பதில் வந்தது:
திருமா என்றால் ஒரு தங்க நாணயம்
அதன் ஒரு புறம் பெரியார் மறுபுறம் அம்பேத்கர்
ஒரு பக்கம் கத்தி மறு பக்கம் கேடயம்!
திருமா ஆதிக்க கொடுமைகளை
அனுதினம் எதிர்ப்பவர்!
ஆரிய சனாதன கருத்துக்கள் மறுத்து மாநாடுகள் போடும் தீரர்!
உண்மை நன்மைகளை மனம் திறந்து பாராட்டுபவர்!
நேர்மை இல்லாமல் சிந்திக்க அவருக்கு ஒருபோதும் தெரியாது!
சிந்தனைப் பேச்சு செயல் மூன்றிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்!
அவர் பிறந்த தலித் சமூக முன்னேற்றத்துக்கு உழைப்பவர் என்றாலும்
அவரால் பிற சமூகங்களை நேர்மை தவறி பேச முடியாது!
ஏனென்றால்
அவர் ஒரு ஜாதிக் கட்சியின் தலைவர் அல்ல.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிற கட்சியின் பொது நிலைத் தலைவர்! தமிழ்நாட்டு பரப்புக்குள் சுருங்கி விடாமல் இந்தியம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்!
ஒரு பெண்ணைத் திருமணம் செய்யாமல்
தனது விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை திருமணம் செய்து கொண்ட வீரர் !
அவர்
ஓடிக்கொண்டே இருக்கிறார்
கால்கள் வீங்கிக் கொண்டே இருக்கின்றன;
நல்லவர்கள் மனம் வலிக்கிறது!
அவரால் ஓய்வெடுக்க முடியாது!
ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக
ஓடியபடியே இருக்கிறார்!
அவர் காண விரும்பும் சமூகம்
பிறவியில் பேதமற்ற
சாதியற்ற சமூகம்!
அவர் இன்று திருமா அல்ல; நம்முன்
உயிர் வாழும் பெரியார்-அம்பேத்கர்!
அரசியலுக்காக சமரசம் செய்யாதவர்!
ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும்
அநீதியால் அவரை விலைக்கு வாங்க முடியாதவர்!
அரசியலை அவர் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகிறார்; தன் சொந்தப் புகழுக்காக அல்லவே அல்ல!
எந்த ஒரு சங்கடமான சூழலிலும் தனித்துவமாக சிந்திக்கத் தெரிந்த சமூக விஞ்ஞானி!
நினைத்ததை மனம் திறந்து
எளிய மக்களுக்கு புரியும் வண்ணம் பேசுபவர்!
வழிதவற இருந்த தம்பிகளின்
கலங்கரை விளக்கு,
கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு அண்ணன்,
சக தோழமையாய் பயணிக்கும்
அன்பர்களுக்கு ஆசிரியர்!
எளிய மக்களின் இறைவன்!
அவரை நாம் கட்டாயப்படுத்தியாவது
அவரது வீங்கிய கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு தர வேண்டும்!
இதுவே அவரது பிறந்த நாளில் நான் தோழர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்!
அவர் 100 ஆண்டுகள் கடந்தும்
நிம்மதியாக இருக்க வேண்டும்!
இந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும்!
அதற்காக அவரது இந்த இனிய பிறந்த நாளில்
அந்த பிரபஞ்ச சக்தியை
இறைமையை நான் வேண்டுவேன்!
Yozen Balki
💫💫🌿🌿💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: