Translate this blog to any language

திங்கள், 19 மே, 2025

பக்தி - உழைப்பு எது தேவை?


கடவுள் நம்பிக்கை பற்றி கொஞ்சம் பேசலாம்! 

அது இருக்கிறதா இல்லையா என்ற நாத்திக - ஆத்திக கருத்து பற்றி இங்கு பேசவில்லை! 

கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திக வாழ்வில் கடும் முயற்சி பக்தி என்ற இரண்டு கூறுகளை பற்றி நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்! 

ஒரு கடவுள் நம்பிக்கை சுமாராகக் கொண்ட ஆத்திகன்! 

ஆனால் 99% தனது 

முயற்சி 
கடும் உழைப்பு 
அறிவுத்திறன் 

இந்த மூன்றைக் கொண்டு ஒரு ஏக்கர் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடுகிறான்! 
நேரம் கிடைக்கும் போது கோயிலுக்கு போகிறான் மனதுக்குள் வணங்குகிறான் அதன் அளவு 1% -10% மட்டுமே!

இன்னொருவன் கடும் பக்தன்
அவனும் அதே போல விவசாயி ஒரு ஏக்கர் நிலம்! 
ஆனால்,
கிட்டத்தட்ட 90% -99% இறைவன் மீது நம்பிக்கை வைத்து எப்போதும் கோயில் குளம் ஆன்மீக புத்தகங்கள் உபன்யாசங்கள் சங்கீதம் தியானம் என்று தன்னுடைய வாழ்வில் விழித்திருக்கும் நேரத்தில் 90% இறை வழிபாட்டிலும் 1%-10% மட்டுமே தன்னுடைய விவசாயத்தின் மீதும் கருத்து செலுத்துகிறான்! 

அறுவடை காலம் வரும் பொழுது இந்த இருவரில் யாருடைய நிலத்தில் அதிக விளைச்சல் இருக்கும்; உலகப் பயன் இருக்கும்? 

யாருடைய குடும்பம், ஊர், நாடு மேன்மையாக இருக்கும்? யாருடைய நிலத்திலிருந்து வரி வசூல் அதிகம் கிடைத்து கோயிலை பராமரிக்கும், ஆன்மீகத்தை வளர்க்கும், சமூகத்திற்கான நற்செயல்கள் யாவும் நிகழும்? 

முன்னவர் உழைப்பால் கோயில்களும் ஆன்மீகமும் கூட சேர்ந்தே வளர்கிறதே! 

பின்னவரின் அதீத ஆன்மீகத்தால் சமூகத்துக்கு பயன் தராத கற்பனை வாழ்க்கையால் கோயில்களுக்கும் ஆன்மீகப் பெரியோர்களுக்கும் கூட பெரிதாக தான தர்மம் செய்ய முடியாத அளவுக்கு அவனது வாழ்க்கை சுருங்கிப் போகிறதே!

சோற்றுக்கு உப்பு அவசியம்; உப்பே சோறு அல்ல!

வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியம்! ஆனால் ஆன்மீகமே வாழ்க்கை அல்ல! 

ஆன்மீக வாழ்க்கை, அதையே பிறருக்கு நடத்தித் தருகின்ற லௌகீக வாழ்க்கை இரண்டையும் ஒப்பிடும் பொழுது மேற்கண்ட இரு விவசாயிகளின் பயனுள்ள வாழ்க்கை முறையை உற்று நோக்குங்கால் கடும் உழைப்பு, தொடர் முயற்சி, அறிவுத்திறம் எவ்வளவு அவசியம் என்று நமக்கு விளங்கும்! 

கர்ம யோகமே நனி சிறந்ததல்லவா?
பக்தி/ஞான யோகிகளுக்கும் எது சத்தாகத் திகழ்கிறதாம்?


அதனால்தான் 

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!"

என்றார் திருவள்ளுவர்!

இறை நம்பிக்கை இருப்பவர்களுக்கும் லவ்கீக வாழ்க்கையில் இருக்கிற குடும்பஸ்தர்கள் தான் உலகம் முழுதும் இருக்கும் கோயில்களை கட்டி இன்றும் அதை தங்கள் உழைப்பினால் அது தந்த பொருளினால் காப்பாற்றி வருகிறார்கள் என்றுணர வேண்டும்!

பெரிய பெரிய ஞானிகள் என்று தன்னை கருதிக் கொண்ட அல்லது மக்கள் நம்பிய பலருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தந்தது, அவர்களுக்கு தேவையான புகழைத் தந்தது மேற்படி 99% மக்களின் உழைப்பே, போற்றுதலே ஆகும் என்று உணர்க!

ஆதலால், ஆன்மீகம் வளர வேண்டும் என்றாலும் கூட
மேற்படி சொல்லப்பட்ட இரண்டாம் நிலை 
விவசாய-ஆன்மீகவாதிகளுக்கும் முதலில் தேவைப்படுவது,

1. முயற்சி 
2. கடும் உழைப்பு 
3. அறிவுத்திறன் 

என்றுணர்தல் உலக 
நலம் பயக்கும்!

-யோஜென் பால்கி

Yozen Balki 
Senior Psychologist 


சனி, 5 ஏப்ரல், 2025

உங்கள் நிலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் நிலத்தை மீட்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள்

உங்கள் நிலத்தின் எல்லை FMB (Field Measurement Book) பதிவு, பட்டா, பத்திரம், வருவாய் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும், பக்கத்து நில உரிமையாளர் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்தால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
---
👉 முதலில் சமரச முயற்சி செய்யவும்
👉 கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தாசில்தார் அலுவலகத்தை (Taluk Office) தொடர்பு கொள்ளவும்.
VAO-வை அழைத்து, நில எல்லை கணக்கீடு (Survey) மீண்டும் செய்ய சொல்லலாம்.
தலையிடாமல் தப்பிக்க முடியாது என்பதற்காக வருவாய் அதிகாரிகளிடம் எழுத்துப் புகார் அளிக்கவும்.
👉 கிராம சபை மற்றும் ஊராட்சி தலைவர் முன் பிரச்சினையை முன்வைக்கவும்.
சில சமயங்களில், சமூக நடவடிக்கைகள் வழியாக சமரசம் செய்யலாம்.
---
👉 நில அளவை (Survey) முறையாக நடத்த சொல்வது
👉 தாசில்தார் அலுவலகத்தில் (Revenue Department) "Re-Survey Petition" மனு அளிக்கலாம்.
👉 FMB வரைபடத்தை (Field Measurement Book) பார்த்து, Survey Number மற்றும் எல்லை மதிப்பீடு செய்து கொடுக்க வேண்டும்.
👉 நில அளவைக்காக Taluk Surveyor-ஐ கொண்டு வர சொல்லலாம்.

 நில அளவைக் கண்காணிக்கும் அதிகாரிகள்:
VAO (Village Administrative Officer)
Taluk Surveyor
Revenue Inspector (RI)

முக்கியம்:
நில அளவை முடித்த பிறகு, "Survey Sketch" மற்றும் "Surveyor Report" ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
---
👉 ஆக்கிரமிப்பை அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்கவும்
👉 அரசு அதிகாரிகளிடம் எழுத்து புகார் கொடுக்கவும்
👉 தாலுகா அலுவலகம் (Taluk Office)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (District Collectorate)
👉 "Encroachment Complaint" மனு எழுதி பதிவு செய்யலாம்.
தகுந்த ஆதாரங்களுடன், பக்கத்து நில உரிமையாளர் தவறாக ஆக்கிரமித்துள்ளதாக எழுத்துப் புகார் கொடுக்க வேண்டும்.
👉 காவல்துறையில் புகார் அளிக்கலாம்
உங்கள் நிலத்தில் பலவந்தமாக ஆக்கிரமிப்பு செய்தால், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் (FIR) புகார் செய்யலாம்.
👉"Criminal Trespassing" (அனுமதி இல்லாமல் நுழைதல்) பிரிவு 441, 447 உட்பட தொடர்புடைய சட்ட பிரிவுகளில் வழக்கு தொடரலாம்.
---
👉 நீதிமன்ற வழக்கு தொடரலாம்
👉 சமரசம் நடக்கவில்லை என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.
👉 "Civil Suit for Declaration and Injunction" (உங்கள் உரிமையை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்பை தடுக்கும் மனு).
👉"Eviction Suit" (ஆக்கிரமிப்பாளரை வெளியேற்ற வேண்டிய வழக்கு).
👉 வழக்கு தொடரும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்கள்:
Sub Court / District Court (சில மாவட்டங்களில் Munsif Court-லும் பரிசீலிக்கலாம்).

 வழக்கு தொடரும் போது தேவையான முக்கிய ஆவணங்கள்:
1. உங்கள் நிலத்தின் பத்திரம் (Sale Deed, Gift Deed, Partition Deed, etc.)
2. FMB Sketch (நில வரைபடம்)
3. Patta / Chitta / Adangal (Revenue Records)
4. Surveyor Report (நில அளவியல் சான்று)
5. அதிகாரப்பூர்வ புகார் மனுக்களின் நகல்கள் (Complaint Copy, Acknowledgment, etc.)
---
👉 லஞ்சம், அதிகார தவறுகளை எதிர்கொள்வது
👉 அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புகார் செய்யலாம்
மாவட்ட ஆட்சியர் (District Collectorate)
தொழில் மற்றும் வருவாய் துறை (Revenue Department)
மக்கள் குறை தீர்ப்பு அமைப்பு (CM Cell Complaint, Online Grievance Redressal Portal)
👉 மக்கள் குறை தீர்ப்பு மையங்களில் புகார் செய்யலாம்
தமிழ்நாடு அரசின் CM Helpline (1100) / cmhelpline.tn.gov.in
மாவட்ட குடிமை குறை தீர்ப்பு மையம் (District Grievance Redressal Cell)
---
👉 தீர்வுக்கான முக்கிய சட்ட வழிமுறைகள்
👉 தகவல் அறியும் உரிமை (RTI) மனு மூலம் நில அளவைக் கோரலாம்.
👉 நில உரிமை உறுதி செய்ய சிவில் வழக்கு (Civil Suit) தொடுக்கலாம்.
👉 அரசு அதிகாரிகள் செயல்படவில்லை என்றால், CM Cell-ல் புகார் செய்யலாம்.
👉 போலீசில் புகார் கொடுத்து, சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
👉 நீதி மன்ற உத்தரவை பெறலாம் (Stay Order or Eviction Order).
---
 முக்கிய கட்டுப்பாடு & தீர்வு
👉 தகுந்த உரிமை ஆவணங்களுடன், அரசு அதிகாரிகளிடம் முறையான புகார் அளிக்க வேண்டும்.
👉 சமரசம் இல்லாவிட்டால், நில அளவைக் கணக்கிடச் சொல்லி, சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
👉 அதிகாரிகள் உதவவில்லை என்றால், RTI & CM Cell புகார் அளிக்கலாம்.
👉 சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
👉 உங்கள் நில உரிமை சட்டப்படி உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
👉 பகிரங்க புகார் மனுவின் மூலம் நீதிமன்ற வழக்கு தொடரலாம்.

#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்

🌿🌿💞💞

Courtesy: Twitter X 
@jkvoffl

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

திருச்சி சிவா அவர்களின் மனம் உருக்கும் அஞ்சலி கடிதம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. திருச்சி சிவா அவர்கள் தனது ஆருயிர் மனைவியின் மரணத்துக்கு பிறகு அவருக்காக எழுதிய அஞ்சலி கடிதம்; அது நம்மை எல்லாம் உருக்கும்!

அவரது அன்பு ததும்பும் பேச்சைக் கேட்கும்போது எனது கண்களில் கண்ணீர் நிரம்புகிறது! 

நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜிக்கின்ற அவரது இனிய உள்ளத்தில் தன் மனைவி மீதான இத்தனை காதல் மறைந்து இருந்திருக்கிறது! 

அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு அதிகம் என்றாலும் இன்னும் மதிப்பு கூடுகிறது!

அந்த கடிதத்தின் வாயிலாக அவர் பிறருக்கு அதாவது ஆண்களுக்கு/ கணவர்களுக்கு சொல்ல வருவது இதுதான், நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்கின்ற காலத்தில் அவளோடு மனம் விட்டு பேசுங்கள்! நேரமே இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்! 

அடுத்த மாதம் நமக்கு நேரம் கிடைக்கும் அடுத்த வருடம் நமக்கு நேரம் கிடைக்கும் என்று இருக்கிற காலத்தை வீணடித்து விட்டு ஒருவேளை அவள் போய் சேர்ந்து விட்டால் பிறகு வருந்தாதீர்கள்! 

உங்கள் அன்பை வார்த்தைகளாகவும் பரிசு பொருள்களாகவும் அவ்வப்போது தெரிவித்து உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்! 

தோழர்கள் இந்த இடுகையை
 உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்!


-YozenBalki 




வியாழன், 9 ஜனவரி, 2025

சீமானிய ரசிகர்களை யாராலும் காப்பாற்ற முடியாது!

தந்தை பெரியாரை பற்றி மட்டுமல்ல, மேதகு பிரபாகரன், பொட்டம்மான் உள்ளிட்ட பல தமிழின தலைவர்களை தரக்குறைவாக பேசியவர்தான் சீமான்.

2009க்கு முன் திமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தார். 2009க்கு பின் அதிமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு திமுகவை விமர்சித்தார். பாஜகவிடம் நிதிபெற்று பெரியாரை விமர்சித்தார். பின்னர் திமுகவிற்காக விஜயகாந்தை விமர்சித்தார். பாமகவிற்காக வேல்முருகனை விமர்சித்தார். அதிமுகவிற்காக அய்யா.பழ.நெடுமாறனை விமர்சித்தார். 

ஓ.பி.எஸ்சுக்காக சசிகலாவை விமர்சித்தார். பின்னர் சசிகலாவிற்காக எடப்பாடியை விமர்சித்தார். அதன்பின் எடப்பாடிக்காக ஓ.பி.எஸ்சை விமர்சித்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்தியபோது எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என்றார். தன் மீது வழக்கு நெருக்கடி வந்தபோது ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றார். ஆளுனரை ஆதரிக்க திமுக ஆட்சியை விமர்சித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையை விமர்சித்தார்.

அண்ணாமலையை காப்பாற்ற திமுகவை விமர்சித்தார். 
மீத்தேன் திட்டத்திற்காக நம்மாழ்வாரை தெலுங்கர் என்றார். தமிழ்நாடு விடுதலைக்கு படை கட்டிய தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு ஆசைப்பட்டவர் என இழிவு செய்தார். காவிரி டெல்டாவை காக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சிறைசென்ற பேரா.ஜெயராமனுக்கு கட்சி மூலமாக கொலைமிரட்டல் விடுத்தார். 

அணு உலையை ஆதரித்த வைகுண்டராஜனுக்காக உதயக்குமாரை விமர்சித்தார். 2009ல் இலங்கைக்கு ஆயுதம் ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை அடித்துநொறுக்கி சிறைசென்ற கோவை இராமகிருட்டிணனை தமிழரல்ல என்று இழிவுசெய்தார். ஸ்டெர்லைட்டை ஆதரித்த ரஜனியிடம் நட்பு பாராட்டினார். ஈழத்தை ஆதரிக்காத கமலஹாசனுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். மேதகு பிரபாகரனை கொச்சைப்படுத்திய பாரிவேந்தருக்கு பெருந்தமிழர் பட்டம் கொடுத்தார். மேதகுபிரபாகரனை தூக்கிலேற்ற வேண்டுமென்ற காளிமுத்துவிற்கு விழா எடுத்தார். ஈழப்போராளிகளை கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த பாலச்சந்தருக்கு புகழ்வணக்கம் செலுத்தினார். 

விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ம.பொ.சியை கொண்டாடி கூட்டம் நடத்தினார். வி.புலிகளை விசாரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தினார். 
மதுரை மக்கள் எதிர்த்த பி.ஆர்.பி கிரானைட் முதலாளியை தமிழ் தொழிலதிபர் என பட்டமளித்து ஆதரித்தார். ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பிய தந்திதொலைக்காட்சியை ஆதரித்தார். பாஜகவிற்காக மும்பையில் பிரச்சாரம் செய்தார். மோடி ஆட்சி நல்லாட்சி என்று தேர்தலில் பேசினார். தமக்கு ஓட்டுபோடாத முஸ்லீம்களை கொச்சைபடுத்தினார். 
.. இப்படியாக சீமானின் சாதனை பட்டியல் மிகமிக...நீளமானது.

தமிழர் நலனுக்காக உழைத்த பலரை இழிவு செய்த சீமான், தமிழின விரோதிகளான சாவர்க்கர், ஹெட்கேவர், ராமகோபாலன், சோ ராமசாமி முதல் இன்றய மோகன்பகவத், சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்களை சிறிதும் விமர்சனம் செய்யாததில்லை என்பது சீமானின் தனிச்சிறப்பு. இந்துத்துவ கும்பல் திருவள்ளுவரையும், தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் இழிவுசெய்தபோது கண்டிக்காமல் நட்பு பாராட்டிய தூய செந்தமிழர் சீமான் மட்டுமே.

சங்கி என்றால் நண்பன் என்று புது அர்த்தத்தை சொன்ன சங்கப்புலவர் சீமான். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்த, ஆளுனருக்கு ஆதரவாக தோள்களை உயர்த்தும் மாவீரன் சீமான். எத்தனைபேர் செத்தாலும் நீட் தேர்வுண்டு எனும் அண்ணாமலையை நெஞ்சார தழுவும் இந்துத்துவ போர்படை தளபதி சீமான். இப்படி பலமுகங்கள் அவருக்குண்டு. 

இவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றம் என்ன? என்பதைவிட, தமிழர்களால் இவருக்கு கிடைத்த முன்னேற்றம் என்ன? என நீங்கள் சிந்தித்தால் சீமானின் உண்மை முகத்தை உணர வாய்ப்புண்டு.

முட்டாளாய் இருப்பதுவும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான். இருவரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

🌿🌿💤💤🌿🌿

Courtesy by: திருமுருகன் காந்தி 
மே 17 இயக்கம்

From X (Twitter)

9th Jan 2025
.....

பெரியார் ஒருபோதும் கூறாத ஒன்றை ஆரிய பார்ப்பனர்கள் இட்டுக்கட்டி காலகாலமாக கூறி வருகிறார்கள்! 

அதையே இந்தத் தற்குறி சைமன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூற பல்வேறு தலைவர்களும் அவனை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்!

அதற்கு எதிர்வினையாக 
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட ட்வீட் மேற்கண்டது ஆகும்!
.......



வியாழன், 12 டிசம்பர், 2024

டாக்டர்களின் எதிரி தெரியுமா?


*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். 

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. 

மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. 

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
 ( மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்)
🌿🌿☀️☀️

Courtesy: Twitter தோழர்
கைப்புள்ள @kaippulla123

திங்கள், 2 டிசம்பர், 2024

92 வயது இளைஞனின் திராவிட சூளுரை!


எனது வயது 92 ஆக இருக்கலாம்;
வயது இயக்கப் பணிக்குத் தடையில்லை!

தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய நான், 'எம் பணி– தொண்டு செய்து கிடப்பதே' என்று உறுதி கூறுகிறேன்!
------------------------------------------------------
நாளை (2.12.2024) எனக்கு 92 ஆம் ஆண்டு பிறக்கிறது.

‘பத்து வயது பகுத்தறிவுச் சிறுவனாக’ மேடை ஏற்றப்பட்டு, பொதுவாழ்க்கை என்ற தீரா நதியில் இறக்கிவிடப்பட்டு, எதிர்நீச்சல் போட்டியில், எம் தலைவரையொட்டி அவரது பயிற்சி்ப் பாசறையின் பயனுறு பாடத்தால், 82 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, எத்தனையோ எதிர்ப்பு, ஏளனங்கள், அடக்குமுறைகள், சிறைவாசங்கள், உயிர்க்குறிகளைச் சந்தித்தும், கொள்கையில் துவளாது, நாணயத்திலிருந்து வழுவாது, எதிரிகளிடம் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதி கொண்ட நெஞ்சினனாய் நான் தொடருவதன் ரகசியம், பெரியார் தந்த புத்தியும், அய்யாவிடம் கற்ற பாடங்களும், கழகக் கொள்கை உறவுகளின் வற்றாத பாசமும்தான்!

பெரியார் என்ற இராணுவத்தின் கட்டுப்பாட்டுக் கூடாரத்தின் காவல் சிப்பாய்!

இன எதிரிகள் – கொள்கை எதிரிகளின் இடையறாத எதிர்ப்புகளாலும் எனது பொதுவாழ்வு – எனக்கு,
சலிப்பையோ,
சங்கடத்தையோ,
விரக்தியையோ,
நம்பிக்கையின்மையையோ
ஒருபோதும் தந்ததே இல்லை.
சிற்சில நேரங்களில், வயதின் வளர்ச்சி என்ற முதுமையின் காரணமாக உடல் உறுப்புகளின் ஒத்துழையாமை ஏற்படக் கூடும்.

அவற்றை உடலில் தீர்க்க அருமையான நமது மருத்துவப் பெருமக்களும், உள்ளத்தால் போக்க குருதிக் குடும்பம் தொடங்கி, கொள்கைக் குடும்பமும் என்றும் என்னைத் தோள் கொடுத்துத் தாங்குகின்றன.
தாக்குதல்கள் மலைபோன்று வந்தாலும், நொடியில் நம் மன உறுதிமுன், பனிபோல் கரைந்து, கழிவு நீர் போல் ஓடி மறைகிறது!

காரணம், நான் ஒரு பெரியார் இராணுவம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக் கூடாரத்தின் காவல் சிப்பாய்!
சபலங்களுக்கு இடம்தராத சாதாரண தொண்டன்!

தந்தை பெரியாருக்குப் பின் இயக்கமே இருக்காது என்று ஆரூடம் கணித்த அவசர அரைவேக்காடு அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் எப்படி குழிவெட்டலாம் என்று கூடி, குறுக்கு வழிகளைத் தேடி, ஓடி, அபாண்டங்களைப் பொழிந்து அழித்துவிடலாம் என்று நாளையும் திட்டம் தீட்டக் கூடும்.
‘‘சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால்மட்டே’’ என்பதை, அந்தப் பெரும் ஆதிக்க சக்திகள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உருவாக்கினால், அவர்கள் உருவாக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறிந்துவிட்டு, அவதூறுகளை பொய்யாய், பழங்கதையாய், கனவாக்கி, பொலபொலத்துப் போகச் செய்யும் ஆற்றலும், நெஞ்சுரமும் பெரியாரின் கருஞ்சட்டை இராணுவத்திற்கு என்றும் உண்டு!

இது எத்தகைய இயக்கம் தெரியுமா?
குறுகிய (5 ஆண்டு) காலத்தில் சோதனைகளைச் சாதனைகளாக்கிய எம் அன்னையின் (ஈ.வெ.ரா.மணியம்மையார்) தலைமையே அதற்கு ஒரு தக்க சான்றாகும்!
நான் வெகு சாதாரணமானவன்தான்!
நாங்கள் சாமானியர்கள்தான்!
குறைந்த எண்ணிக்கையாளர்கள்தான்!
ஆனால், குறைமதியாளர்களோ,
குறுக்குசால் விடும் குதர்க்கவாதிகளோ அல்ல!

கொள்கையை மணந்து, களத்தில் நின்று வென்று காட்டி, வெற்றிக் குழந்தைகளை ஈன்றெடுத்து வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு அணையாச் சுடராக தந்துவிட்டுப் போகும் திடச் சித்தம் உடையவர்கள்.
திராவிடர் இயக்கம் ஓர் இனவெறி இயக்கமோ, மதவெறி கட்சியோ, பதவி வெறிக் கூட்டமோ அல்ல!
மானுட நேயம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை 97 ஆண்டுகளுக்கு முன்பே அது நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் கொடியாகவே பறக்கவிட்டு, இன்றுவரை அக்கொள்கையைப் பரப்பிவரும் கோணலற்ற அறிவு விடுதலை இயக்கம்!

ரகசியம் இல்லாதது!
வன்முறை நாடாதது!
நன்றியை எதிர்பார்க்காதது!
மானம் பாராது தொண்டாற்றுவது!
கொள்கைச் சமரசம் அறியாதது!

மக்களிடம் வெறுப்பை விதைத்து கலகத்தை அறுவடை செய்து
தங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாத ஒரு வினைத்திட்பம் மிக்க திறந்த புத்தகம்!
அடக்குமுறைகளைத் தனது
அடக்க முறையினாலும், சகிப்புத்தனத்தினாலும் ஏற்று,
கொள்கைக்காக உயிர்த் தியாகமும் செய்யும்
உணர்வாளர்களைக் கொண்ட
பண்பாட்டு இயக்கப் பகுத்தறிவுப் பாசறை!

நீதிக்கட்சி முதல் ‘திராவிட மாடல்’ ஆட்சிவரை!
‘நீதிக்கட்சி’ என்ற பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிறந்து, சுயமரியாதை இயக்கமாக மலர்ந்து, திராவிடர் கழகமாய் விரிந்து, பண்பாட்டுப் பாதுகாப்புக்கான மனிதநேய இயக்கமாய் ஓங்கி,
அரசியலில் ‘திராவிட மாடல்’ என்ற ஒரு பெருமைமிகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை பெற்று அகிலத்திற்கே எடுத்துக்காட்டாய்த் தந்து, ஓங்கி வளர்ந்து, உத்தமர்களின் பாராட்டைப் பெற்று வளரும் திராவிட இயக்கமாகப் பூத்துக் குலுங்குகிறது.
வேரும், விழுதுகளும் பலமாகி விரிந்து பரந்து, ஆழ்ந்து பெருத்துள்ளது!

அதன் கனிகளை உண்ணுவோர் பலருக்கு அதற்காக உழைத்த வில்லேருழவர்களும், சொல்லேருழவர்களும், செயல் திட்ட அரசியல் மேதைகளும், தந்தை பெரியார் என்ற மாபெரும் அறிவுச் சுடர் தந்த அற்புதக் கொள்கைச் சிற்பியுமே அதன் பாரம்பரிய சொத்து என்பது தெரியாமல் இருக்கலாம்!

டாக்டர் சி.நடேசனார்
சர்.பி.டி. தியாகராயர்
டாக்டர் டி.எம்.நாயர்
பானகல் அரசர்
ஏ.டி.பன்னீர்செல்வம்
போன்ற நீதிக்கட்சித் தலைவர்களோடு, சுயமரியாதை இயக்கம் கண்ட புரட்சியாளர் தந்தை பெரியாரின் சகாப்தமும் இணைந்து ‘திராவிடர் கழகமாக‘ வளர்ந்து, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்ற அரசியல் ஆளுமைகளாலும், அதன் நீட்சியாக இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நீண்டு வரலாற்று வைர வரிகளாக மின்னுகிறது.

தந்தை பெரியார்தம், தாய்க்கழகத்தின் திட்டங்களும், கொள்கைகளும் திராவிடர் ஆட்சிமூலம் அரும் சட்டங்கள் ஆகி, புதியதோர் விடியலை, புத்தாக்க சமூகத்தை உருவாக்கி பொற்காலத்தைத் தந்து வருகின்றது!

எவரோடும் முடிந்துவிடக் கூடிய
இயக்கமல்ல இது!
‘அவரோடு சரி!’
‘இவரோடு சரி!’
என்ற அவசர ஆத்திரக்காரர்களுக்கு,
‘எவரோடும் முடிந்துவிடக் கூடியதல்ல!’
இது வேரற்ற அடிமரம் அல்ல; வெளித் தெரியாமல் ஆழமாக வேர் பதிந்துள்ள வித்தக வினைக்கான விளைச்சல் மரம் திராவிடம் என்பது நாளும் புரிய வைக்கப்படுகிறது.

ஆனால், இன்றைய ஆட்சியை நேரிடையாக எதிர்க்கத் தெம்பில்லாதோர் வம்பர்களை வரவழைத்து, சில கூலிப் படைகளிடம் பேரம் பேசி, ‘பி’, ‘சி’, ‘டி’ டீம்களை எல்லாம் நிற்க வைக்கின்றனர் – நம் கொள்கை எதிரிகள். ‘சிலிப்பர் செல்கள்க’ளை அனுப்புகிறோம் என்று வெட்கமின்றி உளறுகின்றன – செல்லரித்த செலவாகாத சில்லரைகள்.

1. இயக்கத்தில் எம் பணி, நம் மக்களை என்றும் பாதுகாக்கும் இராணுவப் பணி போன்றது.

2. கொள்கைகளை நாளும் பரப்பிவரும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் அங்கே வெற்றிப் பொலிவுடன் அமர்த்துவது!

3. ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை களை ஒழித்து சமூகநீதி, அறிவியல் மனப்பான்மை தழைக்கும் புதிய சமுகமாக்குவது.

4. இளைஞர், மகளிர் முதலிய அனைத்துத் தரப்பினரும் பிரச்சாரப் பணியை சுழன்றடிக்கும் சுனாமியாக உழைத்திட வைக்கும் பணியே, எம் பணி!

5. அகால பருவ மாற்றங்களைத் தவிர்க்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மக்கள் இயக்கமாக நடத்துவது!
முடியும்வரை அதே பணி எம் பணி!

ஆம், எம் வாழ்வு முடியும்வரை
எம் உடலுறுப்புகள் செயல்படும்வரை
இப்பணி தவிர வேறு எப்பணி எமக்கு?
அதுவே ‘‘திருப்பணி’’ நமக்கு!

எமக்குத் தோள் கொடுத்துள்ள தலைவரின், ஈரோட்டுப் பாதை எமது மாறாப் பாதை, ஒரே பயணப் பாதை!
அந்த ஈரோட்டுப் பாதை, பாதை இல்லா ஊர்களுக்கும்கூட புதிய பாதையமைத்து இணைக்கும் ஒரே சீரான பாதை!

பாறைகள் உருண்டாலும், மண் சரிந்தாலும்,
எதிர்கொண்டு வெல்லும் உறுதியே 92 ஆம் ஆண்டு காணும் இந்த எளிய பெரியார் தொண்டனின் இன்ப உணர்வின் இனிய முழக்கமாகும்!

என் 92 ஆம் ஆண்டில், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆண்டு மலரில், வாழ்த்து அனுப்பிய நமது ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில், கோவையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி – ரூ.300 கோடி செலவில் அமைக்கப்படும் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மய்ய முமே எனக்குப் பிறந்த நாள ்பரிசு என்று எழுதியுள்ளது என் கண்களைப் பனிக்க வைத்தது! உள்ளத்தை உருக்கியது!!

வைக்கம் தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சிகளும் கூடுதல் பரிசுதானே! இந்தப் பரிசுகள்முன் மற்றவை எம்மாத்திரம்!
இப்பரிசுகள் எனக்கு மட்டும் உரியவையல்ல – திராவிட சமுதாயத்திற்கே உரியவை!
நன்றி! நன்றி!! நன்றி!!!

‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘‘தாய்க்கழகமான திராவிடர் கழகமும், பெரியார் திடலும்தான் எனது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வழிகாட்டியாய், பாதுகாப்பு அரணாய், கேடயமாய் இருக்கிறது. கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் வீரமணிதான்– இதைத்தான் நேற்றும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். நாளைக்கும் சொல்வேன்’’ என்று சொல்லியிருப்பது இயல்பான திராவிடப் பாரம்பரிய அரசியல் வழிமுறைதான்!
‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்’’ நூற்றாண்டு விழா நாயகர் நம் கலைஞர் அவர்களே முன்பு இதற்கு அருமையான விளக்கம் தெரிவித்தாரே!

‘‘(ஆரிய) பாம்புக்கும், (திராவிட) கீரிக்கும் நடக்கும் சண்டையில், கடிபட்ட கீரி, தன் புண்ணை ஆற்றிக் கொள்ள ஒரு பச்சிலைமீது படுத்துப் புரண்டு, அக்காயத்திற்கு மருந்தாக – விஷ முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் என்பார்கள்; அதுதான் நாங்கள் பெரியார் திடலுக்குச் செல்வது; அங்கேதான் அந்த சுயமரியாதை மூலிகைத் தோட்டம் உள்ளது’’ என்று அருமையாக விளக்கினார்.

அறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த காலத்திலிருந்தே வந்த அரசியல் பாரம்பரியமாயிற்றே! அதனை அடிபிறழாது பின்பற்றி ஆட்சியை நடத்திவரும், ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகரின் தெளிவான அரசியல் முதிர்ச்சிக்கான சான்றாவணம் ஆகும் இது!

நமக்கு வளமைபற்றிக் கவலை இல்லை.
களத்தில் என்றும் நிற்க இளமைதானே என்றும் தேவை?
அனைத்துத் தோழர்களுக்கும் –
எம் மக்களுக்கும் எனது உறுதி! உறுதி!!
இயக்கப் பணி என்ற இந்த ஒப்புவமையற்ற, நன்றியை எதிர்பாரா, மானம் பாராத, புகழ் நோக்காது புது உலகப் படைப்புக்கு நமது உழைப்பு என்பது சிறுதுளியே! 

‘பெரியார் உலகம் மயம் – உலகம் பெரியார் மயம்’ பெருவெள்ளமாவது என்ற இலக்கே நமது களம்.
சிறுகனூரில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘‘பெரியார் உலகம்’’ நமது அடுத்த பெரும்பணி! அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கனிவுடன் வேண்டுகிறேன்.
அதை நோக்கியே இனியும் நம் பணி என்ற பெரும் பணி!

‘வாழ்க, ஒழிக!’ என்பதை ஒரே தட்டில் பார்த்து, அலட்சியப்படுத்தி அரும்பணி என்றும் தொடரும்!

அறிவியக்க வீரர்கள் அல்லவா, நாம்?
எனக்கு வயது ஏறுவதன் காரணமாக உடல் தளர்ச்சி ஏற்படலாம்; அது தவிர்க்க இயலாதது.
ஆனால், பெரியாரின் வாழ்நாள் மாணவனான எனக்கு, உள்ளத் தளர்ச்சியோ, கொள்கை சறுக்கலோ ஒருபோதும் ஏற்படவே, ஏற்படாது என்று அனைத்துத் தோழர்களுக்கும், எம் மக்களுக்கும் பணிவுடன் உறுதி கூறுகிறேன்!

வாழ்க பெரியார்!
வளர்க சுயமரியாதை உலகு!

‘‘திராவிடம் வெல்லும் –
அதை என்றும் வரலாறு சொல்லும்!’’

- கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்

1.12.2024
சென்னை
🌿🌿🌿🌿

X- தளத்தில் அய்யா கி.வீரமணி அவர்கள் இன்று எழுதியுள்ள கடிதம் இது! 
வணங்கி மகிழ்கிறோம் அய்யா!!
💐💐🙏🏻🙏🏻🌿🌿

திங்கள், 25 நவம்பர், 2024

Central Government Schemes மத்திய அரசின் திட்டங்கள்.


இந்தியாவில் மொத்தம் 300 க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. 

அதில் சில இங்கே பதிவிட்டுள்ளேன் இதில் உங்களுக்கு ஏதேனும் தேவைப்படும் திட்டங்களைப் பற்றி படித்தறிந்து பயன்படுத்திகொல்லுங்கள்.

நமது நாட்டில் நாம் ஒவ்வொருவரும் கட்டக்கூடிய வரிகளில் இருந்து, கீழ்மட்டத்தில் மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை மனதில் வைத்து நமது அரசாங்கங்கள் நமக்கான திட்டங்களை வகுத்து அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வழங்குகிறது ஆனால் நம்மில் பலருக்கும் அதைப்பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமும் இல்லை, நம்மை ஆள்பவர்கள் தங்களை விளம்பரம் செய்யவே பணங்களை வாரி இறைக்கின்றனர் 

ஆனால் அரசுகளின் உதவிகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறாமல் அதற்கான நிதிகளை அதுவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்க்காக வழங்கப்பட்ட நிதிகளை செலவிடாமல் திரும்ப அனுப்பிய வரலாறு நமது தமிழகத்தில் நடந்து உள்ளது ஆகவே நாம்தான் நமது மக்களுக்காக இதையெல்லாம் அவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.

ஆதாரம்:👇👇👇

newindianexpress.com/states/tamil-n…

விவசாயம் மற்றும் கால்நடை திட்டங்கள்:

1.விவசாயிகளுக்கான ரூ. 6,000 நிதி உதவி திட்டம் [ PM Kisan ]
2. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் [ PMEGP ] [ கால்நடை ]
3. கிசான் கிரெடிட் கார்டு [ KCC ]
4. தேசிய கால்நடை இயக்கம் [ NLM ] [ திட்ட மதிப்பீட்டில் 50% மானியம் ]
5. கறவை மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு கடன் திட்டம்: [ Dairy Loan ]
6. விவசாயிகள் செழுமை மையம் [ PM KSY ]
7. தேசிய பயிர் காப்பீடு திட்டம் [ PMFBY ]
8. தேசிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் [ PKVY ]
9. கால்நடை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவி திட்டம் [ AHIDFS ]
10. கால்நடைகளுக்கான தேசிய காப்பீடு மானிய திட்டம் [ DAHD ]
11. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் [ LHDM ]
12. வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் [ AIF ]
13. பழுதான விவசாய மின் மோட்டார்களை மானிய விலையில் மாற்றி தரும் திட்டம்
14. அறுவடைக்குப் பிந்தைய நேர்த்தி இயந்திரங்கள் திட்டம்: [ PHTM ]
15. சூரிய கூடாரம் அமைக்கும் திட்டம் [ Solar Dryer ]
16. சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம்
17. வேளாண் மதிப்பு கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்கும் திட்டம் [ PHTM ]
18. வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [ BLCHC ]
19. வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [ VLCHC ]
20. வேளாண் நீர்ப்பாசன திட்டம் [ PMKSY ]
21. விவசாயிகளுக்கான விமான சேவை திட்டம் [ Krishi UDAN ]
22. மண்வள பரிசோதனை அட்டை திட்டம் [ Soil Health Card ]
23. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டம் [ ATMA ]
24. விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் [ KRY ]
25. தேசிய வேளாண் சந்தை திட்டம் ( eNAM ) 
26. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் திட்டம் [ MSP ]
27. ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் [ RAD IFS ]
28. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்: [ NADP ] 
29. மூங்கில் வளர்ப்பு திட்டம் [ NBM ]
30. தேசிய வேளாண்மை துவரை உற்பத்தி வளர்ச்சி திட்டம்
31. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் [ FNS ]
32. விவசாயிகளுக்கான பாரத் ஆர்கானிக்
33. விவசாயத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்[ MGNREGA ]

தொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்:
34. முத்ரா யோஜனா வங்கி கடன் திட்டம் [ PMMY ]
35. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் [ PMEGP ]
36. சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் திட்டம் [ PM SVAnidhi ]
37. மத்திய அரசு ஊரக வளர்ச்சி சுய வேலைவாய்ப்பு திட்டம்: [ RSETI ]
38. விஸ்வகர்மா யோஜனா திட்டம் [ PMVY ]
39. மேக் இன் இந்தியா திட்டம் [ Make in India ]
40. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய பதிவு திட்டம் [ Udyam ]
41. ஒரு நிலையம் ஒரு பொருள் [ One Station, One Product ]
42. கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் மானியம் வழங்கும் திட்டம் ( NHDC )
43. சிறு குறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்துதல் திட்டம் [ PMFME ]
44. கடன் உத்தரவாத திட்டம்: [ CGTMSME ]
45. புதிய தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டம் [ Start Up India ]
46. தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ( ESDP )
47. ஊதுபத்தி தயாரிக்கும் பயிற்சி திட்டம் [ AMP ]
48. விஸ்வாஸ் திட்டம்
49. 49. காயர் உத்யமி யோஜனா [ CUY ]
50. NBCFDC பொது கடன் திட்டம்
51. PM ஸ்வர்ணிமா திட்டம்
52. ஒரு மாவட்டம் ஒரு பொருள் [ One District, One Product ]
53. சூரிய சக்தி ராட்டை திட்டம் [ MSC ]
54. வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் [ Bank BC Point ]
55. பொது சேவை மையம் திட்டம் [ CSC ]
56. நெசவாளர்களுக்கான வங்கி கடன் வசதி திட்டம்
57. பாரதப் பிரதமரின் திறன் ஊக்குவிப்பு திட்டம் [ PM DAKSH ]

கல்வி & வேலைவாய்ப்பு திட்டங்கள்:
58. PM Cares திட்டம்
59. நிதி ஆதரவு திட்டம் [ Mission Vatsalya ]
60. வித்யலட்சுமி கல்வி கடன் திட்டம்: ( Vidya Lakshmi )
61. கல்வி உரிமைச் சட்டம்: ( RTE )
62. பாரதப் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் [ PM Poshan]
63. திறமை இந்தியா திட்டம் ( PMKVY )
64. மத்திய அரசு வேலை வாய்ப்பு: ( Rozgar Yojana )
65. வளரும் இந்தியா பள்ளிகள் ( PM Shri )
66. பெண் பிள்ளைகளுக்கான போட்டி தேர்வுக்கான பயிற்சி திட்டம் [ CBSE Udaan ]
67. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் இணைய வழி கல்வி திட்டம்: ( DIKSHA )
68. இலவச DTH கல்வி சேனல் திட்டம் [ Swayam Prabha ]
69. பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [ NATS ]
70. பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [ NAPS ]
71. இளைஞர்களுக்கான தன்னார்வாலர் திட்டம் [ NYC ]
72. இளைஞர்களின் சுற்றுலா விடுதி திட்டம்: [ YHAI ]
73. நவோதயா பள்ளிகள்
74. கேலோ விளையாடு இந்தியா திட்டம் [ Khelo ]
75. இளைஞர்களுக்கான சூரிய மித்ரா திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் [ SSDP ]
76. பாரதப் பிரதமரின் இளையோர் பயிற்சி திட்டம் [ Yuva Yojana ]
77. அனைவருக்கும் கட்டாய கல்வி [ SSA ]
78. சங்கல்ப் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: [ SANKALP ]
79. SC மற்றும் OBC மாணவர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திட்டம்
80. நாட்டு நலப்பணி திட்டம் [ NSS ]
81. தேசிய தனியார் நிறுவன வேலைவாய்ப்பு அமைப்பு [ NCS ]
82. அடல் இன்னோவேஷன் திட்டம் ( AIM )
83. அக்னிபாத் திட்டம் [ Agni ]

 அனைவருக்கும் பொதுவான திட்டங்கள்:
84. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY ] [ நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி ]
85. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY _ Apartment ]
86. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY ] [ ஊராட்சி ]
87. தூய்மை இந்தியா திட்டம் [ Swachh Bharath Mission ]
88. இலவச எரிவாயு இணைப்பு திட்டம் [ Ujjwala Yojana ]
89. கிராமப்புற மக்களுக்கு இலவச கணினி பயிற்சி திட்டம் [ PMGDISHA ]
90. இணைய வழி இலவச சட்ட ஆலோசனை [ Tele Law ]
91. தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டம் [ E Shram ]
92. அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் [ PMJDY ]
93. மானிய விலையில் LED பல்புகள் விற்பனை திட்டம் [ Ujala Yojana ]
94. தரிசு நிலங்களில் சூரிய வேளாண்மை திட்டம் [ KUSUM ]
95. பணிபுரியும் பெண்களுக்கான விடுதி வசதி திட்டம்
96. சூரிய சக்தி மேற்கூரை மானிய திட்டம் [ Solar ]
97. நகர்ப்புற மகளிர் சுய உதவி குழு கடன் திட்டம்
98. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்: [ MGNREGA ]
99. தேசிய சமூக உதவித் திட்டம்: [ NSAP ]
100. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்
101.திருநங்கைகளுக்கான கரிமா கிரே தங்குமிடம் திட்டம்
102. ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா (RVY)
103. பாரதப் பிரதமரின் ஒருங்கிணைந்த சேவை மையம் [ Toll Free 181 ] [ OSC ]
104. பாரத் ஆட்டா
105. ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டம்: ( Jal Jeevan )
106. பஞ்சாயத்து தகவல் செயலி: [ Meri Panchayat ]

ஆரோக்கியம் மற்றும் சுகாதார திட்டங்கள்:
107. காச நோயாளர்களுக்கான ரூ. 500 மாத நிதி உதவி திட்டம் [ NPY ]
108. அனைவருக்கும் ரூ. 5,00,000 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் [ PMJAY ]
109. இலவச மருத்துவ காப்பீடு ஆலோசனை [ E_Sanjeevani ]
110. ஆயுஷ்மான் ஹெல்த் கார்டு திட்டம் [ ABHA ]
111. தேசிய ஊட்டச்சத்து திட்டம் [ Poshan Abhiyaan ]
112. பெண்கள் பேறுகால பாதுகாப்பு உறுதி திட்டம் [ SUMAN ]
113. இந்திர தனுஷ் இலவச தடுப்பூசி திட்டம் [ Indradhansh Yojana ]
114. பிரசவ அறை திட்டம் [ LAQSHYA ]
115. கர்ப்பிணி பெண்களுக்கான மாத இலவச பரிசோதனை திட்டம் [ PMSMA ]
116. தாய்மை வந்தன நிதி உதவி திட்டம் [ PMMVY ]
117. சுகாதார பாதுகாப்பு திட்டம் ( PMSSY )
118. மலிவு விலை மக்கள் மருந்தகம் மருந்துகள் திட்டம்: ( PMBJP )
119. சுவிதா அணையாடை திட்டம் ( நாப்கின் ): ( JASSN )
120. தேசிய டயாலிசிஸ் திட்டம் ( NDP )
121. தேசிய இலவச இதய ஸ்டண்ட் அறுவை சிகிச்சை திட்டம்
122. தேசிய இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திட்டம
123. ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதியம் (RAN)
124.புற்றுநோயாளிகளுக்கான மருத்துவ நிதி உதவி திட்டம் [ RAN ]

சிறுபான்மையினர் திட்டங்கள்:
125. சிறுபான்மையினர் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் [ MAEF ]
126. புத்தெழுச்சி திட்டம் [ Nai Udaan ]
127. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் [ IDMI ]
128. பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்துவது [ MSDP ]
129. சிறுபான்மையினர் கலை, கைவினை மற்றும் திறன் மேம்பாடு திட்டம் ( USTTAD )
130. சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு, மேல்நிலை மற்றும் உயர் கல்வி உதவித் தொகை திட்டம்
131. சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு தொடக்கம் மற்றும் இடைநிலை கல்வி உதவித்தொகை திட்டம்
132. மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம்
133. சிறுபான்மை மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் [ Begum Hazrat]
134.சிறுபான்மையினருக்கான உயர் கல்வி உதவி தொகை திட்டம் [ Proffesional Courses ]
135. சிறுபான்மை மாணவ மாணவியருக்கான அயல்நாட்டு உயர்கல்வி திட்டம் [ Padho Pardesh ]
 
பட்டியல் மற்றும் பழங்குடியினர் திட்டங்கள்:
136. பெண் தொழில் முனைவோர்களுக்கான ஸ்டாண்ட் அப் திட்டம் ( Stand Up Mitra )
137. SC மக்களுக்கான வாழ்வாதார நுண்கடன் திட்டம்
138. SC ST SCA பிரிவினருக்கான Pre Metric கல்வி உதவித்தொகை திட்டம்
139. SC ST SCA பிரிவினருக்கான Post Metric கல்வி உதவித்தொகை திட்டம்
140. SC ST SCA மாணவர்களுக்கான வெளிநாடு கல்வி கனவு திட்டம் [ NOS ]
141. பாரதப் பிரதமரின் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் [ NSIGSE ]
142. பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா
காப்பீடு & சேமிப்பு, ஓய்வூதிய திட்டங்கள் :
143. பொன்மகன் சேமிப்பு திட்டம்
144. பொன்மகள் சேமிப்பு திட்டம் [ SSY ]
145. மாத ஓய்வூதிய திட்டம் [ APY ]
146. ரூ. 10,00,000 விபத்து காப்பீட்டு திட்டம்
147. தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் [ PMSBY ]
148. தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் [ PMJJBY ]
149. அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம்  
150. மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் [ MSSC ]
151. தங்க பத்திர சேமிப்பு திட்டம் [ SGB ]
152. முதியோருக்கான சேமிப்பு திட்டம் [ SCSS ] 5 வருடங்கள்
153. வருட கால வைப்பு கணக்கு திட்டம் [ Fixed Deposit ]
154. கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் [ KVP ]
155. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ( POMIS )
156. முதியோர்களுக்கான மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNOAP )
157. கணவனை இழந்த பெண்களுக்கு மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNWPS )
158.மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNDPS )
159. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMSYM )
160. விவசாயிகளுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMKMY )
161. சிறு குறு வியாபாரிகளுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMLVMY )

மீனவர் நலத்திட்டங்கள்:
162. மீனவர்களுக்கான முத்ரா கடன் திட்டம் [ Mudra _ Fisherman ]
163. கடல் மீனவர்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் (NFSRS)
164. பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் - மீனவர் சமூகத்திற்கு மட்டும்
165. வீடு கட்டுங்கள் - மீனவர் சமூகத்திற்கு மட்டும்: (மாநில + மத்திய அரசு திட்டம்)
166. பாரத பிரதமரின் மீனவர்களுக்கான குழாய் கிணறு அமைக்கும் திட்டம்
167. பாரதப் பிரதமரின் மீனவர்களுக்கான சமுதாய கூடம் கட்டும் திட்டம்
168. பாரதப் பிரதமர் மீனவர்களுக்கான கூட்டு விபத்து காப்பீடு திட்டம்
169. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா ( PMMSY )

விழிப்புணர்வு திட்டங்கள்:
170. டிஜிட்டல் இந்தியா திட்டம் [ Digital India ]
171. தேசிய கிராமப்புற வளர்ச்சி திட்டம் [ SPMRM ]
172. தீன்தயால் உபாத்யா கிராம ஜோதி யோஜனா [ DDUGJY ]
173. அடல் வயோ அபியுதாய் யோஜனா (AVYAY)
174. ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம்
175. சாகர் மாலா திட்டம் [ Sagarmala ]
176. பாரத் மாலா திட்டம் [ Bharathmala ]
177. நமாமி கங்கை திட்டம்

விவசாயிகளின் நலன் கருதி நாம் இயக்கம் மற்றும் நாம் உழவர் விவசாய விழிப்புணர்வு மாத இதழின் சார்பாகவும் வெளியிடப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்கள் இல் தங்களுக்கு உகந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#அரசின்திட்டங்கள் #அறிந்துகொள்வோம்
#CentralGovernmentSchemes

🌿🌿❓❓

இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை இது ட்விட்டரில் இன்று வந்திருந்தது! 

இவ்வளவு எல்லாம் வடநாட்டில் நடந்திருந்தால் வடமாநிலங்கள் எவ்வளவோ உயர்வாக இருந்திருக்குமே! அவர்கள் தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே!

எனினும், இதில் சிலவேணும்
உண்மையாக இருக்கலாம்! பலருக்கும் பயன்படும் என்று இங்கு போட்டு இருக்கிறேன்! 

-YozenBalki