Translate this blog to any language

சனி, 24 ஜூன், 2023

Gandhi ji 6 Years; Nehru ji 9 years in Prison


How many years Gandhi ji was in prison?


Mahatma Gandhi, the renowned leader of the Indian independence movement, spent a total of around 6 years in prison throughout his life. His time in prison was divided into several periods spanning different years. Here is a breakdown of the major imprisonments Gandhi faced:


South Africa Imprisonment: Gandhi's first imprisonment occurred in South Africa between 1908 and 1909. He was imprisoned for organizing civil disobedience campaigns against discriminatory laws targeting the Indian community.


Champaran Satyagraha: In 1917, Gandhi led the Champaran Satyagraha movement in Bihar, India, supporting the rights of indigo farmers. He was arrested and spent a few weeks in prison.


Kheda Satyagraha: In 1918, Gandhi initiated the Kheda Satyagraha in Gujarat, India, protesting against unfair taxation during a severe famine. He was arrested and imprisoned for a short period.


Non-Cooperation Movement: During the non-cooperation movement launched in 1920, Gandhi was arrested in March 1922 for his involvement in the movement. He was sentenced to six years of imprisonment but was released in February 1924 due to health concerns.


Salt March: The Salt March, also known as the Dandi March, took place in 1930. Gandhi and a group of followers marched to the Arabian Sea to produce salt in defiance of the British salt monopoly. Following the march, Gandhi was arrested in May 1930 and was sentenced to one year of imprisonment.


Quit India Movement: In 1942, Gandhi launched the Quit India Movement, demanding an end to British rule in India. He and other leaders were arrested on 9th August 1942, and he remained imprisoned until 6th May 1944, making it nearly two years of imprisonment.


These are the significant periods during which Gandhi was imprisoned. In total, the years of imprisonment amount to approximately 6 years.


🌸☘️🌸☘️🌸☘️


How many total years Nehru ji was in prison?


Jawaharlal Nehru, the first Prime Minister of India, spent a total of approximately 9 years in prison. His imprisonments occurred during different periods of the Indian independence movement. Here is a breakdown of the major imprisonments Nehru faced:


Civil Disobedience Movement: Nehru was arrested multiple times during the Civil Disobedience Movement, which began in 1930. Although his individual imprisonments were relatively short, they accumulated over time. In total, Nehru spent a few years in prison during this movement.


Quit India Movement: Nehru actively participated in the Quit India Movement, launched in 1942, which aimed for complete independence from British rule. He was arrested on 9th August 1942, along with other prominent leaders, and was released on 15th June 1945, after nearly three years of imprisonment.


Overall, Nehru's total years in prison amount to approximately 9 years. It's important to note that these periods of imprisonment were not continuous but rather scattered across different years, reflecting his active involvement in the struggle for India's independence.


Courtesy: chatGPT 


-YozenBalki 

Compilation

🌸☘️🌸☘️🌸☘️

செவ்வாய், 20 ஜூன், 2023

Why Do I like the Mandukya Upanishad?

எனக்கு மாண்டூக்ய உபநிஷத் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அது எதனால் என்றால், உலகத்தில் எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத ஒரு செய்தி அதில் காணப்படுகிறது!

உண்மையை அறிய முழு தரவுகள் தேவைப்படுகின்றன! அரைகுறை தரவுகள், அரைகுறை உண்மைகளையே உணர்த்துவனவாகும்! அது முழு உண்மையாகாது!

உண்மை என்பது மூன்று நிலைகளிலும் அறியப்பட வேண்டும்!
அவை
1. நனவு (ஜாக்ரதா)
2. கனவு (சொப்பனா)
3. உறக்கம் (சுசூப்தி)

இந்த மூன்று நிலைகளிலும் ஊடாக செல்வது துரியம் என்ற முழு விழிப்பு நிலையாகும்! (The absolute awareness)

இதைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே இந்த மாண்டூக்ய உபநிஷத்தின் உரையாசிரியர் கவுட பாதர் குறிப்பிடுவதாக இந்த புத்தகத்துக்கு முன்னுரை வழங்கிய சிஎஸ்ஐ அவர்கள் குறிப்பிடுகிறார்!

உலகத்தில் வேறு எந்த புத்தகமும் இந்த மூன்று நிலைகளிலுமான விழிப்புணர்வு பற்றி எங்குமே குறிப்பிடவே இல்லை எனலாம்! எனக்கு அது ஒரு இன்பமயமான மாபெரும் அதிர்ச்சி!

அதுமட்டுமின்றி இந்த புத்தகம் உடல் மனம் ஆன்மா என்ற மூன்று கூறுகளை பற்றியும் அய்யம் திரிபற விளக்குகிறது!

அத்தகு மாண்டூக்ய உபநிஷத்தின் பெருமைகள் பற்றி 1998 ஆம் ஆண்டு சென்னை வானொலி பண்பலை வரிசையில் நான் விரிவாக பேசி உள்ளேன்!

ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

மிக்க அன்புடன்,
Yozen Balki
____________________________________

"The Mandukya Upanishad"
Book

With Gaudapada's Karika and Sankara's Commentary

Translated by Swami Nikhilananda


Published by:
Advaita Ashrama
(Publication House of Ramakrishna Math)
5 Dehi Entally Road
Kolkata 700 014
Rs.150.00

Foreword:

The unique feature of Mändükya lies in this that while all the other Upanisads deal with the several phases of Vedanta, such as Religion, Theology, Scholasticism, Mysticism, Science, Metaphysica and Philosophy, Mandükya deals exclusively with Philosophy, as defined by the most modern authorities. 

The three fundamental problems of philosophy, according to this special treatise are,. (1) the nature of the external (material) and the internal (mental) worlds; (2) the nature of consciousness; and (3) the meaning of causality. 

Each of these subjects is dealt with in a chapter. whole at the very commencement. The first chapter sums up the There is nothing more for philosophy to do. While it shows how the most advanced modern sciences and modern philosophies are approaching its conclusions.

It gives to the world of our own times its central doctrine that partial data give partial truth, whereas the totality of data alone gives perfect truth. 

The Totality' of data we have only when the three states of waking, dream and deep-sleep are co-ordinated for investigation. 

Endless will be the systems of philosophy, if based on the waking state only. 

Above all inasmuch as this philosophy holds that mere 'satis- faction' is no criterion of truth, the best preparation for a study of Vedanta Philosophy is a training in scientific method, but with a deter mination to get at the very end: To stop not till the goal (of Truth) is reached.'

VSI (V. Subramania Iyer)


ஞாயிறு, 18 ஜூன், 2023

தந்தையர் தினத்தில் ஒரு மகளின் கடிதம்!

என் தாயுமானவருக்கு!

இல்லையில்லை…என் யாதுமானவருக்கு (மாதா, பிதா,குரு,தெய்வமென அத்தனையுமான என் அப்பாவுக்கு) இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
அப்பா!! ❤❤❤

மகள்களுக்கு அப்பா என்பவர் எப்போதும் ஆதர்சமே! 😍
என் அப்பாவுக்கு நானே இளவரசி!! 😍
  
ஆண்கள் அற்புதமானவர்களே! அதிலும் அப்பாக்கள் அதி அற்புதமானவர்கள்!! 
😍😍😍😍
      
மகளுக்காக அப்பாக்கள் என்னவேணாலும் செய்யத் தயாரா இருப்பாங்க! என்னோட அப்பாவுக்கு நான் கடைக்குட்டி பொண்ணு, அதனால ரொம்ப ரொம்ப செல்லம்! அம்மாவே பொறாமையா பாக்குற அளவுக்கு அப்பாவுக்கு பாசம் என்மேல!! 😍😍😍

அம்மா பாசம் தான் உலகத்துல ரொம்ப பெருசு, ஆனா என்னோட அப்பாவோ, அம்மாவுக்கும் கொஞ்சம் மேலதான்!! ❤

எங்க அப்பா விவசாயி! அதனால இயற்கை மேல அம்புட்டு நேசம்! அப்பாவுக்கு, விவசாயத்துக்கு நிகரா அப்பா நேசிக்குற விசயம்னா அது நிச்சயமா நான் தான்!! 😍😍😍

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்பா சின்ன வயசுல ஆசைப்பட்டு வாங்கவே முடியாம போன புல்லட் அவங்க திருமணநாள் பரிசா வாங்கிக்குடுத்தேன்! 

அதப்பாத்து சின்னப் புள்ளை போல "அந்த கம்பீரமான கணபதி" கண்கள்ல சந்தோச கண்ணீர பார்த்த தருணம் அவ்வளவு நெகிழ்வு!! ❤
    
இன்னைக்கு நான் என்னவா இருக்கேனோ அது அத்தனையும் சாத்தியமானது கணபதிக்கு மகளா பிறந்த ஒற்றைக்காரணமே! 😍😍😍
 
சமீபத்துல ஒருபதிவு பாத்தேன்! சாகுற தருணத்துல யாரோட இருக்கனும்னு நினைப்பீங்கன்னு ஒரு கேள்வி! சத்தியமா எனக்கு அப்பாதான் வேணும், என்னோட இறுதி தருணங்களில்!! 🙏🙏

தமிழ் மேல காதல், கண்ணன் மேல பித்து,இயற்கை மீதான நேசம்னு அத்தனை நற்குணங்களும் அப்பாவிடமிருந்து வந்தவையே எனக்கு!

படிப்பு வேலைன்னு நான் வாழ்க்கையில எத்தனை உயரத்த தொட்டாலும் அப்பாவோட செல்ல பொண்ணுன்னு சொல்றதுல தான் கர்வமே எனக்கு!! 😍😍😍
   
நான் பார்த்த முதல் ஆண் அப்பாதான்! அதனாலயே ஆண்கள் மீதான என்னோட பார்வையும் எப்பவும் மரியாதையானதே!! 😍

உலகத்துல சிறந்த அப்பான்னா அது என்னோட அப்பாதான்! இந்தப் பிறவி மட்டுமில்லாம இன்னும் எத்தனை பிறவியெடுத்தாலும் உங்களுக்கே மகளா பிறக்கணும் அப்பா!! 🙏🙏

இனிய தந்தையர் தின வாழ்த்துகள், தந்தையர் அனைவருக்கும்!! 🌹🌹🌹🌹

Courtesy: 
By
நான் காணாமலே 
மகளாகி நின்ற...
மதுமிதா கணபதி from Twitter Circle

சனி, 10 ஜூன், 2023

திமுகவில் நுழைய முயலும் சில பார்ப்பனர்கள்!!

தமிழக அரசியலில், குறிப்பாக திமுகவில் பார்ப்பனர்கள் நுழைய இருக்கிறார்கள்!

அது ஏன், எப்படி?

ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜகவில் இப்போது உள்ள மோடி-அமித்ஷா கூட்டணி பார்ப்பனர்களை நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்! 

அதனால்தான் அவர்கள் சுப்பிரமணியசாமியை கிட்டவே சேர்க்கவில்லை! "அவரும் தலையால தண்ணி குடிச்சி பார்த்துட்டர்...!!"

தமிழகத்திலும் பார்ப்பனர் அல்லாத பாஜக தலைமைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

மேலும் காஞ்சி சங்கர மடம் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை விட்டு வட இந்திய பனியா ஆகிய அதானி கையில் செல்ல இருக்கிறது என்று நக்கீரன் செய்தி போட்டு இருக்கிறது!

எனவே தமிழக பார்ப்பனர்கள் ஒன்று கூடி பாஜகவை கை கழுவ வேண்டும்; பிறகு ஒரு வளமான கட்சியில் சேர்ந்து கொண்டு தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்!

