Translate this blog to any language

Akshardam Swaminaraya-temple Delhi hindu-temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Akshardam Swaminaraya-temple Delhi hindu-temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஆகஸ்ட், 2010

"Akshardham"in New Delhi - Wonder of the World: தெரியுமா அக்ஷர்தாம் கோவில் உலக அதிசயம் !!

உலகப் புகழ் பெற்ற "சுவாமி நாராயணா மந்திர்" பற்றிய காணொளி:
(சுவாமி நாராயணாவின் காலம் 2nd April 1781 – 1st June 1830. He also known as Sahajanand Swami )


கீழே உள்ள காணொளி "சுவாமி நாரயணா" என்னும் அந்த ஞானியின் வரலாறு பற்றி காட்டுகிறது! 
______________________________________________________________________________
வணங்குதலுக்கு உரிய மிகப் பெரும் சாதனையாளர் உயர்திரு Pramukh Swami மகாராஜ் அவர்களின் திரு உருவப் படங்கள்:
___________________________________________________________________________
லகத்திலேயே மிகச் சிறப்பான ஈடு இணையற்ற ஒரு இடம் எது' ,என்று கேட்டால்  நான்,  'அது இந்தியாவில் உள்ள அக்ஷர்தாம் '(Akshardham ) என்றுதான் கூறுவேன். நான் கற்பனை செய்ததை விட அக்ஷர்தாம் மிக மிக அழகாக உள்ளது. தாஜ்மஹால் என்னமோ அழகுதான். ஆனால் இந்த அக்ஷர்தாம், அழகுடன் சேர்த்து நமக்கெல்லாம் ஒரு அழகிய செய்தியையும் சொல்கிறது"   
- பில் கிளிண்டன்
 ________________________________________________________________________

"அக்ஷர்தாமை  உருவாக்கிய "பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்கள்" ( Pramukh Swamiji Maharaj ) இது போன்ற ஒரு அழகிய பண்பாட்டுக் கலைக் கூடத்தை உருவாக்கி உலக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டார். அக்ஷர்தாம் ஒரு அற்புத கலாசாலை, உன்னத அனுபவம், ஞானஸ்தலம்.
 இந்த அக்ஷர்தாம் கலைக் கோவில், விடாமுயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் நம் உலகிற்கு தந்த  21 - ஆம் நூற்றாண்டின் பரிசு ! இது போல் அக்ஷர்தாமில் முடியும் என்றால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான எழுச்சி பெற்ற இளைஞர்களால் வரும் 2020 -க்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்  வந்துவிட்டது".  
-அப்துல் கலாம்  
_____________________________________________________________________
இப்படி பலரும் போற்றும் டெல்லியில் உள்ள "அக்ஷர்தாம்", "சுவாமி நாராயணா மந்திர்" என்னும் ஹிந்துக் கோவில், உலகில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடமாகும்! குறிப்பாக இந்தியர்கள், அதிலும் குறிப்பாக ஹிந்துக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.   

அக்ஷர்தாம் கோவிலின் சிறப்புகள்:
1 .  யமுனை நதிக் கரையில் சுமார் 60 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 

2 .  நவம்பர் 2000 த்தில் துவங்கி , நவம்பர் 2005 வரை, சுமார் ஐந்து ஆண்டுகள் கோவில் பணிகள் நடைபெற்றன.

3 .  இதன் மாதிரி வடிவமைப்பு செய்வதற்குமுன், சிற்ப கலை வல்லுனர்கள், மற்றும் சாதுக்கள் சேர்ந்து இந்தியா முழுவதும் சென்று அங்கோர் வாட், ஜோத்பூர், ஜகன்னாத் புரி, கோனார்க் மற்றும் தென்னிந்தியக் கோவில்களைச் சுற்றிப் பார்த்து, எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான சிற்பக் கோவில்களை ஆய்வு செய்தனர்.

4 .  சுமார் 7000 சிற்பக் கலைஞர்கள், 3000 தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினார்.

5. 6000 டன் எடை கொண்ட இளஞ் சிவப்பு நிற பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப் பட்டு, முதலில் இயந்திரம் மூலமும் பிறகு நுட்ப வேலைகள் யாவும் வெறும் கைகளாலும் செதுக்கப் பட்டது. 

