Translate this blog to any language

சனி, 11 ஜூலை, 2026

கணவன் Logical... மனைவி Emotional : உளவியல் கதை

திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள்.

கார்த்திக் ஒரு Logic மனிதன்.
மீனா ஒரு Emotion மனிதி.
இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப நேசிப்பார்கள்.
ஆனால்...
அந்த அன்பை வெளிப்படுத்தும் முறை மட்டும் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம்! 


ஒருநாள்...
மீனா புதுசா Hair Cut பண்ணிட்டு வந்தாள்.
"என்னங்க... ஏதாவது வித்தியாசமா தெரியுதா?"
கார்த்திக் ஒரு நிமிஷம் பார்த்தான்.
"ஆமாம்... இரண்டு Inch குறைஞ்சிருக்கு."

மீனா...
"அய்யோ... நான் என்ன கேட்டேன்... நீங்க என்ன பதில் சொல்றீங்க!"
மறுநாள்...
மீனா...
"நான் குண்டா ஆயிட்டேனா?"
கார்த்திக்...
"Last Year 62 Kilo... இப்ப 65.4."
மீனா...
"எனக்கு Weight கேட்கல... அழகா இருக்கேனான்னு கேட்டேன்!"
ஒரு நாள்...
மீனா அழுதுகொண்டிருந்தாள்.
கார்த்திக் பதறி...
"என்ன ஆச்சு?"
"ஒன்னும் இல்லை..."
"அப்புறம் ஏன் அழறே?"
"அதுதான் தெரியல..."
கார்த்திக்...
"காரணம் இல்லாமல் எப்படி அழ முடியும்?"
மீனா...
"அதான் உங்களுக்கு புரியாது!"


ஒரு நாள்...
மீனா...
"நீங்க என்னை Love பண்றீங்களா?"
கார்த்திக்...
"1998-ல Love சொன்னேன்.
2002-ல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
இன்னும் வீட்டை விட்டு போகல.
EMI கட்டுறேன்.
Current Bill கட்டுறேன்.
இதுக்கு மேல Evidence வேணுமா?"


மீனா...
"ஒரு 'Love You' சொல்லிட்டா என்ன குறைஞ்சிடும்?"
ஒரு ஞாயிற்றுக்கிழமை...
மீனா...
"இன்று வெளியே போகலாமா?"
கார்த்திக்...
"எங்கே?"
"எங்கேயாவது..."
"Google Map-ல 'எங்கேயாவது'ன்னு Location வரலையே!"


Shopping போனார்கள்.
மீனா...
"இந்த Saree எப்படி இருக்கு?"
கார்த்திக்...
"வீட்ல ஏற்கனவே இதே Color-ல மூணு இருக்கு."
மீனா...
"அது Maroon.
இது Wine Red."
கார்த்திக்...
"எனக்கு ரெண்டுமே சிவப்பு."

ஒரு நாள்...
மீனா கோபமாக...
"நான் பேசுறதை நீங்க Feel பண்ணவே மாட்டீங்க!"
கார்த்திக் அமைதியாக...
"நான் Solution தேடுறேன்."
மீனா...
"எனக்கு Solution வேண்டாம்."
"அப்புறம்?"
"என்னோட பக்கம் உட்கார்ந்து... 'ஆமாம்... கஷ்டமாத்தான் இருக்கு'ன்னு சொல்லுங்க."
கார்த்திக்...
"அதனால் Problem Solve ஆகுமா?"
மீனா...
"ஆகட்டும்... ஆகாம இருக்கட்டும்... எனக்கு Husband வேணும்... Help Desk வேண்டாம்!"


ஒருநாள்...
இருவரும் ஒரு உளவியல் நிபுணரைச் சந்தித்தார்கள்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்...
"உங்க மனைவி ஒரு பிரச்சனையைச் சொல்லும்போது..."
"அவங்க தீர்வு கேட்கல."
"அவங்க உணர்வை நீங்க புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்குறாங்க."
"நீங்க..."
"அவங்க பேச ஆரம்பிச்ச உடனே Repair செய்ய ஆரம்பிச்சுடுறீங்க!"
அதற்கு கார்த்திக்...
"அப்படின்னா நான் என்ன பண்ணணும்?"
உளவியல் நிபுணர் சிரித்தார்.

"முதல்ல ஐந்து நிமிஷம் கேளுங்க."
"ஆறாவது நிமிஷத்துல தான் Advice கொடுங்க."
அந்த நாளிலிருந்து...
மீனா பேசுவாள்.
கார்த்திக் அமைதியாக கேட்பார்.
ஐந்து நிமிடம் கழித்து...
"இப்ப Solution சொல்லட்டுமா?"
மீனா சிரிப்பாள்.
"இப்ப சொல்லுங்க... இப்பதான் Ready!"

சிறிய உளவியல் உண்மை
பல தம்பதிகளின் சண்டைக்குக் காரணம் அன்பு இல்லாதது அல்ல.
ஒருவர் பிரச்சனையைத் தீர்க்க பேசுகிறார்.
மற்றொருவர் தன் உணர்வைப் பகிர பேசுகிறார்.
இந்த இரண்டு மொழிகளும் வேறு என்பதைப் புரிந்துகொண்டால்...
வீட்டில் சண்டை குறையும்... சிரிப்பு அதிகரிக்கும்! 

(குறிப்பு: எல்லா கணவர்களும் இப்படித்தான், எல்லா மனைவிகளும் இப்படித்தான் என்று அர்த்தமில்லை. சில வீடுகளில் இதெல்லாம் தலைகீழாகவும் இருக்கும்! )

-Yozen Balki 
Senior Psychologist 

www.yozenmind.com
💢🌿💢

Note: 

Left Brain Traits: Analytical, logical, linear, mathematical, and verbal.

Right Brain Traits: Intuitive, emotional, creative, artistic, and visual.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: