Translate this blog to any language

சனி, 7 செப்டம்பர், 2024

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி உடைக்க முடியுமா?


பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா?

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது இப்படி சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து "சூத்திரப்பயலே தள்ளிப் போடா" என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

8) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17)முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18)முன்பு எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு ஸ்ரீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே! இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35 இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார்.

பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள்!
ஏமாறப் போவது நீங்கள்தான்!

-Courtesy:
https://x.com/dravidafirewall?t=twSu2kApJ0NTJnxGX6s1mw&s=09

சனி, 17 ஆகஸ்ட், 2024

Why do I like Dr. Thirumavalavan, VCK? Poem


Who is Thiruma, my heart asked me?
A warrior for justice, is the answer I see.
With Periyar and Ambedkar as his guiding light,
He fights for equality, day and night.

A coin with two sides, a symbol so fine,
Heads and tails, a perfect blend in design.
Thiruma's heart beats for a noble cause,
Compassion and equality, his endless pause.

His sword is his voice, his shield is his might,
He battles for truth, day and night.
No unfair thoughts cross his mind,
Integrity is his guide, all the time.

Born in a community, once oppressed,
He works for their progress, and never repressed.
He sees beyond castes, and creed,
A true leader, in word and deed.

He runs tirelessly, for a noble cause,
A society free from discrimination's laws.
No rest for his legs, no pause in his stride,
Thiruma, the warrior, gliding with pride.

Not just a leader, but a guiding light,
For brothers lost, and sisters in flight.
A friend to companions, on this journey long,
Thiruma, the brave, singing a happy song.

Let's give him rest, for his weary feet,
For now, let's ease his physical beat.
May we continue his mission, for 100 years and more,
Carrying his legacy, forever in store.

🌿🌿💫💫

Yozen Balki 
Senior psychologist 
Chennai.

Dr. திருமாவை எதற்குப் பிடிக்கிறது? கவிதை



ஆகஸ்ட் 17: இன்று அவருக்கு பிறந்த நாள்: 

டாக்டர் திருமாவை எதற்கு பிடிக்கும் என்று எனது மனதைக் கேட்டேன்! 
                        பதில் வந்தது:

திருமா என்றால் ஒரு தங்க நாணயம் 
அதன் ஒரு புறம் பெரியார் மறுபுறம் அம்பேத்கர் 
ஒரு பக்கம் கத்தி மறு பக்கம் கேடயம்!

திருமா ஆதிக்க கொடுமைகளை
அனுதினம் எதிர்ப்பவர்!
ஆரிய சனாதன கருத்துக்கள் மறுத்து மாநாடுகள் போடும் தீரர்!
உண்மை நன்மைகளை மனம் திறந்து பாராட்டுபவர்! 
நேர்மை இல்லாமல் சிந்திக்க அவருக்கு ஒருபோதும் தெரியாது! 

சிந்தனைப் பேச்சு செயல் மூன்றிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்! 
அவர் பிறந்த தலித் சமூக முன்னேற்றத்துக்கு உழைப்பவர் என்றாலும் 
அவரால் பிற சமூகங்களை நேர்மை தவறி பேச முடியாது! 

ஏனென்றால் 
அவர் ஒரு ஜாதிக் கட்சியின் தலைவர் அல்ல. 
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிற கட்சியின் பொது நிலைத் தலைவர்! தமிழ்நாட்டு பரப்புக்குள் சுருங்கி விடாமல் இந்தியம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்! 

ஒரு பெண்ணைத் திருமணம் செய்யாமல் 
தனது விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை திருமணம் செய்து கொண்ட வீரர் ! 

அவர் 
ஓடிக்கொண்டே இருக்கிறார் 
கால்கள் வீங்கிக் கொண்டே இருக்கின்றன;
நல்லவர்கள் மனம் வலிக்கிறது! 
அவரால் ஓய்வெடுக்க முடியாது! 
ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக 
ஓடியபடியே இருக்கிறார்! 

அவர் காண விரும்பும் சமூகம் 
பிறவியில் பேதமற்ற
சாதியற்ற சமூகம்! 

அவர் இன்று திருமா அல்ல; நம்முன்
உயிர் வாழும் பெரியார்-அம்பேத்கர்! 

அரசியலுக்காக சமரசம் செய்யாதவர்! 
ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் 
அநீதியால் அவரை விலைக்கு வாங்க முடியாதவர்!

அரசியலை அவர் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகிறார்; தன் சொந்தப் புகழுக்காக அல்லவே அல்ல! 

எந்த ஒரு சங்கடமான சூழலிலும் தனித்துவமாக சிந்திக்கத் தெரிந்த சமூக விஞ்ஞானி! 
நினைத்ததை மனம் திறந்து 
எளிய மக்களுக்கு புரியும் வண்ணம் பேசுபவர்! 

வழிதவற இருந்த தம்பிகளின் 
கலங்கரை விளக்கு, 
கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு அண்ணன், 
சக தோழமையாய் பயணிக்கும் 
அன்பர்களுக்கு ஆசிரியர்!

எளிய மக்களின் இறைவன்!

அவரை நாம் கட்டாயப்படுத்தியாவது 
அவரது வீங்கிய கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு தர வேண்டும்! 

இதுவே அவரது பிறந்த நாளில் நான் தோழர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்! 

அவர் 100 ஆண்டுகள் கடந்தும் 
நிம்மதியாக இருக்க வேண்டும்!
இந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும்!

அதற்காக அவரது இந்த இனிய பிறந்த நாளில்
அந்த பிரபஞ்ச சக்தியை 
இறைமையை நான் வேண்டுவேன்!

Yozen Balki 
💫💫🌿🌿💐💐

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

Don't mess with Water ever! (Poem)


Billions of years, water's flow,

Unrelenting, as it finds its way to go,

It claims its path, its rightful place,

And none can stop its steady pace.


With gentle touch or mighty roar,

It takes back what it's owed before,

No human guile, no cunning might,

Can hold back water's rightful sight.


It flows, it carves, it shapes the land,

And takes its own, with steady hand,

No force can stop, no power can stay,

Water's resolve, come what may."


- Yozen Balki

🌿💐🌿💐🌿




War of the World: Protect the Waterways to Avoid Floods!

Why are we witnessing widespread floods and the destruction of major cities across the globe, even in a time when the overall amount of rainfall is decreasing?



In the past, it was common to say that it rained three times a month, equating to about 36 days of continuous rain throughout the year. However, today, even just two days of rain can wreak havoc, causing widespread destruction across entire countries and cities.
Oh no! Has natural rainfall become a problem?

Why Are We Afraid of Rain? 

In recent times, rain, once a symbol of renewal and sustenance, has become a cause for alarm. Water pooling and sudden floods have turned the soothing showers into a source of destruction. But what is behind these abrupt and damaging floods? The answer can be summed up in one line: Human Greed.

Much like how the government ensures that murderers and thieves do not go unpunished, there should be strict repercussions for those who contribute to water scarcity and environmental degradation. This lack of accountability is why we now face devastating floods and widespread damages.
Unraveling the Causes of Sudden Floods
Natural Water Flow: Water naturally flows from higher to lower areas, eventually making its way to the sea.

Mountain to Sea Journey: 

Water travels from high mountains through a network of waterways including mountains, waterfalls, dams, rivers, streams, canals, ponds, reservoirs, tanks, wetlands, marshes, creeks, brooks, and tiny waterways such as ditches, drains, gullies, rills, and runnels.

Crucial Waterways: These waterways are vital as they form a continuous connection that allows excess rainwater to flow freely and reach the sea.

Disappearance of Surface Waterways
In major cities worldwide, the extensive network of surface waterways and canals that facilitated this natural water flow has vanished. In Tamil Nadu, for instance, lands marked as 'Oodai porambok' and 'Kaalvaay Porambok' ( ஓடைப் புறம்போக்கு / கால்வாய் புறம்போக்கு in Tamil) in land records have been encroached upon by antisocial elements.

Impact of Encroachment:

These encroachments have led to houses and shops being built over crucial waterways, blocking them and causing severe flooding. Government officials who permitted electrical connections, water supply, and collected municipal taxes for these illegal structures should face severe punishment under criminal laws. If possible, their properties should be confiscated.
Root Causes of Encroachment

Lack of Agricultural Promotion: 

The government’s failure to promote agriculture has led to the decline of villages and water conservation efforts.

Migration to Cities: 

Young people are moving to modern industries, while older individuals are left without resources. This migration has led to a surge in city populations, with people forced to live in slums, often on dried-up lake beds and canal banks.

Illegal Settlements

These settlements start as huts and eventually turn into concrete buildings, contributing to the blockage of natural waterways.

Consequences for Urban Areas:

This unchecked urbanization has left no space for children to play or move around. Even small government-owned spaces have been encroached upon, turning cities like Chennai, Coimbatore, and Tiruchirappalli into urban "hells," thanks to these antisocial elements.

Let's move on! All of this is a summer story!
Addressing the Dual Threat of Floods and Drought: A Call to Action

As the rainy season arrives, the irony of our situation becomes painfully clear. The excess water, with no natural channels left unblocked by human encroachment, has nowhere to go. It meanders aimlessly, invading homes and streets, before eventually finding its way to the sea. By then, entire towns are inundated with water. What a cruel twist of fate—we suffer water scarcity like desert nations during the summer, begging neighbouring states for water. People are forced to buy water in plastic bottles for exorbitant prices, ranging from 50 to 100 rupees.

The Paradox of Floods and Drought:

One day we face floods, and the next day, a drought. How can we expect respect when our water management is in such disarray? The situation demands immediate and decisive action. 

Here’s what the government should do:

Halt Issuance of Pattas for Waterways: 
Cease the issuance of land deeds for waterways. These lands should be preserved for their intended purposes, regardless of how long it takes to reclassify them. This includes lake porambok, canal porambok, and grazing lands.

Secure and Demarcate Government Lands:

Identify and secure lands already registered in Village A-Registers. Clearly demarcate their boundaries with stone markers to emphasize land recovery and protection. Implement stricter laws and punishments, including property confiscation for violators.
Differentiate Between the Poor and Antisocial Elements: The government must decide whether a civilized society should suffer for the greed of a few hundred individuals. We need to distinguish between genuinely needy individuals and antisocial elements, ensuring we don't confuse the two.

Regular Inspection and Maintenance of Waterways: 

Officials should inspect and maintain waterways every six months, utilizing flood relief funds for this purpose. This proactive approach will reduce the need to seek financial aid from the central government annually.

Proper Waterway Maintenance to Prevent Floods and Droughts

By maintaining waterways properly, we can mitigate the risks of flash floods and severe droughts, creating a more balanced and sustainable water management system.
Our current predicament of alternating between floods and droughts is unsustainable and demands urgent attention. 

By implementing these measures, we can restore natural water channels, ensure efficient water management, and protect our towns and cities from the destructive cycle of excess flood and scarcity of water both.

-Yozen Balki 
(My old blog year 2011: English Translation)

💫💫🎊🎊
https://yozenbalki.blogspot.com/2011/11/protect-water-protect-your-city.html?m=1

💞💞🎊🎊💫💫

செவ்வாய், 16 ஜூலை, 2024

பென்ஷன் தராத நாட்டில் நாட்டுப் பற்று எப்படி வரும்?


முகநூலில் ஒருவர் ஒரு வயதான தந்தையை பார்த்துக் கொள்ளாத ஒரு ஏழை மகனைப் பற்றி எழுதி இருந்தார்! 
அந்த ஏழை மகனை எல்லோரும் திட்டி திட்டி எழுதி இருந்தார்கள்!

ஒரு முக்கியமான கூறு நாம் கவனிக்க தவறுகின்றோம்! ஓரளவுக்கு வாய்ப்புள்ள யாரும் தனது தந்தையை தாயை அப்படி விட்டு விட மாட்டார்கள்; அது இயற்கை குணம் அல்ல! அது எல்லாமே இல்லாத கொடுமையில் விளைகின்ற காட்சிகள்!

வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை நாம் யூட்யூபில் பார்க்க முடியும்! காரணம் அங்கு லஞ்சம் என்பது 95% கிடையாது! மேற்படி அங்கு ஆளும் அரசுகள் வயதானவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பென்ஷன் வழங்குகின்றன! அது அங்கு போதுமான அளவுக்கும் அதிகமாகவே இருக்கிறது!

ஒரு நல்ல அரசாங்கம் ஒழுங்காக இருந்தால், இங்கும் அப்படி 60, 65 வயதுக்கு பிறகு ஒரு குறைந்த தொகையை அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தரலாம்! 

ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசு தருகின்ற பணத்தைக் கொண்டு மிச்சம் பிடித்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருகின்ற பற்பல மனிதர்கள் எனக்குத் தெரியும்! 

(எந்தெந்த நாட்டு அரசுகள் அப்படி தங்கள் மக்களுக்கு பென்ஷன் தொகை தந்து நாட்டுப்பற்றை வளர்க்கிறது என்று ஒரு 10 நாடுகளை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்!)

இத்தனைக்கும் அந்த நாடுகள் இந்தியாவைப் போன்று அப்படி ஒன்றும் வளமான, மற்றும் எல்லாம் விளைகின்ற, அனைத்து மக்களும் கடுமையாக உழைக்கக்கூடிய நாடுகள் அல்ல! பாதி நேரம் பனி மூடிக்கொள்ளும், அப்புறம் எங்கே உழைப்பது?

ஒரே ஒரு விஷயம் அங்குள்ள அரசியல்வாதிகள்/அதிகாரிகள் இங்கு போல் மெகா கொள்ளை அடிப்பதில்லை! அது ஒன்றுதான் இந்த நாட்டின் சாபக்கேடு! அதனால்தான் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்ற வறுமை!

உலகின் பற்பல நாடுகளில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்பதும் மனிதர்களை வாட்டி வதைக்கின்ற அளவிற்கு தொட்டதற்கெல்லாம் வரி போடும் வழக்கம் என்பதும் இங்கு போல் கிடையாது! இருந்தாலும் அவன் பென்ஷன் தந்து விடுகிறான்!

ஆனால், இந்த நாட்டில் ஊர் பெயர் தெரியாதவன் எல்லாம் இங்கு சிலநூறு கோடிகள் நமது உழைப்பை கொள்ளை அடித்து வைத்திருக்கிறான்! 

அட பாடுபடும் மக்களின் உழைப்பு இல்லாமல் இந்த நாட்டில் அப்படி ஒரு சில பணக்காரர்கள் ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில நடிகர்கள் ஒரு சில அதிகாரிகள் மட்டும் பல்லாயிரம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி சாத்தியம்? 

ஆனால், அப்படி கஜானாவை நிரப்புகின்ற பொதுமக்கள் தருகின்ற வரிப்பணத்தில் இருந்து வயதானவர்களைப் பராமரிக்க ஒரு பென்ஷன் தொகை தருவதற்கு இங்கு வக்கு இல்லை! காலமெல்லாம் வரி கட்டி கட்டி கோவணத்தைக் கூட இழந்தவன் மீது இந்த அரசுகள் மீண்டும் குறை கூறுகின்றன! 

அந்த காலத்தில் மதவாதிகள் இதெல்லாம் உன்னுடைய தலைவிதி என்று சொன்னது போல, இந்த காலத்து அரசாங்கங்கள் நீங்கள் இன்னும் நன்றாக உழைக்க வேண்டும் என்று பம்மாத்து வேலை செய்கின்றன!

சரி! ஏதோ மாநில அரசு ஒன்றிய அரசுக்கு கப்பம் கட்டி விட்டு, கல்வி வேலைவாய்ப்பு உள் கட்டமைப்பு வசதி, அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் போன்றவற்றை தந்து விட்டு மீதமுள்ள பணத்தில் தானாக முன்வந்து ஒரு ஆயிரம் ரூபாய் "உரிமைத்தொகை" தந்தால் அதற்கு ஆமைக்கறி சாப்பிடுபவர்கள் அவசரமாக ஓடி வந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்!!

மாநில அரசோ மத்திய அரசோ மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள் தானே! அவர்கள் இந்த நாட்டு வயதானவர்களின் பொருளாதாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ஆளுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தரக்கூடாதா?

அப்போதுதான் அதற்குப் பெயர் நாடு!

மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி விட்டு அவர்களை அம்போ என்று விட்டுவிடுவது என்ன நியாயம்? அப்புறம் பிள்ளைகள் சோறு போடவில்லை என்று கதறுவது என்னடா நியாயம்? 

ஒரு பேச்சுக்கு ஒரு வயதான பெரியவர் 90 வயது வரைக்கும் இருந்தால் அவருடைய மகன் 60 வயதில் இருப்பான்! அவனையே இந்த நாடு, ஏற்கனவே கொள்ளை அடித்து வறுமையில் வைத்து இருக்கிறதே! அவன் தன் தந்தைக்கு என்ன செய்வான்?


அவனே ஒரு கூலித் தொழிலாளி என்றால், அவனது பெற்றோர்களை அவன் எப்படி கவனித்துக் கொள்ள முடியும்? அப்படியும் இந்த நாட்டில் 95 சதவீத முதியவர்கள் தங்கள் முதிய பெற்றோர்களை பார்த்துக் கொள்கிறார்கள்; கைவிட்டு விடவில்லை! 

விதிவிலக்குகள் ஒரு சில இருந்தால் அது விதி ஆகாது!

ஆக, இங்கு அரசாங்கம் தான் தனது மக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது! 

இது புரியாத வரை நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்போம்! ஆளும் அரசுகள் பழியில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளும்!

கேட்டால் அது சின்ன நாடு நமது பெரிய நாடு என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்! சின்ன மரத்தில் சின்ன மாங்காய் பெரிய மரத்தில் பெரிய மாங்காய் என்றா காய்க்கிறது?

பெரிய நாடு என்பதால் நீங்கள் சிறிய வரி வாங்குகிறீர்களா? பெரிய நாடு என்பதால் இங்குள்ள அதிகாரிகள் சிறிய சம்பளம் வாங்குகிறீர்களா? உங்களுக்கு மட்டும் எல்லாம் சரியாகத்தானே நடக்கிறது? 

ஒரு பேச்சுக்கு நமக்கு ஈடான மக்கள் தொகை உள்ள சீனாவில் நிலைமை எப்படி இருக்கிறது என்று யூடியூபில் சென்று பாருங்கள் புரியும்! அவர்கள் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறார்கள்! அங்கு சில லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை தான்! அதனால்தான் அந்த நாடு அமெரிக்காவுக்கு ஈடாக இருக்கிறது! 

சின்ன நாடு பெரிய நாடு என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது அறியாமை ஆகும்!

முதலில் முதியோர்களுக்கு பென்ஷன் ஏற்பாடு செய்யுங்கள்; நாட்டுப்பற்றும் நன்றாக வளரும்!

-YozenBalki 

💫💫

Here are the top 10 countries with the 
highest pension benefits for elderly citizens, based on various sources such as the OECD and World Bank:

1. *Netherlands*: 100% of average earnings
2. *Denmark*: 92% of average earnings
3. *Switzerland*: 85% of average earnings
4. *Sweden*: 83% of average earnings
5. *Spain*: 82% of average earnings
6. *Portugal*: 80% of average earnings
7. *Austria*: 78% of average earnings
8. *Finland*: 75% of average earnings
9. *Germany*: 73% of average earnings
10. *Iceland*: 72% of average earnings

Please note that these figures are approximate and may vary depending on individual circumstances and changes in pension systems.

Let me know if you need more information!

Yozenbalki
💫💫💫💫

வெள்ளி, 12 ஜூலை, 2024

Oh Time! Don't slip away like grains of sand!


My mind is a maelstrom, 
Amidst turmoil
churning with emotions.

I'm a ship without anchor
lost in life's vast ocean.

Yet, in this whirlpool of experiences
I've discovered my inner strength.

Like a river, I've learned to flow 
with life's ups and downs
unencumbered by yesterday's burdens.

My heart has become a sanctuary, 
untouched by the world's chaos.

Like a lotus
I've risen above the fray,
my beauty unmarred by turmoil.

I've realized 
that true wealth lies in family love,
relationship beauty
and simple pleasures.

In this life journey,
I've learned to cherish every moment,
find solace in nature's 
embrace and treasure 
loved ones' warmth
Like a bird spreading its wings.

I'm ready to soar into the unknown
with faith in my heart and hope in my soul.

-YozenBalki 


செவ்வாய், 14 மே, 2024

அவ்வையார் கூறிய 60 கெடுதிகள் எவை தெரியுமா?



நமது தமிழ் மூதாட்டி அவ்வையார் (ஔவையார்) அவர்கள் அற்புதமான நூல்கள் எழுதியவர்! 

ஆத்திச்சூடி 
கொன்றை வேந்தன்
நல்வழி 
மூதுரை 

போன்ற அறநூல்கள் அவற்றில் அடக்கம்! 
அதில் ஒன்று இது!

எதெல்லாம் கெடும்? என்று 60 கெடுதிகளை மூன்று சொற்களால் ஒரு வரியில் விளக்குகிறார் அவர்!

ஆனால் இதை குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்! 

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

அவர் எழுதிய மற்ற அருமையான செய்யுகளில் சிலவற்றை நாம் மீண்டும் நினைவில் கொள்வோமா?

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால்.


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் இலக்கியங்களில் உள்ள அறநெறி நூல்களை வாங்கி படித்துக் காட்டுங்கள், தமிழிலேயே அவர்களை படிக்கச் சொல்லுங்கள்! 
-YozenBalki 
🎉🎉🙏🏻🙏🏻🎊🎊

திங்கள், 6 மே, 2024

ரூ.150 க்கு 12 சுற்றுலாத் தலங்கள் காட்டுகிறார்கள்!



கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. 

அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க...!!

ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.

ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது.

இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.

1. Upper lake View
2. Moyar Point
3. Pine Forest
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கால்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு View
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop,)

ஆகிய இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு மேற்கண்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.

அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டடு இருக்கும். 

இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள்.

சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆஃபர் இந்த மே மாதம் முழுவதும் இருக்கும்.

இந்த பேருந்துகள் போதுமானதாக இல்லைன்னு மக்கள் குறைபடுவதும் தெரிகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

அப்புறம் என்ன கிளம்புங்க ஜாலியா வெறும் 150 ரூபாய்ல கொடைக்கானலை சுத்திட்டு வரலாம்.

-Courtesy
WhatsApp University 

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்!



🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்!

நன்றி 🙏 
இனிய காலை வணக்கம்.

Courtesy:
 
-எனது Twitter நண்பர் இன்பா
Mr. Vitalist 

வெள்ளி, 3 மே, 2024

சூரியன் சுடாத வெண்ணிற ஆடை அணிவோமா?


கோடை காலத்தில் வெண்மை நிற ஆடைகள் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த காணொளி! 

மற்ற வண்ணங்களில் உள்ள பலூன்கள் வெப்பம் குவிக்கப்படும் பொழுது உடனே உடைந்து விடுகின்றன! 

ஆனால், வெண்மை நிறத்தில் உள்ள பலூன் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கிறது! 

அத்தோடு வெண்ணிற பலூனுக்குள் உள்ளே வைக்கப்பட்டுள்ள நீல நிற பலூன் மீது வெப்பம் குவிக்கும் பொழுது உடைபடுகிறது; ஆனால் அதன் வெளியே உள்ள வெண்ணிற பலூன் அப்படியே வெப்பம் தாங்குகிறது!

அதான் நம்ம ஆளுங்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க போல!

அரேபியர்கள், வெப்பம் மிகுந்த கொடிய பாலைவனங்களில் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும்! 

நாமும் கோடைகாலங்களில் முடிந்த அளவுக்கு வெண்ணிற ஆடைகளை உடுத்துவோம்!

(Video Courtesy: WhatsApp Friends)

Yozenbalki

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க சில எளிய வழிகள்!




கோடையை வரவேற்போம்!

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். 

பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும்.

இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கி இயற்கையான ஹீட்டரைப் போல உங்களை வேகவைக்கும். ஆக, வெயில் சூட்டிலிருந்து உங்கள் மொட்டை மாடித் தரையைப் பாதுகாத்தால் அதன் வழியே உங்கள் வீட்டினுள்ளே சீலிங் வழியாக சூடான காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு என்ன செய்யலாம்?

01. மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்:

இதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக் காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும்.

இதற்கு செலவு குறைவானது முதல் அதிகம் செலவு வைப்பது வரை பல முறைகள் இருக்கிறது.

செலவு அதிகம் பிடிக்கும் முறை:

வெப்பத்தடுப்புக்கென்றே பிரத்யோகமாக விற்கப்படும் சுண்ணாம்புக் கலவைகள். 5 லிட்டர் பக்கெட்டுகள் 2500 ரூபாய் முதல் துவங்குகின்றன. இதில் பல வகைகள், கம்பெனித் தயாரிப்புகள் இருக்கின்றன.

செலவு குறைவான முறை:

சாதாரண ஸ்னோசெம், சூர்யா செம் போன்ற சுண்ணாம்புப் பைகள் 10 கிலோ ரூபாய்.300 க்குள் பெயின்ட்/ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும், அவற்றுடன் 500 கிராம் பெவிகால் கலந்து நீர்விட்டுக் கரைத்து நன்றாக திக் காக மாடித் தரையில் அடிக்கவேண்டும். 750 சதுர அடிக்கு 10 கிலோ சுண்ணாம்பு, பெயின்ட் ப்ரஷ், பெவிகால் எல்லாம் சேர்த்து ரூ.700க்குள் முடிந்துவிடும். ஒரு பெயின்டருக்கு ரூ.700 அதிகபட்ச சம்பளம் கொடுத்தால் கூட காலை 6 மணிக்குத் துவங்கி 7.30க்குள் வேலையை முடித்துவிடலாம். அதிகபட்ச செலவு ரூ.1500.00 மட்டுமே.

சரி மேலே சொன்ன செலவு அதிகம் பிடிக்கும் பிரத்யேக ஹீட் ப்ரூப் பெயின்டிற்கும், கீழே சொல்லப்பட்ட செலவு குறைவான சுண்ணாம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பிரத்தியேக பூச்சுகள் தயாரிப்பவர்கள் தரும் அதிகபட்ச் உழைக்கும் கால அளவு 2முதல் 3 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் வெண்மை நிறம் மாறும்பொழுது சூட்டைக் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். போக 750 சதுர அடிக்கு ஆகும் செலவென்பது 7500 ரூபாய்க்கு மேல் போகலாம். 

ஆக, வருடத்திற்கு 3 மாதங்கள் வெயிலைச் சமாளிக்கச் சுண்ணாம்பு கொண்டு குறைந்த செலவில் ஒவ்வொரு வருடமும் அடித்துக்கொள்வது செலவு குறைவு என்பதோடு, நாமே களத்தில் இறங்கி இதைச் செய்யமுடியும்.
எனவே உங்கள் பொருளாதாரம் சார்ந்து இந்தச் சுண்ணாம்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

02.ஷேட் நெட்கள்:

பச்சை நிறத்தில் கட்டிடங்கள் கட்ட மறைப்பிற்காகப் பயன்படுத்தும் இந்த பச்சை நிற வலைகளை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பல செடிகள் விற்கும் கடைகளிலும் நிழலுக்காக இதை பந்தல் போலப் போட்டிருப்பார்கள்.

இது 10 அடி அகலம், 150 அடி நீள பண்டல்களாக விற்கப்படுகிறது. 50% நிழல் தருபவை, 75% நிழல் தருபவை, 90% நிழல் தருபவை, என்று உங்களுக்குத் தேவையான நிழல் அளவிற்கு ஏற்ப இவை விற்கப்படுகின்றன.

இவற்றை மொட்டைமாடியில் பந்தல் போல நான்குபக்கமும், சவுக்கு அல்லது மூங்கில் கொம்பு நட்டு அதில் கட்டிப் பயன்படுத்தலாம். இதனால் மாடித் தரையில் நேரடியாக வெயில் பட்டு அதனால் சூடேறுவது மட்டுப்படுவதால் சீலிங் வழியே சூடு வீட்டின் உள்ளே இறங்குவது தடுக்கப்படும்.

50% மட்டுமே கிடைத்தது என்றால் இரண்டாக மடித்தும் பந்தல் போலப் போட்டுப் பயன்படுத்தலாம். சென்னையில் ஒரு பண்டல் 3000 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை, தரம், நிழல் அளவுகள் சார்ந்து விற்பனை செய்யப்படுகிறது. குறைவான அளவுகளில் உங்கள் தேவைக்கு ஏற்பவும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். வெயில் காலம் முடிந்து முறையாக எடுத்துப் பாதுகாத்துப் பயன்படுத்தினால் குறைந்தது 5 வருடங்கள் கூட இந்த ஷேட் நெட்கள் உங்களுக்கு உழைக்கும்.

03. தார்பாலின்கள்:

தார்பாலின்கள் அல்லது உபயோகப்படுத்தப்பட்ட ப்ளக்ஸ்
பேனர்களை நீங்கள் பந்தல் போலப் போட்டால் இருக்கும் பிரச்சனை காற்றடித்தால் கிழிவது மற்றும் அதிக வெயில் பட அவை அதன் தன்மையை இழந்து கிழிந்து / நைந்துபோவது. காற்று உள்ளே வெளியே செல்ல வழியில்லாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் ஷேட் நெட் போன்ற குளிர்ச்சியை இவை தருவதில்லை.

04.தென்னை ஓலைகள் :

குடிசை போடப் பயன்படுத்தும் தென்னை ஓலைகளை மாடியில் பரவலாகப் போட்டு தரையை மூடுவதன் மூலமும் ஓரளவு சூடு இறங்காமல் தவிர்க்கப்படும். மாடியில் குடிசை போடலாம். 10000 ரூபாய்க்கு மேல் செலவாகும். தீப்பிடிக்கக் கூடிய வாய்புகள் இருப்பதால் அரசே சில கட்டுப்பாடுகள் வைத்திருப்பதாகக் கேள்வி, அதிகபட்சம் 4 வருடங்கள் வரும். மழைக்காலத்தில் ஒழுகாமல் இருக்க சில விசயங்கள் செய்யவேண்டும்.

05. ஆஸ்பெஸ்டாஸ் / மெட்டல் ரூஃபிங்:

ஆஸ்பெஸ்டாஸ் போன்றவற்றை உபயோகிப்பது கேன்சரை வரவழைக்கும், பல உடல் நலக்கேடுகள் வரும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுவோம். மேலும் அவற்றால் சூடு அதிகம் உள்ளிரங்கும்.
மெட்டல் ரூஃபிங் எனப்படும் தகடுகளால் மேற்கூரை இடுவதும் ஓரளவு சூட்டைத் தணிக்கும். 1 லட்சம் முதல் உங்கள் தரை அளவைப் பொருத்து செலவாகும்.

06.சான்ட்விச் பேனல்:

இருபக்கம் மெல்லிய தகடுகள் கொண்டு நடுவில் பைபர் போன்ற அதிக கனமில்லாத, கடினமான ஒரு வெப்பத்தடுப்புப் பொருளை வைத்து இந்த கூரையைச் செய்கிறார்கள். சப்தம், வெளிப்பக்க வெப்பம் அல்லது குளிர் உள்ளே வருவது தடுக்கப்படுவது, உள்ளே இருக்கும் குளிர் அல்லது வெப்பம் வெளியே செல்லாமல் தடுக்கப்படுவது போன்றவைகள் இந்த பேனல் மூலம் சாத்தியம். 

