Translate this blog to any language

புதன், 7 செப்டம்பர், 2022

யார் தீண்டத்தகாதவர்கள்?

மீன்கள் வாசமில்லா
குளங்கள் கொண்ட
கோவில்கள் உண்டா?

சந்தையில் வாங்கிய
பூக்கள் யாவும்
எந்த விரல்கள்
பறித்த பூக்கள்?

காய்ந்த
மாட்டின் சாணம்
வரட்டியில்
எங்கள் கைபடாத
விபூதி தான் உண்டா?

உங்கள்
ஆராதனை தட்டில்
விழுந்த காசுகளை
மனுதர்மப்படி
எப்படிப் பிரிப்பீர்?

எங்கள்
ஆடு மாடு கோழி
மேய்ந்து திரிந்து
போட்டக் கழிவுகளில்
முளைத்த
தர்பைப் புற்கள்
உங்கள் கைகளில்!

இப்போது
சொல்லுங்கள்
யார்
தீண்டத்தகாதவர்கள்?

-கவிஞர் கு.தென்னவன்

Courtesy:
WhatsApp University 

எனது நீண்ட கால நண்பர் "சமூக நீதிக் கவிஞர் தென்னவன்", அவர்கள் இன்று எழுதிய கவிதை!
🌸☘️❣️❣️☘️🌸


கண்டா வரச் சொல்லுங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா...?

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

சத்தீஸ்கர் மாநில அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே, புலம் பெயர் தொழிலாளிகளாய்
வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி கூட்டம் கூட்டமாக நடந்து வந்த தமிழனைக் கண்டதுண்டா..?
கண்டா வரச் சொல்லுங்க...!

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை  அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..!

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....
 
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!

மேலே சொன்னது அனைத்தும் உண்மை...

*மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.    

*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC)   கலைக்கப்படும்.   

*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.  
 
*சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.   

*அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி  ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.   

*தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.

*தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும்.   

*மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.

*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 

*ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.

*தமிழக காவல்துறையில்   முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.

*மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.

*சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

*அமைதிப்  பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும்.

*சிந்தித்து செயல்படுவோம்.*😢

Courtesy:
Whatsapp University
☘️🌸☘️🌸

திங்கள், 5 செப்டம்பர், 2022

கரைக்கப் போன எடத்துலே!


பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.
போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.
ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...
ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.
நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.
அவ்ளோ பெருசு.
பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.
ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.
மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி... 
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.
யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.
எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா
அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்...
எத்தனை செல..
ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே 
கருப்பா தான் இருந்தாங்க.
வெள்ளையா செகப்பா
ஒருத்தனை ஒருத்திய
பாக்க முடியல.

பூணூல்போட்டவங்களையோ 
சமசுகிருத மந்திரங்கள் ஒதுரவங்களையோ 
ஒருத்தரக் கூட காணோம் 

பட்டை போட்டவனும் இல்லை 
நாமம் போட்டவனும் வரவில்லை 
பட்டாடை உடுத்துனவங்களோ
வெண்நூலாடை போட்டவங்களோ
யாருமே இல்ல.
பெரிய பெரிய பதவில
இருக்கிறவங்க 
யாரும் கூட்டத்தில 
இருக்கிற மாதிரி தெரியல.
ப்ச்...
ஏன் அவங்கல்லாம்
வரலேன்னு ஒரு கேள்வி.
அவங்க இதெல்லாம்
செய்ய மாட்டாங்களான்னு
கூட ஒரு கேள்வி.
அப்போ
நம்ம மட்டுந்தான்
இதெல்லாம் செய்றமா?

நமக்கு ஏன் அறிவில்லாம போச்சி?

கூட்டம் கூடுறதுக்கும் 
கும்மி அடிக்கிறதுக்கும்
 குத்தாட்டம் போடுறதுக்கும் 
கலவரம் செய்றதுக்கும் மட்டும்தான் நாமளா?  
அதுவரை கொண்டாட்டமா
இருந்த மனம்
சட்னு வடிஞ்சிருச்சி.
அங்க நிக்கவே
ஒரு மாதிரி இருந்தது.
கைடு வாங்க 
காசு கேட்ட மவன் மொகம்
கண்ணுக்குள்ள வந்து போச்சு.
திரும்பிப் பாக்காம
நடையைக் கட்டிட்டேன்.

புத்தி வந்து சேர்ந்ததாலே 

இனிமேல் இந்தக் கூட்டத்துல 
ஒருநாளும் சேர மாட்டேன் 
சங்கியா நான் சாக மாட்டேன்!

Courtesy:
Whatsapp University Professors
🌸🌸🙏🙏☘️☘️

வெள்ளி, 27 மே, 2022

"மனம் மனம் அறிய ஆவல்", புத்தகம் Practical Psychology

☘️🌸☘️🌸
நண்பர்களே!

எனது "யோஜென் மைண்ட்" உளஇயல் மையத்தின், 
*"மனம் மனம் அறிய ஆவல்"* எனும் புத்தகம் அமேசான் கிண்டிலில் வெளிவந்துள்ளது! (அதை செல்பேசியிலும் படிக்கலாம்)

மனம் மனமறிய ஆவல்: உளஇயல் உண்மைக் கதைகள் (Tamil Edition) https://www.amazon.in/dp/B0B1WRRXT1/ref=cm_sw_r_apan_BVZGBWBVKS4KYW25Q507

சிறு சிறு கதை வடிவத்தில் 25 தலைப்புகளில் உளஇயல் சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி மிகச்சிறிய நுட்பமான ஆலோசனைகள் மூலம் முழுமையான அரிய தீர்வுகள், தரப்பட்டுள்ளன என்பதை இந்தப் புத்தகம் அழகுற விளக்குகிறது!

வாங்கிப் படியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி சமூக ஊடகங்கள் வழியாக சொல்லி 'லிங்க்' அனுப்புங்கள்!


மிக்க அன்புடன்
YozenBalki
(Mohan Balakrishna) 

www.yozenmind.com


புதன், 25 மே, 2022

எத்தனை வரி வசூல் டா ங்கப்பா!!!

ஒரே ஒரு 'வரி' கேட்டதுக்கே கட்டபொம்மனுக்கு அவ்வளவு கோபம் வந்தது...

கடவுளே!

நான் I.T. கட்டி விட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டி விட்டேன்
CST கட்டி விட்டேன்
Service Tax கட்டி விட்டேன்
Excise Duty கட்டி விட்டேன்
Customs Duty கட்டி விட்டேன்
Octroi கட்டி விட்டேன்
TDS கட்டி விட்டேன்
ESI கட்டி விட்டேன்
Property Tax கட்டி விட்டேன்
Stamp duty கட்டி விட்டேன்
CGT கட்டி விட்டேன்
Water Tax கட்டி விட்டேன்
Professional Tax கட்டி விட்டேன்
Corporate Tax கட்டி விட்டேன்
Road Tax கட்டி விட்டேன்
STT கட்டி விட்டேன்
Education Cess கட்டி விட்டேன்
Wealth Tax கட்டி விட்டேன்
TOT கட்டி விட்டேன்
Capital Gain Tax கட்டி விட்டேன்
Congestion Levy etc etc etc...
கட்டி விட்டேன்
TOLL GATE FEE - யும் 
 மாமூல்-ஐயும் கூட கட்டி விட்டேன்

இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாம் மை லார்டு.
😭😭😭

from Whatsapp University
-யாரோ

சனி, 21 மே, 2022

பெரியார் சொத்துக்கள் பெரியாரது முக்கிய கொள்கைகள் பரவ உபயோகப்படுகிறதா?

தந்தை பெரியார் அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்க நிறுவனம் என்று பெயர் வைத்து விட்டுப் போனார்; கூடவே இன்றைய பண மதிப்பு சில ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும்!


எந்த காரணத்துக்காக துவங்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக 90% வருமான மிச்சத்து வட்டியை செலவிடுவது தான் தம் வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைத்த அன்புப் பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அறத்தொண்டு ஆகும்! 

மாதந்தோறும் வரும் உபரி வருமானத்தில் 80-90% பணத்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்க முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதிய இலவச புத்தகங்கள் உலகம் முழுவதும் அனுப்பலாம், மாவட்ட செயலாளர்களுக்கு மாதம்தோறும் ஓரிரு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒரு நியாயமான தொகையைப் பிரித்து தரலாம்!

அதே போல, இந்திய மாநிலங்கள்/உலகம் முழுவதும் பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துக்களை (ஆர்எஸ்எஸ் வைத்துள்ள ஆயிரக்கணக்கான Paid Staffs முழு நேரத் தொண்டர்களைப் போல), சில நூறு பேரையாவது நியமித்து கொள்கைகள் பரப்பலாம்! 

இது போன்ற எந்தவொரு நீண்டகால பிரச்சார திட்டங்களும், கூர்நோக்கு பார்வையும் இல்லாமல் எப்படி தந்தை பெரியாரின் கருத்துக்கள், எதிரிகள் மற்றும் துரோகிகளின் பண-பலம் பிரச்சார-பலத்தை மீறி வளர இயலும்? 
நன்றாக யோசித்துப் பாருங்கள்!

தற்போது பெரியார் திடலில் உள்ளவர்கள், அச்சு அசலாக பிற பல உலகிலுள்ள
மதவாதிகளைப் போலவே கல்வி நிறுவனங்கள் நடத்துவது, அதில் வரும் இலாபத்தில் இன்னொரு கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது, திராவிட நலநிதி என்று வட்டிக்கு விடுவது, என்ற வகையில் மட்டும் 90% பணம், உழைப்பு, நேரத்தை செலவு செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது! உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா?

நாம் மிக மிக அபாயமான பெருநோய்கள் பீடிக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்! தந்தை பெரியார் கொள்கைகள்தான் அதற்கு அருமருந்து என மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதே! அந்த "சமத்துவம்-சமூக நீதி", என்னும் மாமருந்து மானுட சமூகம் முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டாமா?

ஆக, பெரியார் கொள்கைகள் மீது உண்மையான பற்று உள்ளவர்கள்
பெரியார் சம்பாதித்த சொத்துக்கள், அவரது முக்கிய கொள்கைகளைப் பரப்புவதற்கு எத்தனை சதவீதம் பயன்படுகிறது என்ற மிக மிக முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்! 

இது யாரையும் கொச்சை படுத்துவதற்காக அல்ல; காலமெல்லாம் நமது சூத்திர மக்கள் இழிவு நீங்க மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு உழைத்த, ஈடிணையற்ற அந்த அன்பின் பேரொளி, தந்தை பெரியாரின் நோக்கங்கள் சீக்கிரம் நிறைவேறத் தாம்!

-YozenBalki

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

EB ஆஃபீசரும் வாழைப்பழமும் !!

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்...

*EB ஆபிஸர் :* வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி :* சார், பழத்தை எதுக்கு வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் விலை செல்ல முடியும்...?

*EB ஆபிஸர் :* என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி :* இல்ல சார், நீங்க இந்த வாழைப் பழத்த கோயிலுக்குனு வாங்குனா ஒரு பழம் 5 ரூபா.

வீட்ல குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 7 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா ஒரு பழம் 10 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 20 ரூபா சார்.

*EB ஆபிஸர் :* யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

*வியாபாரி :* This is my tariff plan.
 நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு, வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி Rate னு சொல்வீங்க. கேட்டா tariff plan னு சொல்லுறீங்களே சார்!!!!."
😂😛

*Banana vendor rocked..*👍😂
*The EB officer shocked.*😳😳

⚡⚡🤩🤩💯💯⚡⚡

-Whatsapp University

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தற்போதைய இந்திய அரசியல் அமைப்பின் முரண்பாடுகள்!

⚔️🇮🇳✒️🇮🇳⚔️மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா குறிப்படுவது:

😰🇮🇳😰சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

நீங்களே முடிவு செய்யுங்கள்:

✒️🇮🇳🥨 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.

✒️🇮🇳🥨 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும்,
ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.

🥨🇮🇳✒️ 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

✒️🇮🇳🥨 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும்.
ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.

🥨🇮🇳✒️அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம்.

🥨🇮🇳✒️ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு.

🥨🇮🇳✒️ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

🥨🇮🇳✒️ இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டுமா, இல்லையா?

🥨🇮🇳✒️தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா?.

🥨🇮🇳✒️இந்த செய்தியை அனுப்புவதன் மூலம் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்கவும்.

🥨🇮🇳✒️நீங்கள் முன்வரவில்லை என்றால் எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள்.
ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

🥨🇮🇳✒️திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
தலைமை அரசு வழக்கறிஞர்,
பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

🥨🇮🇳✒️இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
அனைவருக்கும் பகிர்வோம். 💐⚔️🙏🇮🇳🕉️☪️✝️🇮🇳🙏⚔️💐

Source: From
Whatsapp University

வியாழன், 23 டிசம்பர், 2021

நிலக்கடலை: நவீன மருத்துவத்தின் எதிரி!

மல்லாட்டை... 
கல்லக்கா..
வேர்க்கடலை..
இப்படி எல்லாம் சொல்லப்படுகின்ற
"நிலக்கடலை"
நவீன மருத்துவத்தின் எதிரி
என்றே  கருதப்படுகிறது!

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!

#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

★ நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

★ இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

★ இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

★ மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

★ கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. 

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

 எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, 
பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

 நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...

எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தானம் கொடுக்கிறோம் ஏன்???

-Courtesy Web World

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

தள்ளுவண்டி காய்கறி 5 இலாபம் என்ன?

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.

 “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு 5 நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். 

ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். 

பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். 

அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். 

நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. 

இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... 

சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். 

நூறு ரூபாய்க்கு ஆறு ரூபாய் லாபம். 

முதல் நன்மை.

சார் நீங்கள் சூப்பர் மார்க்கேட் செல்ல வேண்டாம், நானே உங்கள் வீடு தேடி வந்துள்ளேன். நேரம், பெட்ரோல், மற்றும் உழைப்பு மிச்சம். சிரமம் இல்லை.

இரண்டாவது:

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... 

சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். 

( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). 

இது 2வது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். 

சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். 

எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். 

நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். 

ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. 

எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 

20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன்.

 “சார் நான்காவது நன்மை இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. 

இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. 

மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். 

அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். 

பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. 

இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. 

நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். 

இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும்.

இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்!

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். 

நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா?

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர சிறுகடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு!

(Courtesy: WhatsApp University)
😂😂


புதன், 29 செப்டம்பர், 2021

எங்களை பார்த்து நீங்க திருந்திக்கணும்! ஹிந்தி வேண்டாம்

பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணி:

கடந்த சனிக்கிழமை ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம்.

அவரோட அப்பா பெங்களூர் யுனிவர்சிட்டி ரிட்டயர்டு ப்ரஃபசர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, துளு, ஆங்கிலம் என பல்மொழி வல்லுனர்.

கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்.

கன்னடர். அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. 

 அவர் கூறியது, எனது ஹிந்தி மொழிகுறித்த சிந்தனையையே மாற்றிவிட்டது.

அவர் கூறியது... :

உங்கள் தமிழகம் போல ஆட்சி செய்யனும்னுதான் நாங்களும் விரும்பறோம்... 
( அவர் சொன்னது மேடம் மறைவுக்கு முன்னர் வரையிலான அரசுகள்..)

அங்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் அருமையான கட்டமைப்பை உருவாக்கி வச்சிருக்காங்க. 

ஆனா இப்ப அங்கேயும் வடமாநில ஆதிக்கம் ஊடுறுவரத பாக்க முடியுது. 

ரொம்ப வேதனையா இருக்கு.

 எங்களை பார்த்து நீங்க திருந்திக்கணும். 

இங்க பெங்களூர்ல ஹிந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாகிடுச்சி.

கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிரமிச்சிட்டாங்க.

அவன் வடநாட்டுல எங்கிருந்தோ இங்க வந்து ஹிந்தில பேசறான். 

 எனக்கு ஹிந்தி மட்டுந்தான் தெரியும்னு ஆணவமா சொல்றான்.

கன்னடம் தெரியாதுங்கறான்.

எவரும் உலகத்துல எங்க போனாலும் அந்த பிரதேச மொழியில பேசறதுதான் வழக்கம். 

ஆனா இங்க மட்டும் அவனுக்காக நாங்க எங்க தாய்மொழிய விட்டுவிட்டு அவன்கிட்ட ஹிந்தில பேசற நிலைமைக்கு வந்துட்டோம்.

 மொழிங்கறது வெறும் பேச்சில்லைமா.

அது வாழ்க்கை. 
ஜீவாதாரம்.

ஆனா நாங்க அந்த ஜீவாதாரத்தை தொலைச்சிகிட்டு இருக்கோம்.

இப்ப எங்க தாய்பூமி பெங்களூர்ல குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ முடியும்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டு வருகிறோம்.

சிட்டியில முக்கிய இடங்கள்ல அவனுங்கதான் வாழறாங்க.

.... சித்தராமையா கூட

நான் ஸ்கில் லேபர்ஸ் கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் போடப்போறதா அறிவிச்சாரு. 

ஆனா முடியவில்லை. 
வடமாநில பிரஷர்தான் காரணம்மா.

இதுக்கெல்லாம் அடிப்படை காரணம்..

தமிழகம் மாதிரி மாநிலநலன் சார்ந்த கட்சிகளை நாங்க ஆதரிக்காம தேசியகட்சிகளை ஆதரித்ததுதான் மிக முக்கிய காரணம்.#

தமிழகம் போல இருமொழி கொள்கை இல்லாம மும்மொழி கொள்கையை ஏற்றதுதான் அழிவு!

நவோதயா பள்ளி ஆரம்பிச்சா மத்திய அரசு நிதி தரும்.
அது தரும் இது தரும்னு 
ஆசை காட்டுவாங்க. 

அது உங்க நன்மைக்கு இல்லை. 

அவன் ஆளுங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகப்படுத்ததான்.

தமிழுக்கு என்னம்மா குறை??

ஏன் ஹிந்தி கற்க ஆர்வப்படுறீங்க..?

உள்ளூர் தொடர்புக்கு தமிழ் ,
உலகத்தொடர்புக்கு ஆங்கிலம் போதும்மா.

இப்பவே பல நிலைகளிலும் உங்க வேலைவாய்ப்புகளை ஹிந்திகாரங்க பறிக்க துவங்கியாச்சி. 

நீங்க ஹிந்திமேல ஆர்வப்பட்டா அவங்க ஊடுருவுவதும் தன் ஆட்களை தென் மாநிலங்களில் குடியேற்றுவதும் எளிதாகிவிடும்...

எனவே,
அனுபவபட்டவன் என்கிற முறையில நான் சொல்றேன்.

ஹிந்தி கற்க ஆர்வப்படாதீங்க.

ஒருவேளை வடமாநிலத்துக்கு யாராவது வேலைக்குபோனா அவன் தானா ஹிந்தி கத்துக்குவான்.

ஹிந்தி கத்துக்க ஆர்வப்படாதீங்க. மும்மொழிக்கொள்கையை ஆதரிக்காதீங்க.

தேசிய கட்சிகளை ஆதரிக்காதீங்க.
இதெல்லாம் செஞ்சா உங்க
வாழ்வாதாரமே சீரழிஞ்சிடும்.

 உங்க தலைமுறைக்கு பிறகு உங்க இனமும் அவனுக்கு அடிமைபட்டு போய்டும்..._ 
என வருத்தப்பட்டு கூறினார்.

இது எந்தளவு ஏற்புடையது என நீங்கதான் சொல்லணும். 

எனக்குத் தெரிந்த சில மொழியியல் பேராசிரியர்கள் பெங்களுருவில் உண்டு, அவர்களுடைய கருத்தும் இதுவே!

மும்பையில் வாழ்பவருக்கு மராத்தி கொஞ்சம் கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை! கண்ணன். ஏன் இந்த நிலைமை அந்த மண்ணுக்கு ஏற்பட்டது?

நாங்கள் ஓரளவுக்கு மொழிகளின் வரலாறும், மானுடவியலும் படித்தவர்கள் . இந்தியோ சம்ஸ்கிருதமோ இத் தமிழ்மண்ணில் வளர்ந்தால், தமிழ் தானாக அழிந்து படும்.

அப்படி, தமிழ் அழிந்து தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு உருவாயின.

மறைமலையடிகள் சோமசுந்தர பாரதியார், திரு வி க, கி ஆ பெ, பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் ஆகியோரால் நம் மொழி காப்பாற்றப் பட்டது.

இந்த வரலாறு எதுவும் அறியாமல் பி ஜே பி கட்சியைச் சார்ந்த தமிழர்கள், மும்மொழித் திட்டம் சிறப்பானது, எனப் பேசி வருகின்றனர்.
இந்த ஒரு விஷயத்திலாவது நீங்கள் வித்தியாசமாக இருங்கள்! நாளைக்கு உங்கள் மனசாட்சி உங்களைத் ' தாய் மொழித் துரோகி என சபிக்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்.

உடனே, இவர் பெரியாரியவாதி ! இப்படித்தான் பேசுவார் என்று நினைக்காதீர்கள்!

ஒரு மொழி தோன்றிய பின்னரே மதம், கடவுள்,ஜாதி . கலாச்சாரம் பண்பாடு ஆகிய எல்லாம் தோன்றும்! ஆனால் பயத்தின் விளைவால், நாம் கடவுளின் பால் காட்டும் ஈடுபாட்டில், சிறிதளவு கூட தாய்மொழி மேல் காட்டுவதில்லை.

 தாய் மொழி மறந்த சமூகம் அடிமைச் சமூகமாக மாறும் என்பது திண்ணம்! இதுவே கடந்த கால வரலாற்று உண்மை!

Msg forwarded as received...
----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தமிழகத்தில் பெருகி வரும் சவுகார்பேட்டைகள் - எச்சரிக்கை!!!!

சென்னை, பாரிமுனைப்பகுதி, சவுகார்பேட்டையில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல.
அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.

ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும், தனியார் பள்ளிகள் போல இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.

1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school

உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னை சவுகார்பேட்டையில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பது இல்லை. தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை.
தமிழ் மாணவர்களைச் சேர்க்கச் சென்றால் அவர்கள் சொல்வது, 'அவர்களைச் சேர்த்தால் எங்கள் பள்ளியில் வீண் பிரச்சினை ஏற்படும்' என்பதாகும். மேலும் ஓரிரு ஆசிரியர்களைத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பார்ப்பனராகவே இருக்கவேண்டும். பார்ப்பனராக இருந்தாலும் இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். இங்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. 

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து இப்பள்ளிக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நடுப்பகுதியான சவுகார்பேட் டையில் தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் வஞ்சகம் செய்து கொண்டிருக்கும் இவ்வகையான பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்பொழுது குஜராத்தில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி தமிழ்வழிப் பள்ளியை மூட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது குஜராத் அரசு.
அந்தத் தமிழ்ப்பள்ளி, தங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க அனுமதி கேட்கிறது. ஆனால் அனுமதி மறுக்கிறது குஜராத் அரசாங்கம். 

ஆனால் இங்கே சவுகார்பேட்டையில் உள்ள 28க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்பு நடத்துவதற்கும் தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே சொல்லித்தராத இந்தப் பள்ளிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி உதவி அளிப்பது சரியா? இங்கு நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வட இந்தியாவிலிருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணி அமர்த்துகிறார்கள்.

அவர்கள் எந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெறவில்லை.. அவர்களுக்கென இருக்கும் சிறப்பு அனுமதியின் பேரில் ஆசிரியப் பயிற்சியைப் பெற அவர்களை இங்கே பணியமர்த்தி ஊதியம் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரமான சென்னையில் தமிழ்நாட்டவருக்கோ, அவர்களின் தாய் மொழியான தமிழுக்கோ சம்பந்தம் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகப் இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு எப்படி நடக்க முடிகிறது என்பது ஆச்சரியப்பட வேண்டியதுதான்.
கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியவே தெரியாதா?

சவுகார்பேட்டையில் சமீப காலங்களில் வந்து சேர்ந்த வடநாட்டுக்காரர்கள் குடியிருப்பு அதிகம் இருக்கலாம்; அதே அடிப்படையில் வடநாட்டு மாணவர்கள் அதிகம் சேர்க்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக, இந்த மண்ணின் பூர்வ குடிகளான தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்பது எப்படி சரியாகும்? ஆசிரியர்களும் பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களாகவும், பார்ப்பனர்களாகவும் இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பொதுவாக சென்னையில் மட்டும் வணிகத்தில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த வட மாநிலத்தவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டின் நகர கிராமப்புரங்கள் வரை தங்களின் வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள்.

ஒரு கால கட்டத்தில், (1970-கள் துவங்கி) வடநாட்டவர்கள் வசிக்கும் பகுதி என்று சவுகார்பேட்டையை மட்டுமே சொல்லுவதுண்டு. இப்பொழுது அப்படி இல்லை; சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களின் குடியிருப்புகள் அடுக்கு மாடிக் கட்டடங்களாக உச்சியைத் தொடுகின்றன.

அத்தகைய வட ஹிந்திய குடியிருப்புகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. வெளிப்படையாகவே மறுக்கவும் செய்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்குமானால் இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

வடநாட்டிலிருந்து தொழிலாளர் வந்து குவிவது ஒரு பக்கம்; மொத்த வியாபாரங்கள் (Whole Sale Trade) அனைத்தும் அவர்களின் கையிருப்புக்கு போய்விட்டது! அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது - தேர்தலில்கூட அவர்களின் கணிசமான வாக்குகள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஆபத்து இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது! அரசியல்வாதிகள் கவனம் இந்தப் பக்கமும் திரும்ப வேண்டியது அவசியமே!

இப்படிக்கு
-நாடுகளாண்ட தமிழினம்

(Courtesy: WhatsApp University)

இந்த அபாயம் பற்றி நான் பல ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறேன்! 1990-களில் வருந்தியும் வெகுண்டும் எழுதிய ஒரு கவிதை கூட எனது கவிதைப் புத்தகத்தில் இன்றும் உண்டு!

தமிழ் இனத்துக்கே உண்டான ஒரு சாபக்கேடு உண்டு! அது என்னவென்றால், விருந்தினர்கள் யார் வந்தேறிகள் யார் என்று தெரியாத அறிவீனம்!

விருந்தினர்கள் சில காலம் இங்கு தங்கலாம்! ஆனால் அவர்களே இங்கு நிரந்தரமாக குடியேறி பெரும்பான்மை மக்களாக மாறுவது ஏற்கத்தக்கதல்ல! பிறகு இந்த மண்ணின் மைந்தர்களின் கதி என்னவாகும்? 

இங்கு மட்டுமல்ல உலகின் எந்த பகுதியிலும் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் குறைந்தது 90 சதவீதம் இருக்க வேண்டும் என்பதே எனது வெளிப்படையான கருத்தாகும்! 

சரி அது ஒரு புறமிருக்க,
பிறகு மொழிவாரி மாநிலங்கள் என்பதன் பொருள் தான் என்ன?
இந்தியா என்ற ஒன்றியம் உருவாகுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சேர சோழ பாண்டிய தமிழக அரசுகள் இந்த பூமியை ஆண்டு வந்தன என்ற வரலாற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

இந்த தமிழகத்தில் நிலைத்த நாகரீகமாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து கோயில்கள் குளங்கள் உலகின் பழமையான அணைக்கட்டுகள், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலங்கள், அறநூல்கள், கூடி வாழும் குடும்ப வாழ்க்கை போன்ற நல்லறங்கள் யாவும் செய்தவன் தமிழன்! 
ஆக, தமிழினத்தைச் சேர்ந்த நாம், நமது பூர்வீக இடத்தோடு சேர்த்தே நம்மையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! பிறந்த மண்ணை இழப்பவன் உலகின் எந்த நாட்டிலும் எல்லா காலங்களிலும் அடிமையாக தன் வாழ வேண்டும்! இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் அந்தந்த பூர்வகுடிகள் கிளர்ந்து எழுவார்கள்!

ஆனால் தமிழர்களுக்கு மட்டும் தன் சொந்த பூமி கொள்ளை போவது பற்றிய
பிரக்ஞை எதுவுமே இருப்பதில்லை!

இல்லையென்றால்
பிழைக்கப் போய் இலங்கையில் சேர்ந்த, நாடோடிச் சிங்களவர்கள், அங்கு நிரந்தரமாக வாழ்ந்து வந்த இராவண தமிழினத்தை நாடோடிகளாக ஏதிலிகளாக மாற்றி நம் கண் முன்னே அகதிகளாக பல நாட்டுக்கு மூட்டை கட்டி விட முடியுமா?

இன்னும் இந்த பேரவலத்தை, நமது மண்ணை, நமது பூர்வகுடி உரிமைகளை உணரத் தவறிய குற்றவாளிகளாகவே நாம் இருக்கிறோம்!

தமிழகத்துக்கும் அதுதான் கூடிய விரைவில் நடக்கலாம்! அது நடக்காமல் இருப்பது அனைத்துக்கட்சி தமிழர்களின், தலைமைக்கு ஒரு சவாலான சங்கதி தான்!
ஒரு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடல் வரிகள் போல 
"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!"
என்ற கதை ஆகிவிடக்கூடாது!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

YozenBalki

திங்கள், 6 செப்டம்பர், 2021

தன்னிரக்கம் (Self-Pity) என்பது என்ன?

ஒரு நாள் உங்களைப்பற்றி நீங்களே வருத்தமாக உணர்ந்த ஒரு சூழ்நிலையை எண்ணிக்கொள்ளுங்களேன்!

இது எப்போது நடந்தது? சென்ற வாரமா? நேற்றைக்கா? இன்றைக்கா? அப்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்? பல நேரங்களில், "நாம் நம்மையே குறைவாக எண்ணி விமர்சனம் செய்துகொள்கிறோம்". குறிப்பாக, நாம் எதையும் கச்சிதமாகச் செய்ய எண்ணும்போது, நம் மீது குறை சொல்கிறோம். வீட்டில், அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில், மனநலப் பிரச்னை கொண்ட ஓர் உறவினரைக் கவனித்துக்கொள்ளும்போதுகூட. இப்படி ஒருவர் தன்னைத்தானே குறைவாக எடைபோட்டுக்கொண்டால், விமர்சனம் செய்துகொண்டால் என்ன நடக்கிறது? அதனால் அவர் திருந்திவிடுகிறாரா? மேம்பட்டுவிடுகிறாரா?

ஒருவர் முன்பைவிடச் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்று எண்ணும்போது, அவர் தன்னைத்தானே விமர்சனம் செய்துகொள்வது இயற்கைதான். ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்து நீடித்தால், அது அவரது சிந்தனையை, நடவடிக்கைகளைப் பாதிக்கத்தொடங்கினால், அதனால் அவருக்கு மனநலப் பிரச்னைகள் வரக்கூடும்! ஒருவர் எந்த அளவு தன்னையே விமர்சனம் செய்துகொள்கிறார் என்று அவரே கவனித்து அறியலாம், இதற்கு அவர் தன்னுடன் மனதுக்குள் பேசவேண்டும். மனிதர்கள் எல்லாரிடமும் சில போதாமைகள் இருக்கும், தோல்விகள் இருக்கும், அதற்காக ஒருவர் தன்னைத்தானே தாழ்வாகக் கருதினால், தன்னை விமர்சனம் செய்துகொண்டால், தன்னிரக்கம் அவருக்குப் பயன்படவும் கூடும்!

தன்னிரக்கம் என்றால் என்ன?

இரக்கம்: ஒருவருடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது இன்னொருவருக்கு ஏதோ பிரச்னை, அதனால் மிகவும் சிரமப்படுகிறார், அப்போது அவரைப்பார்க்கும் ஒருவருக்கு மனத்தில் இரக்கம் தோன்றும், அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வார், ஏதாவது செய்யவேண்டும், அவரைச் சிறப்பாக உணரச்செய்யவேண்டும் என்று எண்ணுவார்.

தன்னிரக்கம்: இது தன்மேலேயே இரக்கம்கொள்வது. வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக மாற விரும்பும் ஒருவர், அதற்காகத் தன்னை விமர்சித்துக்கொண்டே இருப்பது! 

ஆனால், அதற்கு மாறாக மென்மையான, கருணையான, அக்கறையான வழிகளில் தனக்குத்தானே ஊக்கம் தந்துகொள்ளலாமே! அதற்குத் தன்னிரக்கம், ஒருவகையில் உதவுகிறது.

தன்னிரக்கத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன:

மனமுழுமை:  

சூழ்நிலைகளை ஒரு சமநிலையான விதத்தில் பார்த்தல், தன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறுகுறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் கவனித்தல். அதேசமயம், அவர்கள் தங்களை எடைபோட்டுக்கொள்ளாமல், அந்த எண்ணங்கள், உணர்வுகளிலேயே சிக்கிக்கொண்டு மூழ்கிவிடக்கூடாது.

பொது மனிதத்தன்மை:

மனிதனாக இருப்பதுபற்றிய ஒரு தத்துவபூர்வமான நிலையை எடுத்தல். சாதாரண மனிதன் இறக்கக்கூடியவன், அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் வரலாம், அவன் முழுமையானவன் அல்லன், இதையெல்லாம் நினைவில் கொள்வது. ஆக, எதையோ எண்ணி சிரமப்படுவது, தனிப்பட்டமுறையில் போதாமை உணர்வு கொள்வது போன்றவை மனித வாழ்க்கையின் பகுதிகள்தான், அவை ஒருவருக்குமட்டும் நிகழ்கிறவை அல்ல என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்

சுய-கருணை: 

சிரமங்களைச் சந்திக்கும்போது, தோல்வியடையும்போது, போதாமையை உணரும்போது, தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல், தன்மீது பொறுமையாக இருத்தல், தன்னைச் சகித்துக் கொள்ளுதல். இது ஒருவருக்கு மிக மிக அவசியம்!

தன்னிரக்கத்தின் பலன்கள்:

தன்னிரக்கத்துக்குப் பல பலன்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன: மேம்பட்ட நேர்வித உணர்வுகள், வாழ்க்கையில் திருப்தி, அறிவு, நேர்ச்சிந்தனை, குறுகுறுப்பு, இலக்குகளை நிர்ணயிக்கக் கற்றுக்கொள்ளுதல், சமூகத்துடன் இணைந்திருத்தல், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உணர்வுநிலையில் எதிர்த்து நிற்கும் திறன், போன்றவை!

இன்னொருபக்கம், தன்னிரக்கம் எதிர் திசையில் சென்றால், ஒருவர் தன்னைத்தானே மிகையாக நினைத்துக் கொள்ளக்கூடும்! அதனால் ஒரு வித மனச்சோர்வு, பதற்றம், அதீதச் சிந்தனை, எண்ணங்களில் அமுங்கிப்போதல் மற்றும் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்ற பரபரப்பு உணர்வு போன்றவை அதிகரிக்கக்கூடும்.

ஒருவர் தன்னிரக்கத்தை நேர்மறையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி?

அவர் எப்போதும் தன்னைத்தானே தீவிரமாக விமர்சித்துத் தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடாது, தர்க்கம், பகுத்தறிவு அல்லது தத்துவத்தைக்கொண்டு அதற்குப் பதில்சொல்லவேண்டும்.

அவர் 'தன்னிரக்க நாட்குறிப்பு' என ஒன்றை எழுதத்தொடங்கலாம். ஒவ்வொரு நாளும் அவர் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்ட சிந்தனைகள், உணர்வுகளைக் குறித்துவைக்கலாம். இன்னொரு நண்பரிடம் "அந்தச் சொற்களைச்" சொல்வோமா, என்றும் சிந்தித்துப்பார்க்கலாம். தன் மீது இரக்கம்கொண்ட ஒரு நண்பராகத் தன்னையே கற்பனை செய்துகொண்டு, தனக்கு ஒரு தன்னிரக்கக் கடிதம் கூட எழுதுதலாம்.

தன்னை ஏற்றுக்கொள்ளுதல், அதாவது, தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளுதல், தானொரு மதிப்புக்கு உரியவர் என்று உணர்தல். 
பின்வாங்குதல்கள், தோல்விகள், தனிப்பட்ட போதாமை போன்றவை ஏற்படும்போது, தன்னைத்தானே மன்னித்துக்கொள்ளப் பழகுதல் வேண்டும். இதுவே தன்னிரக்கத்தை (Self-Pity) வெல்லும் வழி!

🌸🌸☑️☑️🌸🌸

இந்தக் கட்டுரை உபயம் கூகிள்:
Courtesy Google

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

பாவம் கொள்ளை அடிப்பவன்!

பாவம்
கொள்ளையடிப்பவன்!

அவனுக்கு
எதுவும் "எக்ஸ்ட்ரா"
தரப்படவில்லை!

இருந்தும்
அவன் 
குறுக்குவழியில்
கொள்ளையடித்து
உழைத்து உழைத்து
கட்டிடங்கள்
நிறுவனங்கள்
பணியாளர்கள்
என்று
உருவாக்கி விட்டு
ஒரு நாள் ஓய்ந்து
உதிர்ந்தே 
போகிறான்!

பாவம் 
கொள்ளையடிப்பவன்!

-YozenBalki
💐💐😂😂