அதனால் தான் ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்ந்தால் அதில் இரண்டு வித இலாபம் கிடைக்கும் என்று எஸ்வி சேகரை விட்டு புகழ்ந்து அப்படி ஒரு ஐஸ் வைக்கிறார்கள்!

கூடிய விரைவில் பாஜகவில் இருந்து பார்ப்பனர்கள் வெளியேறி ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அதன் வழியாக "திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம்!" என்று வருவார்கள்!

அது ஒரு குயுக்தி, சதித் திட்டமாகக் கூட இருக்கலாம்! அதாவது நாக்பூர் பார்ப்பனர்கள் கொடுத்த தற்காலிக அசைன்மென்ட் ஆக இருக்கலாம்!

அதாவது ஆரிய பார்ப்பனர்கள் இருக்கிற கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது ஆர்எஸ்எஸ் க்கு தெரிந்து விட்டது! 

எனவே தற்காலிகமாக பார்ப்பனர்களை பாஜகவில் இருந்து பிரித்து வெளியே எடுத்து, தமிழக பாஜக ஏதோ ஒரு பார்ப்பனர் அல்லாத கட்சி போல ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்!

அதில் பாஜகவுக்கும் பார்ப்பனர்களுக்கும் தற்காலிக இலாபமும் உண்டு!

1. அதாவது பாஜகவுக்கு அது பார்ப்பனக் கட்சி என்ற பிம்பத்தை உடைத்து ஒரு ரெண்டு சதவீத ஓட்டு அதிகம் கிடைக்கும் வாய்ப்பு!

2. அதுபோல பார்ப்பனர்களுக்கோ தற்காலிகமாக திமுகவில் சேர்ந்து அங்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ள முடிகிற வாய்ப்பு!

3. திமுகவை ஆதரிக்கும் முற்போக்கு சக்திகள் பார்ப்பன சங்கத்தையோ அல்லது பாஜகவையோ எதை ஆதரித்தாலும், திமுகவை விட்டு விலகி நிற்பார்கள்! அது திமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்கும்; பாதிக்க வேண்டும் என்பது மறைமுக திட்டம்!

4. அனேகமாக பாஜகவுடன் சேரப்போகும் கட்சிகள் அதிமுக, பாமக, சாதிக்கட்சிகள் சில, (நாம் தமிழர் எதிலும் சேராமல் திராவிட கருத்தியலை திமுகவை மட்டும் எதிர்க்கும்)

5. அமித்ஷா வந்து விட்டு போன கையோடு மறைமுகமாக பல விஷயங்கள் நடந்து முடிந்திருக்கும்! அது முக்கியமாக "திராவிட சிந்தனை எதிர்ப்பு"! அதை நோக்கியே எல்லா காய்களும் ஆரியத்தால் இனி நகர்த்தப்படும்!

மற்றபடி எலக்சன் முடிந்தவுடன் ஆரிய பார்ப்பனர்கள் எப்பொழுதும் போல ஆர்எஸ்எஸ் புத்தியோடு ஸனாதன அதர்மங்களை, பற்பல கட்சிகளில் புகுந்து கொண்டு பின்பற்றுவார்கள்! 
திராவிடர் இயக்கங்களை ஒழிக்க வேண்டிய எல்லா சதி திட்டங்களையும் தொடர்ந்து செய்வார்கள்!

அதாவது, நேரடியாக தமிழர்களை வீழ்த்துவது அல்லது பின்புற கதவு வழியாக வந்து உள்ளே நுழைந்து அணைத்து, அரவணைத்து ஒழிப்பது என்ற இரண்டு வழிகளிலும் ஆரிய சாம்ராஜ்யம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

ஆரியத்தை அரவணைத்த அம்பேத்கர் இயக்க மாயாவதியின் சாம்ராஜ்யம் மாயமானது ஏன் என்று நினைவு கூர வேண்டுகிறேன்! 

பெரியார் என்ற பெருந் தத்துவம், அவர் தந்து விட்டுப் போன திராவிடர் இயக்க கொள்கைகள் இல்லாத இடத்தில் சனாதன அதர்மம் என்ற வர்ணாசிரம ஜாதீய நச்சுக் காற்று பரவி பல உயிர்களை பலி வாங்கிவிடும்!

எனவே திராவிடர் இயக்கங்கள், முற்போக்கு தலைமைகள், மக்கள் நல சிந்தனையாளர்கள் இந்த முறைதான் 
முழு விழிப்பாக இருக்க வேண்டும்; முக்கியமாக இப்பொழுது ஆளுங்கட்சியாக விளங்கும் திமுக!


கவனம்! 
கவனம்!! 
கவனம்!!!

-YozenBalki 

ஞாயிறு, 4 ஜூன், 2023

அழகுத் தமிழில் 111 சிவனின் திருப்பெயர்கள்

சிவன் ஒரு தமிழ்க் கடவுள் என்பதற்கு இத்தனை விதமான அழகான தமிழ்ப் பெயர்களே சாட்சி!

இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள பெரும் கோயில்களில் உறையும் மூலவர்கள், இறைவன் இறைவியின் திருப்பெயர்கள் அழகிய தூய தமிழில் அமைந்திருப்பதை நாம் காண முடியும்!

அவற்றை ஏறத்தாழ சோழர்கள் காலத்தில் அத்தகைய அழகிய தமிழ்ப் பெயர்களை சமஸ்கிருத மயமாக்கி 'பெயிண்டால்' எழுதி புகுத்தி உள்ளமை கண்கூடு! 

"தென்னாடுடைய சிவனே போற்றி!" என்பது தமிழர்களின் குரல்!

அத்தகு சைவ சமயத்தை ஆர்ய சமஸ்கிருத பார்ப்பனர்கள் தன்வயமாக்கி அதைப் போய் ஹிந்து மதம் என்று சொல்லி தமிழர்கள் நம்மை ஏமாற்றி வருகிறார்கள்!

🌸☘️🌸☘️

சிவனுக்கு (Siva) வழங்கப்படும் அழகிய சில தமிழ்ப்பெயர்கள்:

1. அகத்தரையர்.
2. அங்கணன்.
3. அங்கணாளன்.
4. அண்ணல்.
5. அத்தன்.
6. அந்தணன்.
7. அனலாடி.
8. அம்பலக்கூத்தன்.
9. அம்பலத்தாடி.
10. அம்பலவன்.
11. அம்பலவாணன்.
12. அரவணிந்தார்.
13. அரவணிந்தோன்.
14. அரவன்.
15. அருள்வடிவன்.
16. அழலாடி.
17. அழலிடமேந்தி.
18. அழலேந்தி.
19. அழனிறக்கடவுள்.
20. அழற்கண்ணன்.
21. ஆட்டுக்கோன்.
22. ஆடவலபெருமான்.
23. ஆத்திச்சூடி.
24. ஆத்தியன்.
25. ஆழியளித்தோன்.
26. ஆனன்.
27. ஆனையுரித்தோன்.
28. ஆறுசூடி.
29. ஆலமர்கடவுள்.
30. ஆலமர்செல்வன்.
31. இறை.
32. இறையான்.
33. இறையோன்.
34. இறைவன்.
35. ஈமத்தாடி.
36. எட்டுக்கொண்டார்.
37. எண்டோளன்.
38. எரியாடி.
39. ஏறூர்ந்தோன்.
40. ஐந்துமுகத்தோன்.
41. ஐந்தொழிலன்.
42. ஐம்முகன்.
43. ஒற்றியூரன்.
44. கட்டங்கன்.
45. கட்டுவாங்கன்.
46. கடுக்கைசூடி.
47. கணிச்சியோன்.
48. கண்ணுதல்.
49. கண்ணுதலான்.
50. கறைமிடற்றான்.
51. கலையுருவினோன்.
52. குன்றவில்லி.
53. கூத்தன்.
54. கூற்றுதைத்தோன்.
55. கொலைவன்.
56. கொன்றைசூடி.
57. சடையன்.
58. சடையப்பன்.
59. சடையோன்.
60. சிற்றம்பலவன்.
61. சிவன்.
62. சுடலையாடி.
63. சூலி.
64. செட்டியப்பன்.
65. செம்மல்.
66. செய்யான்.
67. சேயோன்.
68. தழலாடி.
69. தீயாடி.
70. நஞ்சுண்டோன்.
71. நம்பன்.
72. நீறாடி.
73. நீறணிகடவுள்.
74. நீறணிந்தோன். 
75. பகவன்.
76. பாலவன்.
77. பிச்சன்.
78. பித்தன்.
79. பிறைசூடி.
80. புலித்தோலுடையோன்.
81. பூளைசூடி.
82. பெருமான்.
83. பேயோடாடி.
84. பொடியாடி.
85. பொன்வில்லி.
86. பொருவிலி.
87. மங்கை பங்கன்.
88. மதிக்கண்ணியான்.
89. மதிசூடி.
90. மறைமுதல்.
91. மன்றன்.
92. மன்றவாணன்.
93. மன்றாடி.
94. மன்றுளாடி.
95. மழுவாளி.
96. மானிடன்.
97. மாதொருபாகன்.
98. மாதொருபாகனார்.
99. மாநடன்.
100. மானிடத்தன்.
101. மானிடமுடையோன்.
102. மானிடமேந்தி.
103. மானிடன்.
104. முக்கண்ணப்பன்.
105. முக்கண்ணன்.
106. முக்கண்ணான்.
107. முன்னவன்.
108. முன்னன்.
109. முறைவன்.
110. மூப்பான்.
111. வெள்ளியார்.