6 .  2005 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று "சுவாமி பிரமுக் மகராஜ் அவர்கள்' (His Holiness Pramukh Swami Maharaj, revered spiritual leader of BAPS )  இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங், எதிர்க் கட்சித் தலைவர் திரு. எல்.கே.அத்வானி மற்றும் 25000 பிரதிநிதிகள், லட்சக்கணக்கான மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

7 .  "உலகின் மிக விசாலமான ஹிந்துக் கோயில்" World’s Largest Comprehensive Hindu Temple என்று, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.
(Three temples, the Meenakshi Amman Temple in Madurai, the Sri Ranganathaswamy Temple in Srirangam, and the Arunachaleswarar Temple in Thiruvannamalai, all located in Tamil Nadu, India, are claimed to be larger than Akshardham. The trustees of these temples have reportedly disputed the Guinness World Record)

8 .  இதே போன்ற "சுவாமி நாராயணா" கோவில்கள் Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS)சுவாமி நாராயணா சான்ச்தா என்னும் அமைப்பின் மூலம் உலகின் பல பாகங்களில் 700 -க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ளன.  
(மேலே கிளிக் செய்து பாருங்களேன்! ஆச்சர்யத்தில் எனது தலை சுற்றுகிறது. இந்த ஒரு கோவிலே உலக அதிசயம் போன்றது -மற்றவை யாவும் அதேபோல் குறைவின்றியே இருக்கும் என்று சத்தியமாய் நம்பலாம்! இதையெல்லாம் சாத்தியம் ஆக்கிய தெய்வத்திரு பிரமுக் சுவாமிஜி மகாராஜ் அவர்களை, மற்றும் அவரது சக சாதுக்களை என்ன சொல்லி வணங்குவது/வாழ்த்துவது? எந்த வார்த்தைகளும் என்னிடத்தில் இல்லை!)

About BAPS
BAPS is a worldwide socio-spiritual organization in consultative status with the Economic and Social Council of the United Nations dedicated to peace and harmony. BAPS strives to provide spiritual, cultural and social care for society as a whole and is known for its strict observance of ahimsa, the Hindu code of nonviolence. BAPS conducts humanitarian work through a worldwide network consisting of over 8,100 centers, including 4,070 children's centers. Some examples of BAPS' work include natural disaster relief, water conservation and reforestation. Most recently, BAPS was instrumental in the recovery, relief and rehabilitation efforts of the state of Gujarat after the devastating earthquake in January 2001. In North America, over 50,000 families carry out the vision of BAPS.
For more information on BAPS, visit its website at www.swaminarayan.org.

___________________________________________________________________________
 
அது போகட்டும். நாம் எப்போது அக்ஷர்தாம் கோவிலுக்குப் போகலாம்? 


ஆயிரம், வானளாவிய கட்டிடங்களை நவீன தொழில் நுட்பம் கொண்டு உலகில் ஒருவர் கட்ட முடியும். ஆனால், இது போன்ற உயிரோட்டமான சிற்பங்களை நம் இந்தியா தவிர உலகில் வேறெங்கும் காண முடியுமா?


உலகின் உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள், இங்குள்ள கோவில்களின் ஒரு தூணுக்கு இணையாகுமா? 


பல்லாயிரம் வருடங்கள் தாண்டியும் தூய்மையும், அழகும், தெய்வீகமும், கலைநுட்பமும் ஒருங்கே சேர்ந்து கம்பீரமாக நிற்கும் நமது இந்துப் பண்பாட்டுக் கோவில்களைக் கண்டு களியுங்கள்! 
அவற்றைக் காப்பாற்றுங்கள்!

அதன் சிற்பங்களை வடிக்கும்-இன்னும் உயிர்வாழும் அந்த உன்னதக் கலைஞர்களைக் காப்பாற்றுங்கள்! 

நமது இந்தியப் பாரம்பர்யம். பண்பாடு கலாசாரத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்-இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று வாருங்கள்!

பெருமை கொண்டு தலை நிமிர்ந்து நில்லுங்கள்! 


-Yozenbalki
(மோகன் பால்கி)