Translate this blog to any language

புதன், 17 செப்டம்பர், 2025

தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள்: செப்டம்பர் 17




பெரியாரை ரொம்ப 
ரொம்ப பிடிப்பதற்கு எனக்கு 1000 காரணங்கள் உண்டு! 

அதில் ஒரு பெரு வியப்பான அரும் காரணம் ஒன்னு இருக்கு! 

கடவுள் இருக்கோ இல்லையோ... 
"கடவுள் இல்லை" என்று சொல்லி கடவுள் மறுப்பு கல்வெட்டு ஊர் ஊருக்கு தமிழகத்தில் வைத்த உலகின் ஒரே வீரஞ்செறிந்த தலைவன் தந்தை பெரியார் மட்டும்தான்! 

(இந்தியாவில் காணப்படும் பற்பல சமுதாயச் சீர்கேடுகளுக்கு நாடோடி ஆரியர்கள் புகுத்திய சனாதன அதர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் தான் காரணம். அவர்கள் ஏற்படுத்திய நால்வர்ண பிரிவுகள் அதில் வந்த ஜாதி வேறுபாடுகள், பிறவி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உயர்வு தாழ்வு பேதங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் தந்தை பெரியார். 

அவற்றுக்கு ஆணிவேர் கடவுள் நம்பிக்கை என்பதால் பெரியார் கடவுளை மறுத்தார்!)

-YozenBalki 


தந்தை பெரியார் 

பிறந்தநாள்:
செப்டம்பர் 17, 1879

மறைந்த நாள்: 
டிசம்பர் 24, 1973
....

"மூடநம்பிக்கைகளை அழிவு வேலைகளின் மூலம் தான் ஒழிக்க முடியும்! அதற்கு, மகத்தான உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், சாவிற்கும், ஏன் பழிப்பிற்கும் கவலையற்ற துணிவு உள்ளவனால் தான் அது முடியும்!"

-தந்தை பெரியார்

🌿🌿

"ஆண்களால் ஒருபோதும் பெண்களுக்கு விடுதலை உண்டாகாது!
எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா?"

-தந்தை பெரியார்

...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: