பைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம்.
வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்துசேரும் பிற மாவட்டத்து/மாநிலத்து மக்கள் தொகை, பெருகி வரும் அடுக்ககங்கள் இதுதான் இன்றைய சென்னையில் நிலை. அதனால் இங்கு அடுத்தவர்கள் முகமோ முகவரியோ தெரியாத நிலையில் நல்லவன் கெட்டவனைப் பிரித்தறிந்து கவனமாய் இருக்க இயலாச் சூழலை காலம் கொண்டுவந்து சென்னையிடம் சேர்த்திருக்கிறது! இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! முக்கியமாக காவல்துறைக்கு இனி சவாலான காலம் துவங்கிவிட்டது!
இரண்டு நாட்களுக்கு முன்பு கெல்லிஸ் சிக்னலைத் தாண்டும் போது ஒரு நிகழ்ச்சி. சிக்னல் முடியும் சமயம், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் மார்வாடி இளைஞர்கள் இருவர் வளைத்தும் நெளித்தும் அபாயகரமாக திரும்ப, சப்தம் கேட்டு நிலை தடுமாறி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டி-யில் இருந்து விழுந்து விட்டாள். காயம் பெரிதாய் ஏதும் இல்லை எனினும் இதைக் கண்ணுற்ற பலருக்கும் அந்த இளைஞர்கள் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. அவர்கள் போன வேகத்துக்குபோய் அவர்களைப் பிடிக்க முடியாது என்று தோன்றியது. அது போகட்டும் இது வொரு சின்ன சம்பவம் தான் ! இது போன்ற கதைகள் சென்னையில் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
ஆனால் இது போன்ற, இன்னும் இதைவிட அபாயகரமான மற்றும் அநாகரிகமான வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு கேள்வி?
முன்பெல்லாம், 80- களில் இருந்தது போல, தவறு நிகழும் இடத்திலேயே ஆளை மடக்கி காற்றைப் பிடுங்கி விடுவது, நாலு சாத்து சாத்துவது அசிங்கமாக திட்டுவது போன்ற எதுவுமே செய்யாமல் (போலீசார் அப்படி செய்தால் உடனே நம்ம ஆட்கள் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு எல்லாம் மனித உரிமை பேசவந்து தொலைப்பார்கள்..) பொம்மை போல இருந்தால் அல்லது ஆளும் அரசுகள் அப்படி (வோட்டு வாங்குவதற்காக) கைகட்டி வாய் பொத்திக் கொண்டு இருக்கும்படி காவல் துறைக்குச் சைகை செய்து வைத்தால் வீங்கிப் பெருகும் சென்னையில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்தக் கடவுளாலும் முடியாதுடா சாமி !
அட இல்லையா? அநாகரிகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓரிரு முறை மன்னிப்பு. அதனை அவர்களின் டிரைவிங் லைசென்சில் உடனே பதிந்து வைப்பது. அதன் பிறகு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியான அளவுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையே ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை கடுங்காவல் சிறையில்....(Contd..)