அவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்?
நாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம்.
நாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து
அவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்!
ஆபாசப் படங்கள் எடுத்து
திரைப்படம், தொலைக்காட்சி,
இன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது
நமது குழந்தைகள் கிடையாதே!
அதுவுமன்றி, வன்முறைகளை
ஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது,
செயற்கை பஞ்சம் உருவாக்குவது,
காடு மலைகளை அழிப்பது
இவை யாவற்றையும்
பெரியவர்களான நாமே செய்து வருகிறோம்!
குழந்தைகளின் கண்களை பாருங்களேன்!
அங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம்,
ஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள்.
குழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்!
மாறாக,
தேங்கிய குட்டை
ஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது.
குழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்!
அதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.
வெறும் அறிவு புகட்டுதல் என்பது
உயிரற்ற பொம்மையை
சிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்!
-யோஜென் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: