சரிக்கையாக இருங்கள்.

சமூக நீதிக்கான போரை தந்தை பெரியார் விட்ட இடத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

ஓய மாட்டோம்!
களமாடுவோம்!
வெல்வோம்!!

Courtesy:

எனது twitter நண்பர் 
திரு. காளி அவர்கள் 

(அவர் மிகச் சிறந்த தமிழ் ஆங்கில எழுத்தாளர்; பேச்சாளர், சீரிய சிந்தனையாளர்! சமூகப் பற்று நிறைந்தவர்! சிறுக சிறுக இதை எழுதி ட்விட்டரில் போட்டு இருந்தார்... அவரிடம் கேட்டு வாங்கி, அவரது அனுபவம் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதனால் இங்கு பதித்து இருக்கிறேன்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: