Translate this blog to any language

Hitler-Rajabakshe Chennai-protest tamil-leaders லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Hitler-Rajabakshe Chennai-protest tamil-leaders லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூன், 2010

Hitler RajaBakshe - கொடுங்கோலன் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரிப்பு! : சீமான், திருமா, வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு, ராஜேந்தர் உட்பட பெருமளவானோர் கைது!

 
8th June 2010/Tamil Nadu: ராஜபக்ஷே இந்தியா வருவதை 
எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல
பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில்
ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு
உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ,
நல்லகண்ணு, இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.
ராஜபக்ச இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும்
அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக்
கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள்
இன்று போராட்டத்தில் குதித்தன.
இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம்
அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பொலிஸார்
தடை விதித்திருந்தனர்.
இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும்
நடைபெறும்என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி
இன்றுகாலை பத்து
மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.
வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான்,
விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர்.
இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ச ஒழிக
என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.
பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி
பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை பொலிஸார்
தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது
இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி
பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர்
கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக,
தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது
செய்யப்பட்டனர்.
திருச்சியில் ராஜபக்சவின் கொடும்பாவியை சிவசேனா
கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13
தொண்டர்களை பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர்
கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள்
கட்சி சார்பில் ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர்
ராஜபக்சவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்
நடத்தி கைதாகினர்.
நாமக்கல்லில் பொலிஸ் தடையைமீறி கருப்புக் கொடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது
செய்யப்பட்டனர்.
கோவையில் ரயில் மறியல்
கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச்
சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்
கைதானார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட தொல்.திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட
அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர்.
இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று
பிடித்துக் கைது செய்தனர்.
பல்வேறு கட்சிகள் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை
துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர்
கைதானார்கள்.
43 தமிழ்ப் புலிகள் கைது
தேனியில் ராஜபக்ச வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன்
ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்
கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது
செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை பொலிஸார் கைது
செய்தனர்.