Translate this blog to any language

வியாழன், 29 ஜூலை, 2021

தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது!

நீங்கள் தெரிந்தவரா? நண்பரா? 
மனித உறவுகளின் தன்மை நிச்சயிக்கப்படுதல் வேண்டும்.

1. இரத்த சம்பந்தம் உடைய உறவு 

2. திருமண உறவு

3. அத்யந்த நட்பு

4. முன்பின் அறிமுகமற்றவர்கள்

5. புதியவர்கள்

6. தெரிந்தவர்கள் 


என்ற 6 வகை உறவுகள் மட்டுமே ஆகும். அதில் இரத்த சம்பந்தம் உடைய உறவு, திருமண உறவு என்கிற முதல் இரண்டு வகையினர் பற்றி நாம் நன்கு அறிவோம்.

மூன்றாம் வகையான அத்தியந்த நட்பு என்பது சிறுபிராயம் முதற் கொண்டு கொள்கிற உறவு அல்லது ஒத்த கருத்துடைய இருவர் பூணும் "அன்புறவு" ஆகும். அப்படிப்பட்ட அன்பானது இருவர் வீட்டிலும் நடக்கிற எல்லா 'நல்லது 'கெட்டது'களிலும் பங்கு கொண்டு அங்கு ஏற்படும் சுகத்தில் கலந்து துக்கத்தில் அழுகின்ற அளவிற்கு ஆழமானது ஆகும்.

மற்றபடி மீதமுள்ள நான்கு, ஐந்து, ஆறாம் வகையினரின் (4,5,6) இலட்சணம் பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும், அதாவது, "முன்பின் அறிமுகமற்றவர்கள்", நம்முன் தோன்றும்போது அவர்கள் நமக்குப் "புதியவர்கள்"!

அந்தப் புதியவர்கள் ஏதோ 'ஒரு நம்மிடம் ஆக வேண்டிய வேலையின் காரணமாக சிலமுறை நம்மிடம் பேசிச் சிரித்து பழகும் போது "தெரிந்தவர்கள்" ஆகிறார்கள். 

அந்த வேலை அவர்களுக்கு முடிந்ததும் காணாமல் போய் விடுவர். 
மீண்டும் சில காலம் கழித்து அவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றவுடன் திடீரென்று தோன்றி சிரித்துப் பேசுவார்கள். 

அந்த காரியம் முடிந்ததும் மீண்டும் காணாமல் போய்விடுவர். இடையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் இருவருக்குமே தெரிவதில்லை. இதுவே "தெரிந்தவர்கள்"
என்பதின் இலட்சணமாகும்.

"நண்பர்களுக்கும்" 
"தெரிந்தவர்களுக்கும்" இடையிலான இந்த நுட்பமான வேற்றுமையை நாம் சரியாகப் புரிந்து கொள்ளுதல், செய்யும் தொழில் மற்றும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் ஆகும்!

அத்யந்த நண்பர்கள் 5 பேர் ஒருவனுக்கு இருந்தால் அது உலக அதிசயமே ஆகுமாம்!

தெரிந்தவர்கள் 1000 பேர் ஒருவனுக்கு இருக்கக்கூடும். ஆனால், "தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது; முடியவே முடியாது!

Dot.

-YozenBalki

வெள்ளி, 28 மே, 2021

வாலாஜா ஏரியை மீட்ட கலெக்டர் திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள்!

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன்.

படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. 
மனந்திறந்து அவரைப் பாராட்டுங்கள் அன்பர்களே!!


முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள், பகிருங்கள்!

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி எனலாம்!

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். 

அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.

ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.

 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.

அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். 

சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.

2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.

 பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.

 ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். 

அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.

 சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது. 

அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. 

ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும். 

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. 

அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. 

இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது. 

எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் 
ககன்தீப் சிங் பேடி.

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி. 

அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. 

ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. 

அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. 

எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.

ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.

தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. 

இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .

பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்

ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது. 

வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க. 

ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. 

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.

1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது. 

துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் : 

கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 

12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. 

சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள். 

ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது. 

ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.

 ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, 

"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. 

எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. 

எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு. 

கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.

ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. 

ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.

பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர். 

அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர். 

கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார். 

இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. 

இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம். 

திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். 

அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார். 

தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. 

அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.            
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிந்திருக்கின்றன. 

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். 

பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம். 

மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே. 

சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?  

ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!

இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி!

நன்றி: Mettukuppam Rameshraj.

[வாட்ஸப்பில் பகிர்ந்தது]

வியாழன், 15 ஏப்ரல், 2021

தினந்தோறும் தயிர் சாப்பிடுவது ஆயுளை நீட்டிக்கும்!

தயிர் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

💚 💜 💛 

இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் 'அழகு வைட்டமின்' என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பள பளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும், பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது.

எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயிர் சாப்பிடுவது நல்லது.

பூப்படையத் தாமதம், மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்களே மிகவும் குறைவு. காரணம், காலையில் தயிர் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்பு குறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். "மிஸி ரொட்டி" என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.

தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.

கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது, தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் ( Élie Metchnikoff) கண்டுபிடித்தார்.

https://en.wikipedia.org/wiki/%C3%89lie_Metchnikoff

Mechnikov also developed a theory that aging is caused by toxic bacteria in the gut. And that lactic acid could prolong life. Based on this theory, he drank sour milk every day. He wrote

"The Prolongation of Life: Optimistic Studies", in which he espoused the potential life-lengthening properties of lactic acid bacteria (Lactobacillus delbrueckii subsp. bulgaricus).

He attributed the longevity of Bulgarian peasants to their yogurt consumption.

மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

https://www.huffingtonpost.co.uk/ellis-shuman/bulgarias-secret-to-long-_b_9866820.html

தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் "அமிலத்தன்மையைச்"
(Alkaline) சரிசெய்து ஆரோக்கியம், இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.

"Numerous researchers have shown that "fermented milk" has strong anti-tumour effect, which is due to its lactic acid bacteria," said Professor Akiyoshi Hosono at Japan's Shinsho University, who studies fermented milk's anti-mutagen impacts.

From:
http://cbs-sci.blogspot.com/2005/02/want-to-live-100-years-eat-bulgarian_02.html?m=1

கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.

தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும், பாஸ்பரஸும்தான்.

சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்.
***************
https://www.independent.co.uk/arts-entertainment/great-uncle-bulgarias-secret-1340147.html

தமிழ்ப் புத்தாண்டு தைய்யா சித்திரையா, தெளிவோமா?

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைத்திங்கள் முதல் நாளா அல்லது சித்திரைத் திங்கள் முதல் நாளா?

சிறப்புப் பார்வை:

சுறவம் 
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பர் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி உரையாடி ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்துத் தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய

இந்த அறுபதில் எது தமிழ்ச்சொல்?

யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையைச் சான்றாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். 

வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. 

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீனக் காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிறித்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் உயர்மட்டக் கடுமையை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனில் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். 

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டு பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனில் காலங்களில்தான் தொடங்குகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனில் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான ஆற்றல்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே 
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்

அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில் சித்திரைத் திருநாளாகக் கொண்டாடுங்கள்; புத்தாண்டு என்று அழையாதீர்கள்!

🌸🌸💐💐

Source: WhatsApp University
யார் எழுதியது என்று தெரியவில்லை, எழுதிய தோழருக்கு தமிழினத்து வாழ்த்துகள்! 🙏🙏

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

என்னய்யா சும்மா தமிழ் தமிழ்னுகிட்டு..!!

"என்னய்யா சும்மா தமிழ் தமிழ்"-ன்னு என்ன இருக்கு அதுல? - ன்னு எவனாவது கேள்வி கேட்கட்டும்!

இது தான் பதில்.:

இது தான் தமிழ் ! 
அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..

1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

Source: From WhatsApp University
யாரோ ஒரு பெயர் தெரியாத நண்பர்;
தமிழன்பர்!

💕💕🙏🙏🌸🌸

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

பாதி தமிழ்நிலம் போனது கொள்ளை; மீதி இருப்பதும் சொல்வதற்கில்லை!!

இது எனதொரு பழங்கவிதை! அது என் எழுத்து வடிவத்திலேயே இருக்கட்டுமே என்று இந்த வலைப்பூவில் தற்சமயம் போட்டிருக்கிறேன்!

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எழுதியது! இப்பொழுதோ, தமிழினத்தின் நிலை இன்னும் மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது!

நம் கல்வி, வேலைவாய்ப்பு, நமது வாழ்விடங்களை காப்பாற்றுதல்.. முக்கியமாக எல்லா வியாபாரங்களையும் தமிழினத்துக்கு கீழே கொண்டு வருதல், போன்றவை இங்கு நடவாமல் நமக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்காது!

எந்த ஒரு இனம் விவசாயம் மற்றும் கைத்தொழில்களைச் செய்யாமல் அதில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்களை வெறுமனே "இந்த கைக்கு அந்த கை" மாற்றி வியாபாரம் செய்து வருகிறதோ அந்த இனம்தான் மிக விரைவாக வளர்ச்சி பெறும்! அதில் வரும் (Exponential Income) அபரிமிதமான வருவாய் வழியாகத்தான் எல்லா நிலங்களையும் வட ஹிந்தியர்கள் தமிழகத்தில் வாங்கி போட்டுக் கொண்டே வருகிறார்கள்!

இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விளை நிலங்கள் மற்றும் வாழ்விடங்கள் எல்லாமே வட ஹிந்திய குஜராத்தி மார்வாடிகளுக்கு கை மாறிவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது! பிறகு ஈழத் தமிழர்கள் நாடிலியாக அகதிகளாக உலகம் முழுவதும் சென்று அல்லாடும் கதைதான் நமக்கும்!

இதன் விளைவுகளை உணராமல் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இருந்து வருவது மிகப்பெரும் வருத்தமாக இருக்கிறது!

-YozenBalki





-YozenBalki

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஆயகலைகள் 64 தமிழில்!


அறுபத்து நான்கு ஆயகலைகள்:

தமிழர்களுக்கு மட்டுமே முற்றிலும் தெரிந்த இந்த 64 கலைகளை ஆரியர்கள் வெறும் மொழிமாற்றம் மட்டும் செய்து சமஸ்கிருத பெயரைச் சூட்டிக் கொண்டார்கள்! ஆனால் அவர்களுக்கு இவற்றில் ஒரு புலமையும் கிடையாது!


உண்மையான அந்த 64 கலைகளின் தமிழ்ப் பெயர்கள், இன்றும் தமிழக கிராமங்களில் தமிழர்களிடையே பேச்சு வழக்கில், வாழ்க்கை முறைகளில் காணப்படுகின்றன!

அவை பின்வருமாறு:

1. எழுத்திலக்கணம்

அதற்கான சமஸ்கிருத பெயர்
"அக்கரவிலக்கணம்" ஆகும்

2. எழுத்தாற்றல்

அதற்கான சமஸ்கிருதப் பெயர்
லிகிதம்

3. கணிதவியல்
கணித சாஸ்த்திரம்

4. மறை நூல்
வேத சாத்திரம்

5. தொன்மம்
புராணம்

6. இலக்கணவியல்
வியாகரணம்

7. நய நூல்
நீதி சாஸ்திரம்

8. கணியக் கலை
சோதிட சாஸ்திரம்

9. அறத்துப் பால்

தரும சாஸ்திரம் என்பது
அதற்கான சமஸ்கிருதப் பெயர்

10. ஓகக் கலை
ஓம் என்ற தமிழ் எழுத்து!

அதற்கான சமஸ்கிருத பெயர்
யோக சாஸ்திரம்

11. மந்திரக் கலை
மந்திர சாஸ்திரம்

12. நிமித்தகக் கலை
சகுன சாஸ்திரம்

13. கம்மியக் கலை
சிற்ப சாஸ்திரம்

14. மருத்துவக் கலை
வைத்திய சாஸ்திரம்

15. உறுப்பமைவு
உருவ சாத்திரம்

16. மறவனப்பு
இதிகாசம்

17. வனப்பு
காவ்யம்

18. அணி இயல்
அலங்காரம்

19. இனிதுமொழிதல்
மதுரபாஷணம்

20. நாடகக் கலை
நாடக சாஸ்திரம்

21. ஆடற் கலை
நிருத்திய சாத்திரம்

22. ஒலிநுட்ப அறிவு
சப்த ப்ரம்மம்

23. யாழ் இயல்
வீணையிலக்கணம்

24. குழலிசை
வேணு கானம்

25. மத்தள நூல்
மிருதங்க சாத்திரம்
 
26. தாள இயல் 
தாள சாத்திரம்

27. வில்லாற்றல்
அஸ்திர ப்ரயோகம்

28. பொன் நோட்டம்
கனகப் பரிட்சை

29. தேர்ப் பயிற்சி
இரதப் பயிற்சி

30. யானையேற்றம்
கஜப் பரிட்சை

31. குதிரையேற்றம்

அஸ்வப்பரிட்சை

32. மணி நோட்டம்
இரத்தினப் பரிட்சை

33. மண்ணியல்
பூமிப் பரிட்சை

34. போர்ப் பயிற்சி
சங்கிராமவிலக்கணம்

35. கைகலப்பு
மல்யுத்தம்

36. கவர்ச்சியியல்
ஆகரூடணம்

37. ஓட்டுகை
உச்சாடணம்

38. நட்பு பிரிக்கை
வித்வேடணம்

39. மயக்குக் கலை
மோகன சாத்திரம்

40. புணருங் கலை
காம சாஸ்திரம்

41. வசியக் கலை
வசீகரணம்

42. இதளியக் கலை
இரசவாதம்

43. இன்னிசைப் பயிற்சி
காந்தருவ வாதம்

44. பிறவுயிர்மொழி
பைபீல வாதம்

45. மகிழுறுத்தம்
கவுத்துக வாதம்

46. நாடிப் பயிற்சி
தாது வாதம்

47. கலுழம் 
காருடம்

48. இழப்பறிகை
நஷ்டம்

49. மறைத்ததையறிதல்
முஷ்டி

50. வான்புகுதல்
ஆகாய ப்ரவேசம்

51. வான் செல்கை
ஆகாய கமனம்

52. கூடு விட்டு கூடு பாய்தல்
பரகாய ப்ரவேசம்

53. தன்னுறு கரத்தல்
அதிருசியம்

54. மாயம்
இந்திரஜாலம்

55. பெருமாயம்
மகேந்திரஜாலம்

56. நீர்க் கட்டு 
ஜல ஸ்தம்பனம்

57. அழற் கட்டு
அக்னி ஸ்தம்பனம்

58. வளிக் கட்டு
வாயு ஸ்தம்பனம்

59. கண் கட்டு
த்ருஷ்டி ஸ்தம்பனம்

60. நாவுக் கட்டு
வாக்கு ஸ்தம்பனம்

61. விந்துக் கட்டு
சுக்ல ஸ்தம்பனம்

62. புதையற் கட்டு
கனன ஸ்தம்பனம்

63. வாட் கட்டு 
கட்க ஸ்தம்பனம்

64. சூனியம்
இதற்கான சமஸ்கிருத பெயர்
அவஸ்தை ப்ரயோகம்


Courtesy Google:

வியாழன், 25 மார்ச், 2021

கருங்காலிகள் திரண்டு நிற்கும் போர்க்களம்: தமிழக தேர்தல் 2021.

உடைப்பெடுக்கும் மதவெறி சாக்கடை..!

தேர்தல் என்னும் பெயரில் மீண்டும் ஒரு இனப்போர் தமிழ்நாட்டில் மூளப் போகிறது. தன்மானமும் தமிழ்மானமும் உள்ளவர்கள் ஒரு பக்கமும், மான மில்லாதவர்களும், காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் மறுபக்கமாகவும் திரண்டு நிற்கும் போர்க்களம் இந்தத் தேர்தல்.

ஊடகங்கள் அனைத்தும் எச்சில் கஞ்சிக்கும், எலும்புத்துண்டுக்கும் விலை போய் கிடக்கும் இந்த வேளையில் நடக்கும் ஒரு வரலாற்றுப்போர்.

மதவாதம் தனது ஆகச்சிறந்த வித்தையை எல்லாம் அவிழ்த்து விடும் காலம். இரண்டாயிரம் ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெறும் போர்.

காலம் மாறியிருக்கலாம்.. தலைமை மாறியிருக்கலாம்... ஆனால் கருத்து மாறாதப்போர். விபிசணனை தத்தெடுத்து இராவணனை வீழ்த்திய கூட்டம்., சூழ்ச்சியை முன்னிருத்தி மண்ணைப் பிடுங்கிக் கொண்டு மாவலியை நாட்டை விட்டுத் துரத்தியக் கூட்டம்.

கடவுளை சொல்லி நம் கல்வியை, கலையை, பொருளாதாரத்தை திருடிய கூட்டம். பொய்யையும் புரட்டையும் வைத்து காலம் முழுக்க புறவாசல் அரசியல் செய்யும், இப்படி அடிமைக் கூட்டத்தோடு நம் அம்புக் கூட்டிலிருந்து அம்பை எடுத்தே நம்மை எதிர்க்கும் நயவஞ்சகக் கூட்டம். வரலாறு நெடுக நாம் நம் இன துரோகிகளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறோம்.

இந்தத் தேர்தல் களத்தில் நம் மக்கள் இவர்களை சரியாக இனம் காண வேண்டும். இனம் காண தவறினால் திருவள்ளுவர், பெரியாரால், காமராஜர் போன்ற நமது தலைவர்களால் பெற்ற பேறு எல்லாவற்றையும் நாம் இழக்க நேரிடும். பின்பு அதை மீட்க மீண்டும் பலநூறு ஆண்டுகள் ஆகலாம்.  அதற்குள் நாம் இந்தியாவில் சிந்தி சிதறிப் போய்விடுவோம்.

தமிழ்நாட்டில் வடநாட்டவர்கள் கோலோச்சுவார்கள்.
நாம் நம் சூல் தளத்திலேயே ஏதிலியாய் ஆக்கப்படுவோம். இதை மிகை என்று எண்ணிவிடாதீர்கள். இந்திய பரப்பளவு முழுக்க பரவி வாழ்ந்த நாம் இன்று தமிழ்நாடு அளவு குறுகி விட்டோம்.

இந்தத் தேர்தல் போரில் தவறிழைத்தால் இருக்கும் இந்த நிலமும் பறிபோகும். பின்பு நம் வாழ்க்கை நாடோடி வாழ்க்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை எழுதி வைத்துக் கொள்ளலாம். நூற்றாண்டு கால வட இந்தியர்களின் திட்டத்தை இந்த தேர்தலில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஊழல், ஊழல் என்று ஒப்பாரி வைக்கும் இந்த மதவெறி கூட்டம் மக்கள் பணத்தை எல்லாம் பிடுங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வடநாட்டு வகையறா களுக்கும் கொடுப்பதால் உலக நாடுகளில் நடப்பதைப்போல் இதை முதலாளித்துவ அரசு என்று எண்ணி விடாதீர்கள். 

உலக முதலாளித்துவம் என்பது வேறு.
இந்திய முதலாளித்துவம் என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

வெளிநாடுகளில் உள்ள முதலாளித்துவம் பரவலாக நிறைய முதலாளிகளை உருவாக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இங்கு ஜி.எஸ்.டி. வரியாக கொள்ளை அடிக்கும் பணம், விலையேற்றத்தால் கம்பெனிகள் மூலமாக கொள்ளையடிக்கும் பணம் அனைத்தும் மத வெறியர்களின் பினாமியான இரண்டு மூன்று முதலாளிகளிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கும்.

அம்பானியும் அதானியும் உலகு அறியாத மத வெறியர்களின் கருவூலம்.
 இது அவர்கள் கொள்கைப்படி வட இந்தியர்கள் கைவசமே இருக்கும்.
 இதை எந்தக் காலத்திலும் மக்கள் போராடி பொதுவுடமை ஆக்கிவிட முடியாது. இந்தியாவில் முடியாது. தமிழ் நாடாயிருந்தாலும் சரி கேரளாவாக இருந்தாலும் சரி இவர்களை விடவும் வட ஹிந்தியர்களுக்கே முன்னுரிமையும் முழுவுரிமையும் கொடுக்கப்படும்.


இந்த நகர்வு, ஆதிகால மத ஆலோசகர்கள் ஆலோசனைபடி நடந்த பழைய மன்னராட்சிக்கே நம்மை கொண்டு செல்லும். இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன.

இதில் எவ்வளவு பேர் தங்கள் பணத்தை இழந்திருப்பார்கள்? ஆனால் நாட்டில் எந்த போராட்டமோ வேறுவகையான எதிர்வினையோ எழுந்ததாக செய்தி இல்லை. அந்த அளவுக்கு மக்களை மதத்தின் பெயரால் மழுங்கடிக்கிறார்கள்.

ஒருநாள் இந்த வங்கிகளை இணைத்து ஒற்றை வங்கியின் கீழ் நாட்டைக் கொண்டுவரக்கூட வாய்ப்பு உள்ளது. அதன் பெயர் "வட ஹிந்தியர்கள் வங்கி” என்று கூட இருக்கலாம்.

உலக முதலாளிகளின் நடுவிலாவது போராட்டத்திற்கான வழியும் இருக்கும் திசையும் இருக்கும்.

இங்கோ, வட இந்தியர்கள் ஓங்க, ஓங்க திராவிட மக்கள் செம்மறி ஆட்டு மந்தைகள் ஆக்கப்படுவார்கள்!

நம் இனம் மறுபடியும் அடிமையாய், கூலியாய் மானமிழந்து நாயினும் கீழாய் வாழும் நிலை வரும்.

வட இந்தியர்களின் சூழ்ச்சியினை பெரியாரின் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும். குறைந்தது 100 ஆண்டு திட்டம் வைத்தே அவர்கள் தங்கள் சூழ்ச்சியினை வடிவமைக்கிறார்கள்.

வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்டபோது இந்தியாவாக இருந்த நம்நாடு ஏன் ‘பாரதம்’ என்று பெயர் சூட்டப்பட்டது? பாரதம் என்பது அவர்களின் அரசியல் பெயர். சுதந்திரம் வாங்கும் முன்பே மதவெறியர்கள் இந்தியாவை பாரதம் என்றே அறிவித்துக் கொண்டார்கள்.

பாரதி கூட பாரத தேசமென்றே எழுதி வந்தார். பாரதம் என்பது வட இந்தியர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதே பொருளாகும்

 இதை சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நம் சங்கிக் கூட்டங்கள்தான் பாரத தேசம் உன்னதமான தேசம் என்று மக்களாட்சி கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் வட இந்தியர்களுக்குப் பின்னால் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோத்துக்கும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.

ஓரளவு தன்னிறைவு அடைந்தவர்கள் நாட்டைப் பற்றியோ நாட்டை ஆள்வோர் பற்றியோ சிந்திப்பதில்லை.. கஞ்சிக்கு வழியில்லாதவனுக்கு நாம் ஏன் துன்பப்படுகிறோம் என்று அவர்கள் அறிவுக்குத் தட்டுப்படுவதே இல்லை. படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள்.

இங்கே ஞானபீட விருதுக்கும், சாகித்ய அகதாமி விருதுக்கும் ஏங்கிக் கிடக்கும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிகள் தங்கள் எழுது கோல்களை கோவணத்தின் பின்புறத்துக்குள் ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.

வட இந்தியர்கள் ஆதிக்கத்திற்கு நாடு கொள்ளைப் போகப் போகிறது; இருந்தும் தங்கள் எழுது கோலில் வானத்தை நிரப்பி நவீனத்தை வருடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வட இந்தியர்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும் சாடுவதற்கும் மை இல்லை.

நூற்றாண்டு கால திராவிடத்தின் உழைப்பில் விளைந்து கிடக்கும் சூரிய கருவூலங்களை ஆன்மீகச் சாக்கடை வந்து மூழ்கடித்து விடுமோ என்று மூச்சுத் திணருகிறது.

 ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அ.தி.மு.க.வை கைப்பற்றி விட்டார்கள்.


தாய் வேடமிட்டு பூதகி தன் மார்பில் விசம் தாங்கி வருகிறாள்! அதை அறியாமல் வாய் வைக்கும் குழந்தைகள் மரணத்தால் முத்தமிடப்படுவார்கள்!!

 எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையைக் கூட உருவாக்குவார்கள்..
அந்த அளவுக்கு வடநாட்டவர் கை ஓங்கும். நாம் ஓரங்கட்டப் படுவோம். இதை நினைத்தால் இரவு பகல் தூக்கம் வராது யாருக்கும் ...

மாணவர்களே..சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களே விரைந்து செயலாற்றுவோம்.
நமது கருத்தியலை தாங்கி நிற்கும் கட்சிகளுக்கே வாக்களிப்போம்.

உடைப்பெத்து வரும் போலி ஆன்மீகச் சாக்கடையைத் தடுத்து நிறுத்த அது ஒன்றே சிறந்த வழி.

நன்றி....


(இது வாட்ஸ் அப்பில் எனது குழுவில் ஒரு நண்பர் ஃபார்வார்டு செய்திருந்தார்! யார் எழுதியது என்று தெரியவில்லை! ஆனால், 100% எனக்கு உடன்பாடான எச்சரிக்கையுடன், மிக அழகான கட்டுரை! முகம் தெரியாத அந்த தோழருக்கு தமிழினத்தின் சார்பாக எனது அன்பினிய வாழ்த்துக்கள்!!)

🌸🌸🙏🙏🌸🌸