Courtesy: Another Blogger

https://mazhavu.blogspot.com/2023/05/blog-post.html?m=1


வெள்ளி, 2 ஜூன், 2023

A Doctor's Advice to Raman

Mr. Raman, a senior citizen retired from Govt service recently, on 5 January 2023 and Dr.Joshi, a senior surgeon, were travelling in the same compartment.

After introducing each other, Raman asked Dr Joshi, "doctor, as a retired person I have a question regarding health.

Apart from diabetes, high BP, cholesterol and obesity, can you name a single most important point, that senior citizens should take care of. I do know the health hazards of tobacco consumption and alcohol."

This way he hinted the doctor that he did some homework.

Dr. Joshi said, 
" good Mr. Raman, you already know the most prevalent risk factors that affect health most.

*What I always tell is not what procedure I do in the emergency room, but on how one can avert a situation to come to see me in the emergency room; and lead a quality life.*

At the outset, I suggest one to make a habit of *practising silence for a few minutes as the first thing before getting up from the bed*. It is a *calm reconciliation with one's own self.* Second is to *have an attitude of gratitude for life as a whole.* It may be towards the mother earth or the sun that are supporting life. 

It may be your society, parents, teachers or wife/husband. It can be any one and anything that is making a part of your life. This *attitude aligns you and orients you with cosmic force. It brings positivity and it will show energizing and healing effect on you. I will touch upon this later again.*

Coming to pure medical advice...

*Falling down is the most important risk factor for elderly.*

In my experience I have seen it as the most debilitating, and difficult to cope with or recover situation for the elderly patient and demanding situation for the family members or attendants.

*"Never fall down"* is the golden rule for elderly. 

For some unfortunate, falling makes the beginning of ending.

Raman grew curious, " If you don't mind what is your second most important advice?".

Dr. Joshi, " *Keep walking. Walking is living.* Walking helps in maintaining many health conditions including heart health. I know people in late 90s going for long walks. Ofcourse you should guard against many factors in walking at that age, but *not walking is a risk factor* for any age. Please note, it is not like people are walking because they are fit, but people are fit because they are walking. 

Those who can't walk due to medical reasons, should try pranayam, or breathing excercises that can be suggested by the family doctor."

Seeing the enthusiasm in the face of Raman, Dr. Joshi continued on his own.

Third most important point is , *" keep yourself hydrated. Elderly people are prone to reduced water levels and electrolytes in the body*. Drinking water by sipping frequently, butter milk, coconut water, ORS etc. help."

"Next important thing is good bowel and gut health*. Eating easily digestible and fibre rich foods will help. One should have cooked food, and avoid fried foods, bakery foods and fast foods. 

Eat moderately and have dinner at least three hours before going to bed. Daily consumption of a few dry friuts and seasonal fruits will be great for overall health as well. And walking and remaining hydrated also help in maintaining bowel health."

"Another important aspect of health is being active mentally and remaining calm emotionally. Having an attitude of gratitude, and contributing to someone's happiness, work like medicine. Some call it cosmic wisdom or Cosmic orientation.

It is important to prevent Alzheimer's and Parkinson diseases and depression.

There are *several positive activities you can engage yourself in, and you can pick up what interests you most for creating activity for the brain.* The *creative as well as the analytical functions of the brain should be put to use.*

 *Reading, Writing, and Arithmetic that we studied in school may be basic, but they are valuable habits as you age, for mental and motor skills.*

Traditionally, Ayurveda preparations of Brahmi and Aswagandha are used as supplements. 

May be I can add here that as you age more, you should have an RMP who visits you periodically and sees you closely from medical point of view. In case of any emergency *Time is the essence*. Early detection and quick response make a world of difference."

*"Lastly, to age gracefully, and to leave the world peacefully one needs God's grace. So meditate also. Medical care and meditation are complementary to each other."*

"And my bonus advice is *you should have your daily dose of entertainment*.

*Elderly are NOT barred from having entertainment and laughter.* A *relaxed mind and happy heart provide the best health and immunity".*

Mr. Raman thanked the doctor from the bottom of his heart. 

Please share with your loved ones.

*Wish you all a very Healthy, Hearty and Peaceful life in the Years to come.*


Courtesy:
-From WhatsApp University 

திங்கள், 10 ஏப்ரல், 2023

திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

திமுக மீது நமக்கு ஒரு சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

உலகின் பிற கட்சிகள் திமுக செய்த அளவுக்கு சாதனைகளை எந்த காலத்திலும் செய்ய முடியாது! 

உதாரணத்துக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்! உலகில் எந்த நாட்டிலும் அது அமெரிக்கா உட்பட, ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டருக்குள் எத்தனை டாக்டர்கள் எத்தனை இன்ஜினியர்களை அந்த நாடு உருவாக்கி இருக்கிறது என்று நீங்கள் போய் கேளுங்கள்!

இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்கு நடுவிலும் ஒரு டாக்டர் ஒரு இன்ஜினியர் என்று உருவாக்கியது திராவிடர் இயக்கம் ஆகும்; குறிப்பாக திமுக! 

இன்றைக்கு கூலி வேலைகள் செய்வதற்கு தமிழின இளைஞர்கள் இளம்பெண்கள் இங்கு வேலைக்கு கிடைப்பதில்லை! அந்த உடல் உழைப்பு வேலைகளை செய்ய வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்!

நமது தமிழ்நாட்டு குழந்தைகள் மருத்துவம் தொழிற்கல்வி போன்றவற்றை படித்துவிட்டு White Color Job என்று சொல்லப்படும் அலுவலகப் பணிகள் செய்து கை நிறைய சம்பாதிக்கும் நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார்கள்! அவர்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் கூலி வேலைகளில் இன்று இல்லை!

இது போன்ற ஒரு பெரிய சமூகப் புரட்சி உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மாநிலத்திலும் இதுவரை நிகழவில்லை!

ஒரு மரத்தை அது தரும் நற்கனிகளை கொண்டு அளவிடுவது போன்று நீங்கள் மதிக்கும் நல்லதொரு உலகத் தலைவரை அவரது நாட்டில் அவரது மாநிலத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் உயர்வு நிலை, உரிமை நிலை, கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு அளவிட்டு விட்டு, திமுகவை குறை சொல்ல பிறகு வாருங்கள்!


சரி! இத்தகு மாபெரும் சமூக புரட்சிக்கு, தமிழ் இன முன்னேற்றத்திற்கு மூல காரணம், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் என்க! அவர்கள் போன்று மானுட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெண்களின் உயர்வுக்காக முழு மனதோடு பேசி, எழுதி, நாடகங்கள் சினிமா, அரசியல் என்று ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டதன் பலன்தான் என்றும் அறிவீர்! 

அது போன்ற உன்னதமான தலைவர்கள் உலகில் ஒருவர் கூட கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்!

அந்த மூவர் மீதும் உள்ள பெருமதிப்பின் காரணமாக, அவர்களது மூலக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு இயங்கும் திமுக மட்டும் தான் தமிழ் இன வளர்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் பேருதவியாக இருக்கும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்!

வேறு எந்த கட்சியும் அந்தப் பணியை அவ்வளவு சிறப்பாக செய்வதற்கு வழியே கிடையாது! காரணம் நாம் பார்க்கிற ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் வெவ்வேறு நோக்கங்களும் வெவ்வேறு உள்ளார்ந்த கொள்கைகளும் வேறு விதமாகவே உள்ளன! நடைமுறை சாத்தியமற்ற, செயல் முறையில் இதுவரையிலும் எந்த மாநிலத்திலும் சிறிதும் சாதிக்காத கட்சிகளாகவே அவை ஒரு பின் தொடர்ச்சியின்றி காணப்படுகின்றன!

மேலும் அந்த கட்சிகள், அல்லது கொள்கைகள் தொடர்ந்து வேறு நாட்டில் வேறு மாநிலங்களில் அப்படி ஏதும் பெரிய ஆணியையும் பிடுங்கி விடவில்லை!

அப்படியெல்லாம் அந்த கட்சிகளின் கொள்கைகள் வெற்றி அடைந்திருந்தால் பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து திராவிடர் இயக்கம் ஆட்சி செய்த தமிழகத்துக்கு ஏன் அவர்கள் கூட்டம் கூட்டமாக பிழைப்பதற்காக வந்து குடியேறுகிறார்கள்? 

இந்த நுட்பமான உண்மையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!

நம் வீட்டு குழந்தைகளை நாம் சீர்திருத்தம் செய்து கொள்வது போல திமுகவை அப்படி பிழைகள் தவறுகள் நேரும் பொழுது நாம் சீர்திருத்தம் செய்து கொள்ளலாம்! 

ஆனால், நம் வீட்டில் குறை இருக்கிறது என்பதற்காக வீட்டையே எரித்து விட முடியாது! அதை அவ்வப்போது சீர் திருத்தம் செய்து பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

மேலும் திமுகவை விட்டால் வேறு எந்தக் கட்சியும், அதன் பிரதான கொள்கைகளும், Inclusive Growth கொண்டதாகவோ அல்லது ஆட்சி ஆள்வதற்கான தகுதி உடையதாகவோ இல்லை! ஒரு சில கட்சிகளில் இருக்கின்ற ஒரு சில தனி மனிதர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள்வதற்கான கட்சி என்று தீர்மானம் செய்ய இயலாது!

மேலும், வேறு எந்தக் கட்சியும் திமுக வெற்றி பெற்ற அளவுக்கு சமூக நீதி, அனைத்து மக்களுக்குமான கல்வி, வேலை வாய்ப்பு, பிற சாலைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், பெண்கள் விடுதலை போன்ற நிலைகளில் வேறு நாடுகளில் வேறு மாநிலங்களில் வென்றதாக உலகத்தின் சரித்திரம் இதுவரை சொல்லவில்லை!

அதனால் திமுகவை எதிர்த்து, ஒரு சில முற்போக்கு தோழர்கள் வேறு ஒரு வழியை யோசிப்பதே தவறு! 

மீண்டும் கூறுகிறேன், நமக்கு திமுகவை விட்டால் தமிழினம் மேலும் மேலும் முன்னேற வேறு கதி கிடையாது!

YozenBalki