Translate this blog to any language

Hindu-temples famous-temples Indian-temples Hindu-architecture ancient-temples லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Hindu-temples famous-temples Indian-temples Hindu-architecture ancient-temples லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2010

Hindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை


கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த  
பாரத நாட்டில் நமது தமிழ்நாட்டில் மட்டுமே எத்தனை 
எத்தனையோ புராதன சிவாலயங்களும், விஷ்ணு 
ஆலயங்களும் உள்ளன. அதில் உள்ள தெய்வீக அழகும் 
கலை அம்சமும் ஆயிரக் கணக்கான வருடங்கள் கழிந்தும் 
பிரமிப்பு ஊட்டுபவை ஆகும்! இந்த விஞ்ஞான காலத்திலும்
இனி ஒருவரும் செய்ய இயலாத அளவுக்கு ஆச்சர்யமான 
நுணுக்கங்கள் உடையவை. நாம் கூறும் 108 திருப்பதிகள் 
அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று 
போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 
84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 
அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் 
இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் 
என்று போற்றப்படும் 274 ஆலயங்களில்  
264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. 
இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், 
தொன்மையும், பெருமையும் உள்ளவை. ஆக, 
தமிழர்களின் சிற்பக் கலை எந்த அளவுக்குத் தொன்மையும் 
சிறப்பும்  மற்ற இனத்தினரால் அது போல ஓரிடத்திலும் 
உருவாக்க இயலாத அளவுக்கு சவாலானதாகவும் 
இருந்திருக்கிறது என்று உணரலாம். 



108 திவ்ய தேசங்கள் ( வைணவக் கோயில்கள்)
          என்ன? இப்பவே புறப்பட்டுவிட்டீர்களா? 

          நன்றி: http://temple.dinamalar.com/KoilList


         - மோகன் பால்கி