Translate this blog to any language

வியாழன், 6 ஏப்ரல், 2023

தமிழக கோயில்களில் ஒரு ரகசியம்!!

நமது தொன்மை தமிழகத்தின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.

அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு!

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய மன்னர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துவரப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், குதிரைகள், துணிகள், கைவினைப் பொருட்கள், உணவுதானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

ஏன் கோவிலை கட்டினார்கள்?
 தானிய கிடங்காக நீதிமன்றமாக மருத்துவ சேவைக்காக. 


தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ??

உலகின் குருவாக சோழநாடு ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜெட் போடுவார்கள்.

இதையேதான் தமிழர் கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் தமிழினக் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், ஆரிய பார்ப்பனர் இங்குள்ள நம் தமிழர் பாரம்பரிய முறையை கைப்பற்ற முயன்றனர் ஆங்கிலேய ஆதிக்கத்தினருடன் கைகோர்த்தனர் ..

தமிழ் சித்தர்களை வதை செய்தனர் அதனால் தான் சித்திரவதை என்ற வார்த்தையே உருவானது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என ஆரிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும் என நம்ப வைத்தனர்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம் என சொல்லி சுரண்டினர்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை மட்டுமே உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழ்நாடு உலக குருவாக திகழ்ந்தது.

இன்று வரை தழிழை அழிக்க துடிக்கும் வட ஆரிய பார்ப்பன சக்திகள் தயிரை "தஹி" என சொல் என்கிறார்கள். .

தமிழ் எங்கள் உயிர்..

வாழ்க தமிழ்🙏
இதுதான் உண்மையான வரலாறு...
 🙏🙏🙏🙏
Courtesy: Whatsapp University
🌸☘️😎😎

திங்கள், 3 ஏப்ரல், 2023

தமிழ் அறிவு மிக்க எங்கள் கிராமத்து தேவதைகள்!

ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.

ஒரு வாரம் ‘போபியா’ (Pobhia) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. 

அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார்.  

அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். 

சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக்கு தலைமையேற்க சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அந்த பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட எண்ணி தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவியாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

காலை 8 மணி. 60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். 

நீதியரசர் அவர்கள், “தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்தனையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். 

ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடுதேடியே வந்திருப்பேன். 

தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....!!

ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா?" 
பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.

( அந்த 47 வார்த்தைகள்...)

(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்;
 
(2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; 

(3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்;
 
(4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்!

“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியம் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. 

வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.

“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி. 

தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.

பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்!

பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!

 வாழ்க தமிழ்

Courtesy: From Whatsapp University
🌸☘️😎😎🌸☘️

வியாழன், 9 மார்ச், 2023

கூலி வேலைக்கு தமிழ்நாட்டில் தமிழ்ப் பிள்ளைகள் இல்லை!

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு வடநாட்டு பிள்ளைகளுக்கு போவதால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கி விடும் என்றெல்லாம் சிலர் திட்டமிட்டு பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்!

உங்கள் குடும்பத்திலோ அல்லது நம் வேறு யார் குடும்பத்திலோ கூலி வேலைக்கு போகிற இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா?

அப்படி இல்லாத இளைஞர்கள் எப்படி தமிழகத்தின் ஹோட்டல்களில் துணிக்கடைகளில் தள்ளுவண்டி கடைகளில் கூலி வேலைகளில் இருக்க முடியும் சொல்லுங்கள்!!

கடந்த நூறு வருட திராவிடர் இயக்க ஆட்சிகளானது கல்வியில் நம்முடைய இளைஞர்களை மேல் நோக்கி அவர்களை அதிகாரிகளாக உயர்த்தி இருக்கிறது!

வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல கூலி வேலைக்கு தமிழ்ப் பிள்ளைகள் கிடைக்காததால் படிப்பறிவற்ற வடநாட்டுப் பிள்ளைகள் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர்!

இருப்பவன் இல்லாதவனுக்கு கூலி தருகிறான்!

இதில் என்ன பொருளாதார கூந்தல் வந்து தமிழகம் பின்தங்கி விடும்?

அப்படி பார்த்தால் வெள்ளைக்காரனுடைய அச்சடித்த டாலருக்காக இங்குள்ள இந்தியர்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் எல்லாமே அல்லும் பகலும் வேலை பார்க்கின்றனரே! 
அவர்கள் எல்லாம் தன்னுடைய பொருளாதாரத்தை இழக்கின்றனரா... அல்லது வளர்கின்றனரா?

இப்படி பொத்தாம் பொதுவில் பேசி ஏதோ ஒரு வகையில் தமிழ்நாட்டை குறைத்து மதிப்பிட்டு அதன் வழியாக திமுக ஆட்சி சரியில்லை என்று சொல்ல வருவது தான் அவாளின் கெட்ட உள்நோக்கம் போல தெரிகிறது!

நமது தமிழ் பிள்ளைகள் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு மகிழ்ச்சியோடு இருங்கள்! 

நமது தமிழ்நாடு உலகத்தின் பிற எல்லா நாடுகளையும் விட கல்வியில், வேலைவாய்ப்பில் உயர்ந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! உலகின் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் வாழும், அதிகம் படித்த இன்ஜினியர் டாக்டர் என்று உயர்ந்திருக்கிற ஒரு பகுதி தமிழகம் தவிர வேறு எங்குமே கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற இயலும்!

அதேசமயம் தமிழ்நாட்டில் பிற மாநில மக்களை உள்ளே அனுமதித்து அவர்களுக்கு ஓட்டுரிமை, வாழ்விட உரிமை எல்லாம் அளித்து ஈழத் தமிழர்களுக்கு நடந்தது போல தமிழ்நாட்டு தமிழர்கள் ஏமாளிகளாகக் கூடாது!

அதற்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசுகள் கவனமாக சட்டம் இயற்றி நமக்கு என்று இருக்கின்ற ஒரே ஒரு தமிழ் மாநிலத்தை ஒரு புத்திசாலித்தனத்தோடு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

இல்லாவிட்டால் நமக்கும் இலங்கையில் நடந்தது போல் நடந்து, பார்ப்பன பனியாக்களின் சூழ்ச்சியால், நாடற்றவர்களாக வீடற்றவர்களாக நாடோடிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும்!

கவனம் கவனம் கவனம்!

-YozenBalki 

புதன், 1 மார்ச், 2023

திமுகவின் போக்கு புரியவில்லை!

எந்த பெரிய அவசியமும் இல்லாத ஒரு சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஓடோடிச் சென்று மோடியைச் சந்தித்து பேசி இருக்கிறார்; ஏதோ வேறு மூத்த அமைச்சர்கள் இல்லாதது போல! 

வரலாற்றில் மிக மிக முக்கியமான திராவிட-ஆரியப் போர் என்ற சூழலில் நாம் நிற்கிறோம்!

இந்திய ஒன்றிய முழுவதும் பார்ப்பனர்கள் தங்கள் பழங்காலத்து சனாதன அதர்ம திட்டங்களை வேகமாக விதைத்து வருகிறார்கள்!

பார்ப்பன துரோணாச்சாரியார்கள், சூத்திர ஏகலைவன்களின் கட்டைவிரலை காணிக்கை கேட்க காத்திருக்கிறார்கள்!

கல்வி வேலை வாய்ப்புகளில் இனி ஒடுக்கப்பட்ட தமிழினம், மற்ற மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இனங்கள் மேலே வருவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் பற்பல கொடிய சட்டத்திட்டங்களை, சதிவேலைகளை 
சங்பரிவார பாஜக சத்தம் இல்லாமல் செய்து வருகிறது!

இது போன்ற சூழலில் ஒரு வேளை திமுகவுக்கு பாஜக பாமகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் தோன்றியிருக்கிறதா என்று அய்யம் எழாமல் இல்லை!

ஆனால் இந்த முறை திமுக பாஜகவுடன் கூட்டு வைத்தால் அது திமுகவின், தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த அழிவாக இருக்கும்!

எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாத சூழ்நிலையில் உதயநிதி சென்று மோடியை சந்தித்தது எரிச்சல் ஊட்டும் நிகழ்வாக தமிழ் பற்றாளர்கள் உணர்கிறார்கள்!

நேற்று எழுச்சித் தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து முற்போக்கு இயக்கத் தலைவர்களை அழைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...

கடைசியில் பேசிய வரிகள் மிகவும் முக்கியமானவை!

"இந்தத் திருமாவளவன் எந்தக் காலத்திலும் பாஜக மற்றும் பாமக இருக்கிற கூட்டணியில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டான்! அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் சமரசம் ஆகாது; விலை போகாது!"

இந்த ஒரு "குறியீடு" அவருக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்!

இந்தியா முழுவதும் தன்னுடைய மதவாதத்தை, பார்ப்பனியத்தை, சனாதன அதர்மத்தை விதைத்து வரும் சங்பரிவார்கள் தமிழ்நாட்டிலும் கால் ஊன்ற பாஜகவை எந்தக் கட்சி ஆதரித்தாலும் அந்தக் கட்சி தமிழ் இனத்துக்கு துரோகம் செய்கின்ற தமிழ் இனத்தால் வெறுத்து ஒதுக்கப் படவேண்டிய கட்சி என்றே நான் கூறுவேன்!

சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை, துப்பாக்கி எடுங்கள் சுடுங்கள், போய்க் கொண்டே இருங்கள், மோடி பார்த்துக் கொள்வார்... என்று ராணுவத்தினர் மத்தியில் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் உச்சபட்ச பேச்சாக அமைந்திருந்தது! 
அதற்கு திமுக இன்னும் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை! அண்ணாமலையை பிடித்து சிறையில் அடைக்க வில்லை!

ஒரு விதமான Soft Hindutva பாணியில் திமுக செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!

மாநிலத்துக்கு ஒரு கூட்டு, மத்திய அமைச்சர்களாகி பொருளீட்ட இன்னொரு கூட்டு என்று கதை பேசுவது திமுகவின் பழைய வழக்கம்!

அந்த சந்தர்ப்பவாத வழக்கம் இது போன்ற மோசமான தருணத்தில் மீண்டும் நிகழ்ந்தால் திமுக என்ற கட்சியில் வெறும் பதவிக்கு அலைபவர்கள் மட்டுமே இருப்பார்கள்; அடிப்படைத் தொண்டர்களும் பெரியார் அண்ணா மீது பற்று கொண்டவர்களும் திமுகவில் இருந்து இந்த முறை சத்தியமாக காணாமல் போய்விடுவார்கள்! நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!

திராவிட இயக்க கொள்கைகள் மீது சமரசம் செய்து கொள்வது, சங்பரிவார்களின் தமிழக ஊடுருவல்களை கண்டும் காணாமல் இருப்பது, இது போன்ற காலகட்டங்களில் மிக மிக ஆபத்தானது ஆகும்! தமிழ் இனத்தை அது ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும்!


ஆபத்து ஆபத்து ஆபத்து!

YozenBalki

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

NEET நுழைவுத் தேர்வு என்னும் சனாதன அநீதி!

நீட்டுக்குப் பின்னால் உள்ள சமூக அநீதிகள் துக்ளக்குக்கும் தினமலருக்கும் இன்று மட்டுமல்ல என்றைக்குமே புரியாது...

ஏன் என்றால் அவர்கள்தான் சமூக நீதியின் முதல் எதிரிகள்.

தமிழகத்தில் உள்ள 27 அரசு மெடிக்கல் கல்லூரிகளும் தமிழக மக்களின் வரியால் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் வெவ்வேறு ஆட்சிக் காலத்தில் முழுக்க முழுக்க தமிழகத்தின் வரி வருவாயைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது தான்.

மோடி, அமித்ஷா போன்றோரின் அப்பன் வீட்டு பணத்தில் உருவானதல்ல!

தமிழகம் முழுதும் 
பரவலாக  உள்ள அத்தனை கல்லூரிகளுமே முழுக்க முழுக்க கடைக்கோடி கிராமத்து மாணவனும் மருத்துவர் ஆகவேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் தான் கட்டப்பட்டது.

(இங்கு ராமர் கோயில் கட்டியோ அனுமர் சிலையை நட்டோ மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர திராவிடம் ஒருநாளிலாகிலும் கனவு கூட கண்டதில்லை)

இதில் நீட்டை கொண்டுவந்து நுழைப்பதன் நோக்கமே வசதி படைத்தவர்கள், குறிப்பாக வட இந்தியர்களை நம் வரிக் காசில், நம் மாணவர்களுக்காக கட்டப்பட்ட காலேஜில் வட இந்தியனைக் குடியேற்றத் தான்...

ஏன் என்றால், அங்கு ராமர் கோயில் கட்டவும் அனுமார் சிலையை நடவுமே அவர்களுக்கு நேரம் பத்தல.
ஆதலால் அவனால்  தமிழ் நாட்டில் உள்ளது போன்ற கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த கட்டமைப்புகளை அங்கே உருவாக்கவும் முடியவில்லை.  

ஆனால் நாம் உருவாக்கிய கட்டமைப்பில் அவனை ஓசியில் நுழைப்பதற்கு, நரித்தனமாக கொண்டு வந்ததே இந்த நீட் முறை!

இப்ப இந்த நீட் ஐ எதிர்ப்பவர்கள் தமிழர்களின் எதிரியா இல்லை வட இந்தியனுக்கு நண்பனா?
சிந்தியுங்கள்...

Also, the report said the percentage of rural students came down from 65.17% in 2016-17 in the pre-NEET year, to 49.91% 

(நோக்கம்:கிராமத்தில் இருப்பவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்)

In 2020-21. The number of Tamil medium students allotted the MBBS seats also came down from 14.88% in 2016-17 to a mere 1.99%

(நோக்கம்:தமிழ் படித்தவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்) in 2020-21. 

Likewise, the percentage of state board students getting MBBS seats also plummeted from 65.66% in 2016-17 to 48.22%

(நோக்கம்: இங்கு பொருளாதாரத்தில் நலிந்தவனின் டாக்டராகும் கனவை சிதைக்க வேண்டும்) 

In 2017-18 while the percentage of CBSE students has increased from 0.39% to 24.91% 

(ஆக, எல்லோர் கனவையும் சிதைத்து, வட இந்தியனை இங்கே நுழைய விட்டாச்சு) 

Just one year after the 
introduction of NEET. 

The number of government school students getting MBBS admissions also decreased from 34 students to just 3 only

(நோக்கம்: அரசுப்பள்ளியில் படித்தால் டாக்டராகும் நினைப்பு கனவில் கூட வரக்கூடாது என்று ஏழையின் மகனின் கனவுகளைச் சிதைக்கும் ஃபாசிசக் கொள்கை) 

Students after NEET, is no student from government schools 
Got admitted to government medical colleges in 2017-18. 

(இப்ப, அரசுப்பள்ளியில் படித்தவனின் கனவை சிதைத்தே விட்டார்கள்)


இதுதான் உண்மை. 

இப்ப சொல்லுங்க 
பாசிசங்கள் தமிழகத்தின் எதிரிகள் தானே....???

🙃🙃🙃

இது Whatsapp செய்தி இன்று...!!

உள்ளடக்கம் உண்மை! ஆண்டுகள் மற்றும் எண்ணிக்கை சற்று மாறலாம்! அதிலுள்ள நியாயம் மாறாது! தமிழினம் ஏமாறுவது என்னமோ தொடர்கிறது!



சனி, 18 பிப்ரவரி, 2023

Chat GPT தமிழ் பற்றி என்ன சொல்கிறது?

தமிழ் ஏன் பெருமைக் குரியது என்று கேட்டேன்? அதற்குப் பின்வரும் பதிலை கூறியிருக்கிறது!


Greatness of Tamil.

YozenBalki Mohan Balakrishna
How Tamil language is great?

As an AI language model, I can say that Tamil is a great language for several reasons.

  1. Age and History: Tamil is one of the oldest living languages in the world, with a history dating back at least 2,000 years. It has a rich literary tradition that includes ancient texts such as the Thirukkural and Silappatikaram. This long history and deep cultural roots make Tamil a unique and fascinating language.

  2. Literature and Culture: Tamil language is renowned for its literature, which includes ancient epics, poetry, and prose. Many important literary works of the Tamil language have been translated into other languages and have gained recognition worldwide. Tamil culture is also diverse and rich, with unique customs, traditions, and festivals that are celebrated by Tamilians all around the world.

  3. Classical Language: Tamil is recognized as a classical language by the government of India, along with Sanskrit, Telugu, Kannada, and Malayalam. This recognition acknowledges the contribution of Tamil language and literature to the cultural heritage of India.

  4. Popularity: Tamil is spoken by over 70 million people worldwide, making it one of the most widely spoken languages in the world. Tamil is the official language of the Indian state of Tamil Nadu and the Union Territory of Puducherry. Tamil is also spoken in other parts of India, including Karnataka, Kerala, and Andhra Pradesh, as well as in Sri Lanka, Singapore, Malaysia, and other countries.

In conclusion, Tamil language is great for its rich history, literature, culture, classical status, and popularity. It is a language with a long and fascinating history, a vibrant cultural tradition, and a strong presence in the modern world.

😎😎🌸🌹☘️

Chat GPT பற்றி மேலும் அறிய:

https://www.entrepreneur.com/science-technology/chatgpt-what-is-it-and-how-does-it-work/445014#:~:text=ChatGPT%20is%20a%20transformer%2Dbased,human%2Dlike%20responses%20to%20questions.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

கால் பாதத்தில் 5 சொட்டு தேங்காய் எண்ணெய்

என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார்! ஒரு முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை!!

ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?" என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! 

அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றிருக்கிறார். அவ்வாறே அவர் செய்த பின்னர் நன்றாக தூங்கி விட்டாராம்.  

அவர் சொன்னபடி நானும் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்தேன். உண்மையாகவே நன்றாக தூங்கவும் சோர்வு நீங்கவும் செய்கிறது!

எனக்கு வயிற்று பிரச்சினை இருந்தது. என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை 2 நாட்களில் குணமாகியது.

உண்மையில்! இந்த செயல்முறை ஒரு மந்திர விளைவை கொண்டுள்ளது

நான் பல ஆண்டுகளாக இந்த முறையை கையாண்டு வருகிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும்* வைத்திருக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்ததிலிருந்து 
என் கால்களில் எப்போதும் இருந்த வீக்கத்தினால் ஏற்பட்ட வலியும் சோர்வும் நீங்கியது!

தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த 2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது!

இது ஒரு அற்புதமான விஷயம்.  

💐 நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது.💐 இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.

என் தாத்தாவின் காலில் இருந்த எரிச்சல் உணர்வும், தலைவலியும் நீங்கி!

தைராய்டு பிரச்சனை இருந்த ஒருவர் கூறுகையில், என் கால்கள் எல்லா நேரத்திலும் வலித்துக் கொண்டே இருக்கும். தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய ஆரம்பித்தபின் அவ்வலி நீங்கி இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.

வேறொருவர் கூறுகையில் "எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய் இருந்தது. என் நண்பர் என்னை ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார்.

தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையிலும், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில் விட்டு தூங்கச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.  

அவர் கூறியபடி பின்பற்றத் தொடங்கிய பின் எனது மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். குறட்டையை கூட தடுக்கிறது.

கால்களில் கொப்புளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி கூட இந்த மசாஜால் குறைகிறதாம்.

எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது தேங்காய் எண்ணெய். 

"நீங்கள் தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.... மாறாக கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். 

குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள்.

 உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் இயற்கையின் அற்புதத்தை பாருங்கள். 

நம் கால்களின் பாதங்களில்.
பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில் சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. பாதங்களை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் அவ்வுறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.

இது கால் ரிஃப்ளெக்சாலஜி (Foot Reflexology) என்றும்
இது கூறப்படுகிறது. கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திப் பாருங்களேன்!


Courtesy:
WhatsApp University 😎😎

வியாழன், 22 டிசம்பர், 2022

முதுமையைத் தள்ளிப்போட தினந்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்

_முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
      _*நடக்காத*_ _*ஒவ்வொரு நாளும்* _*உங்களை*_ _*வயதானவராக ஆக்கிக் கொண்டே*_
_*போகும்.*_

உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

 * *நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 
* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள். 

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
_*நடந்து செல்லுங்கள்*_ 

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் *செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை *மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 _*எனவே நடந்து செல்லுங்கள்*_ 

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், *நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது *

. நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
* *கால்கள் ஒரு வகையான தூண்கள் *, மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
_*தினமும் நடைபயிற்சி.*_
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
_*நடந்து செல்லுங்கள்*_ 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 _*10,000 அடிகள் / நாள்*_
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
*இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. *

 * ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை! * 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். _*எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.*_

 * கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
_*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*_

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 _*நடங்கள்.*_

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
_*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*_ 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

_*10,000 அடிகள் நடக்க*_
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

_*365 நாட்கள் நடைபயிற்சி*_ 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

_*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*_ ‍🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻

-Whatsapp University 

புதன், 21 டிசம்பர், 2022

நன்றி Gratitude பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்!

பிறரால் நமக்கு ஒரு உதவி அல்லது நன்மை கிடைத்தால், அதை ஞாபகம் 
வைத்து, நமக்கு உதவி செய்த அந்த நபருக்கு நம் கடமை பட்டிருக்கிறோம் என்று உணரும் தன்மைக்குப் பெயர் நன்றி உணர்வு.

நாம் மட்டும் எப்பொழுதுமே மற்றவர்களிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்கிறோமா என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நன்றி 7 வகைப்படும்.

1. வாய் நன்றி
2. மன நன்றி
3. உணர்ச்சி நன்றி
4. மன வாய் நன்றி
5. மன வாய் உணர்ச்சி நன்றி
6. நடிப்பு நன்றி
7. கடமை நன்றி

1. சிலர் நன்றி என்று வாயால் கூறுவார்கள். ஆனால் மனதில் நன்றி உணர்வு இருக்கவே இருக்காது. இது வாய் நன்றி. 

2. சிலர் மனதில் நன்றி உணர்வு இருக்கும். ஆனால் வாயை திறந்து சொல்லவே மாட்டார்கள். இது மன நின்றி.

3. சிலர் நன்றி உணர்வை, உணர்ச்சி மூலமாக தெரிவிப்பார். அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது / முடியாது/ வழக்கம் இருக்காது. எனவே உடல் அசைவு / கண்கள் கண்ணீர் / எமோஷனல் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு உணர்ச்சி நன்றி என்று பெயர். உதாரணம் குழந்தைகள்.

4. சிலர் நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதே சமயம் வார்த்தைகளால் சொல்வார்கள். இதற்கு மன - வாய் நன்றி என்று பெயர். 

5. சிலருக்கு நன்றி உணர்வு மனதுக்குள் இருக்கும். அதேசமயம் உணர்ச்சியாகவும் வெளிப்படுத்துவார்கள். அதே சமயம் வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். இதற்கு மன - வாய் - உணர்ச்சி நன்றி என்று பெயர். இது மிக மிக மிக சிறந்த குணம்.

இருப்பதிலேயே இந்த குணம் தான் மிக மிக சிறந்தது. தயவுசெய்து இதுபோல் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. சிலர் ஆதாயத்திற்காக நன்றி உள்ளது போல் நடிப்பார்கள். இவர்களுக்கு மனதில் நன்றி உணர்வு இருக்காது. ஆனால் வாய் மூலமாக நன்றி சொல்வார்கள். சிலர் உணர்ச்சியை கூட நடிப்பால் காட்டுவார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதற்கு நடிப்பு நன்றி அல்லது போலி நன்றி என்று பெயர்.

7. விமானத்தில் பயணம் செய்து இறங்கும் பொழுது பணிப்பெண் உங்களிடம் நன்றி கூறுவார்கள். இது கடமை நன்றி. 

வியாபாரத்தில் / கஸ்டமர் கேரில் / ஹோட்டல் ரிசப்ஷனில் / OFFICIAL MEETING ல் / அரசியலுக்காக / வாங்கும் சம்பளத்திற்காக. ECT.... நன்றி கூறுவது கடமை நன்றி என்று பெயர். OFFICIAL THANKS.

குறிப்பு : 

1. வாயில் மட்டும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் மனதிலும் நன்றியை உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். உணர்ச்சி மூலமாகவும் நன்றியை தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

2. மனதிற்குள் மற்றும் நன்றி சொல்லும் நபர்கள். தயவு செய்து இனிமேல் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு சொல்லுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களிடம் நன்றி உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். 

நீங்கள் வாயைத் திறந்து நன்றி சொல்லவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. மனதிலும், உணர்விலும், உணர்ச்சியிலும், வார்த்தைகளிலும் நன்றி சொல்லும் நபர்கள் பெருமைப்படுங்கள். நீங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள்.

4. தயவுசெய்து நன்றி உணர்வை போலியாக, நடிப்பாக பயன்படுத்தாதீர்கள். இது கேவலம். 

இது போன்ற நபர்களிடம் தயவு செய்து உஷாராக இருங்கள். போலியாக நன்றி சொல்லும் நபரை நம்பாதீர்கள். எந்த நேரத்திலும் நம்மை கவுத்து விடுவார்கள்.

5. கடமைக்காக நன்றி சொல்லும் நபர்கள் இனிமேல் அதை மனதார சொல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

6. நமக்கு யாராவது உதவி செய்தால்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் தன் கடமையை செய்தால் கூட நன்றி சொல்லலாம். ஏன் நமக்கு உபத்திரவம் செய்யாத நபருக்கு கூட நன்றி சொல்லலாம். உதாரணமாக மருத்துவர் / செவிலியர் / பேருந்து ஓட்டுனர் / ஆட்டோ ஓட்டுனர் / சர்வர் / கடைக்காரர் /பிளம்பர் / எலக்ட்ரீசியன் / அரசாங்க அதிகாரிகள் / நண்பர்கள்/ குடும்ப உறுப்பினர்கள் / சோந்த காரர்கள் / சக ஊழியர்கள் / குப்பை அள்ளுபவர்கள்/ உங்கள் வீட்டு வேலைக்காரர். இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நம் வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்கிறோம் பிறகு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம்!! பின்னர், ஓட்டுநருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும்பொழுது ஓட்டுனருக்கு அவர் செய்த கடமைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு சமைத்த அம்மாவுக்கு அல்லது மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எந்த எந்த இடத்தில் முடியுமோ எல்லா இடங்களிலும் நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் வாங்கும் போதெல்லாம் தொழிலாளி முதலாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சம்பளம் கொடுக்கும் போதெல்லாம் தொழிலாளிக்கு முதலாளி நன்றி சொல்ல வேண்டும்.

நாம் இப்பொழுது உயிரோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி உணர்வு என்பது ஒரு அருமையான குணம்.

இது எந்த அளவுக்கு நம்மிடம் உள்ளதோ நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வரும். நிம்மதியாக வாழ்வோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் ஒழுங்காக, பாசிட்டிவாக நடந்து கொள்வார்கள்.

நன்றி உணவு இல்லாத பொழுது நம் உடலுக்கு நோய்கள் வருகிறது. மனதில் துன்பம் வருகிறது. நம் உடன் இருப்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்கள். பல நேரங்களில் நஷ்டமும் வரும் கஷ்டமும் வரும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் டைரியில் இன்று எந்த எந்த விஷயங்களுக்கு, யார் யாருக்கு கடமைப்பட்டு உள்ளீர்களோ, அவர்களுக்கு நன்றியை எழுதி விட்டு தூங்குங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

நன்றி உணர்வு என்பது ஒரு சாதாரண மனித குணம். இதை கட்டுரை எழுதி / வகுப்பு எடுத்து / உதாரணங்களை கூறி புரிய வைக்க வேண்டும் என்ற நிலை சிந்திக்க வேண்டியது. 

எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ. வார்த்தையில் / நேரடியாக / WHATSAPP / E MAIL / TELEGRAM / SMS / CALL / INSTAGRAM / LETTER பயன்படுத்தி நன்றியை பரிமாறலாம்.

நன்றி உணர்வு. நமக்கும் நல்லது. பிறருக்கும் நல்லது.

என்னையும் மதித்து, நான் எழுதும் கட்டுரையை படிக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

தீபாவளிக்கு மாற்று என்ன?

இப்போதெல்லாம் நமது தமிழினக் குடும்பங்களில்
நாம் கொண்டாடும் தீபாவளி நரகாசுரன் சம்பந்தமான மூட தீபாவளி அல்ல! 

அதே நாளில் நம்முடைய குழந்தைகள் எல்லோரும் பட்டாசு கொளுத்தி புத்தாடை அணிகிறார்கள் அவ்வளவுதான்!

மேலும், பழக்கத்தில்/புழக்கத்தில் வந்துவிட்ட அந்நிய பேண்ட் சூட் கோட்டு போன்றவற்றை உடனே சட்டென பிடுங்கிவிட முடியாது; அதற்கான மாற்று வைக்கப்பட வேண்டும்! அதுதான் நியாயம்! சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சம்+ ஏழைத் தொழிலாளர்கள் வேலை பார்த்து பிழைக்கிறார்கள்! 

அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் நமக்குள் நாம் செய்து கொள்ளும் வியாபாரம், வேலை வாய்ப்புகள் யாவும் எண்ணற்றவை!

ஒரு மாற்றுப் பண்டிகையை நாம் ஏற்பாடு செய்துவிட்டு தீபாவளி என்ற பெயரை நாம் ஓரம் கட்டி விடலாம்!

அது தமிழினத்தை நடத்திக் கொண்டிருக்கிற பற்பல தலைவர்களுடைய கடமை!

அட! தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய  தமிழ் நிலங்களும் அன்னியர்களிடம் கொள்ளை போய் விட்டன! இனி அவர்கள் சொல்லும் மொழி பேச வேண்டும் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட வேண்டும்...இப்படி வந்த 
கோட்டு சூட்டு பேண்ட் ஷர்ட்டுதான் தீபாவளி!!

தவிர்க்க முடியாதது... மாற்று ஏற்பாடு யார் எப்போது செய்வது? அப்படி செய்துவிட்டு நமது குழந்தைகளிடம் நாம் பேசலாம்!

-YozenBalki 
25th Oct 2022

🥸🥸

திங்கள், 24 அக்டோபர், 2022

தீபாவளி கொண்டாடலாமா?

"தமிழர்கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது", என்ற சித்தாந்த கருத்து என் போன்ற பலரிடமும் உண்டு!
அது ஆரியர்கள் தமிழினத்தின் மீது திணித்த ஒரு வஞ்சகத் திட்டம் என்ற வழக்கு தொடர்கிறது!

எவன் காலிலும் நமது குழந்தைகள் விழாத வரை
எந்த அடிமைத்தனத்திலும் நாம் உட்புகாத வரை
இது வெறும் பண்டியாகவே இருக்கும் நாள் வரை
அதை கொண்டாடிவிட்டு போவதில் என்ன பிழை?

பொங்கலோ தீபாவளியோ எல்லாம் நமக்கு ஒன்றுதான்!
சந்தையில் நம் சொந்தங்கள் விளைவித்த பொருள்களை நாம் வாங்குகிறோம்; ஒருவருக்கொருவர் பயன் அடைகிறோம்!

அதற்குள் சண்டையிட பண்டிதர்கள் போகட்டும்!
ஏழை பாழைகளுக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது!
பண்டிகை என்பது உற்சாகம்!
பெரியவர்களும் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் ஊர் விட்டு ஊர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கும் விழா!

அதுதான் எனக்குத் தெரிகிறது; மற்று எந்த காலத்திலோ உட்பொதிந்த  கொள்கை விளக்கங்கள் தெரியவில்லை!

வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக ஒரு, இதே போன்ற நற்பண்டிகைகளை விழாக்களை உருவாக்குவோம்!

எனினும், அதற்கு இணையான ஒரு பண்டிகையை தமிழின அறிஞர்கள், தமிழின அரசர்கள், தமிழினத் தலைவர்கள் ஒன்று கூடி இதுவரை அமைக்க முடியாத தோல்வியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

எப்படியோ ஒரு பெரிய இரு பண்டிகைகள் தமிழ் இனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன! 
அது ஒரு புறம் இருக்க, பண்டிகை சமயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விளை பொருட்கள் வழியாக மானுடம் தங்கள் உழைப்பு சக்தியை (பணத்தைப்) பரிமாறிக் கொள்கிறதே!

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சோர்வு அவநம்பிக்கை கலந்த மனித வாழ்வில், ஒரு சமூகம், ஒரே சமயத்தில் கொண்டாடும் பண்டிகைகள் குடும்பத்தில் ஒரு தற்காலிக மகிழ்ச்சியையேனும் தருகின்றன!

இதில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கலந்து மகிழ்ந்து அன்பை பரிமாறிக் கொள்கின்ற காட்சியை நாம் காண முடியும்! பண்டிகை காலத்தில் நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் மனிதர்கள் அதற்கு சாட்சி!

அட! இதுபோன்ற சென்டிமென்ட் இல்லாத வாழ்க்கை மிகவும் அருவருப்பானது!

எந்த பண்டிகையை கொண்டாடுவது என்பதை தனி மனிதர்கள் அல்லது சிறு குழுக்கள் தீர்மானிக்கவே இயலாது! அது தானாக பெரிய அளவில் எப்படியோ நிகழ்கிறது!

இப்போதும் கூட தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுவதில் நமக்கு மறுப்பும் ஏற்பும் சமமாகவே இருக்கிறது!

சரி போகட்டும்! தமிழர்கள் அனைவரும் அதற்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு நன்னாளை கண்டுபிடித்து கொண்டாடி மகிழலாமே! யார் தடுத்தார்கள்?

கொண்டாட்டம் ஒரு சென்டிமென்ட்!

வெறும் சோறு மட்டும் தின்றுவிட்டு பண்டிகைகளே இல்லாமல் உயிர் வாழும் ஒரு சிறிய இனக்கூட்டம் கூட உலகில் எந்த பாகத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஏதாவது ஒரு காலத்தில் உலக மக்கள் யாவரும் ஒருமித்து கொண்டாடக் கூடிய

(அந்நாளில், 'எனது உற்பத்திப் பொருளை அல்லது சேவையை இன்னொருவர் பெற, அவரிடம் இருந்து நான் அது போல் பெற', என்று மானுட இனம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற) 

ஒரு பண்டிகை ஏதாவது வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்!

அதுநாள் வரை இது போன்றவை தொடரட்டும் என்றே நான் விழைகிறேன்!

YozenBalki 

😎🙏🙏😎

சனி, 17 செப்டம்பர், 2022

யாரந்த பெரியார்? ஏனிந்த புகழ்ச்சி? (கவிதை)

எந்த ஒரு சொல்?
******************
எந்த ஒரு சொல் 
ஆதிக்கவாதிகள்
கோட்டை கொத்தளம்
சுக்குநூறாக்கி 
மண் மேடாக்கிய
அந்த ஒரு சொல்?

எந்த ஒரு சொல் 
ஆரிய சனாதன
மென்னி திருகி 
மூச்சு நிறுத்தி 
திராவிட பூமியை
நிறுவிய திருச் சொல்?

எந்த ஒரு சொல்
சூத்திரர் வாழ்வை
நெம்பி நிறுத்தி 
உலகம் வென்றிட
கல்வியும் வேலையும்
அருளிய அச் சொல்?

எந்த ஒரு சொல்
பூமியில் பாதியாம்
பெண்ணின உயிரை
சமமாய் நடத்தென 
போர்க்குரல் உயர்த்தி
உழைத்திட்ட அருஞ்சொல்?

எந்த ஒரு சொல்
அமிழ்ந்தவன் உயர 
மூத்திரச் சட்டியை
சுமந்திட்ட வாறே 
இடையறாத் தொண்டு
புரிந்திட்ட பெயர்ச் சொல்?

எந்த ஒரு சொல்
மானமும் அறிவுமே
மனிதனுக்கு அழகென
தடியால் அடித்து
தமிழினத் தூக்கம் 
கலைத்திட்ட வினைச் சொல்?

அந்த ஒரு சொல்
தந்தை பெரியார் 
தந்தை பெரியார்!!

எந்தன் உள்-வெளி 
எங்கணும் நிறைந்து
உயிரெலாம் கலந்து
போர்க்குணம் நல்கிடும்
சமநெறி ஞாயிறு
தந்தை பெரியார் 
பிறப்பை போற்றுவம்!

-YozenBalki 

பெரியார் பிறந்தநாள் 
144-வது ஆண்டு
September 17-2022