25 வருடம் உழைக்கும் என்று சொல்கிறார்கள், குறைந்த காலத்தில் இந்தப் பேனலை வைத்து அழகாக ஒரு வீட்டையே நீங்கள் கட்டிவிடலாம். தேவையில்லாதபோது பிரித்து எடுத்து வேறு இடத்தில் மீண்டும் வீடு கட்டிக்கொள்ளலாம். காங்கிரீட் வீடு கட்டுவதை விட செலவு குறைவுதான். இந்தப் பேனலைக் கொண்டு மேற்கூரை அமைப்பதன் மூலமும் வெயில் சூடு இறங்குவதைத் தடுக்கமுடியும். இதுவும் மெட்டல் ரூஃபிங்கை விட செலவு அதிகம் பிடிக்கும்.

07. சாக்குப் பைகள்:

கோணி எனப்படும் சணல் சாக்குப் பைகளை நன்றாக நீரில் நனைத்து மாடித் தரையில் போடுவதன் மூலமும் ஓரளவு வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். சாக்குப் பை காயக் காய நீர் ஊற்றி நனைக்கவேண்டும், எந்த அளவுக்கு இது சூட்டைக் குறைக்கிறது என்பதை நான் பரிசோதித்ததில்லை.

08. கொடிப் பந்தல்:

முல்லை, கொடி சம்பங்கி, பாஷன் ப்ரூட் மற்றும் பலவகை படர்ந்து வளரும் க்ரோட்டன்கள் போன்றவற்றை நீங்கள் ஒரு பெரிய தொட்டியில் வளர்த்தோ அல்லது தரையிலிருந்து மேலெழுப்பியோ மாடி முழுவதற்கும் படறச் செய்யலாம். இவை பசுமையாக நிழல் தந்து உங்கள் மாடித் தரையில் சூடேற்றாமல் காக்கும். வாசமுள்ள பூக்களையோ, மனதிற்கினிய பச்சை நிறத்தையோ உங்களுக்குத் தரும்.

பெரிய இலைகளை உடைய, அடர்தியாக வளரக்கூடிய வெயில் தாங்கும் எந்தச் செடிகளையும் நெருக்கமாக தொட்டிகளில் வைத்தும் மாடித் தரையை வெயில் சூட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்குவது , பூச்சிகள், தரை பாழாவது போன்றவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதை நீங்கள்தான் அறிந்துகொள்ளவேண்டும். smile emoticon
சரி, எளிமையான வழிகளை மீண்டும் பார்ப்போம்:

முதலில் சாதாரண வெள்ளைச் சுண்ணாம்புடன் தேவையான பெவிகால் கலந்து (இந்த பெவிகால் சுண்ணாம்பு காலில் ஒட்டாமல் இருக்கப் பயன்படுகிறது) நன்றாக நீர்க்க இல்லாமல் திக்காக மாடித்தரையில் அடித்துவிடவேண்டும். அது காய்ந்ததும், நான்கு பக்கம் கம்புகளைக் கட்டி பச்சை நிற ஷேட் நெட்டைக் கட்டிவிடவேண்டும். இரண்டடுக்கு வெப்பத் தடுப்பு முடிந்துவிட்டது. 

மூன்றாவதாக, தென்னங்கீற்று அல்லது வெட்டிய ஓலைகளை வாங்கி ஏற்கனவே வெள்ளையடிக்கப்பட்ட மாடித் தரையில் பரப்பிவிடவேண்டும். இந்த மூன்றடுக்கு வெப்பத்தடுப்பு நிச்சயம் அக்னிநட்சத்திர மதியத்திலும் உங்களுக்கு குளிர்ச்சியான அல்லது வெப்பமில்லாத காற்றையே வீட்டிற்குள் உங்களுக்குத் தரும். இரவில் பேன் போட்டாலும் சூடான காற்று மேலிருந்து இறங்காது. 

இரவில் குளிர்ச்சியான நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு நிம்மதியாக உறங்கலாம். ஏசி பயன்படுத்தினாலும் இந்த முறையில் விரைவில் உங்கள் அறை குளிரூட்டப்படும். மின்சார செலவு குறையும்.

மேலும் சில தகவல்கள்:

சென்னை போன்ற கடல் அருகில் இருக்கும் நகரங்களாக இருந்தாலும், டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற காற்றில் ஈரத் தன்மை குறைவான, கடலிலிருந்து அதிக தூரமிருக்கும் இடங்களுக்கும், வெயில் சூடு இறங்காமல் தவிர்க்க, மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் உதவும். 

நீங்கள் வசதிபடைத்தவராக அல்லது குளிர்ச்சிவேன்டும் என்று விரும்புவராக இருந்தால், சென்னை போன்ற கடல் அருகில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் (வெயில் காலத்தில் வியர்த்துக் கொட்டும்) ஊர்களில் ஏசி எனப்படும் ஏர்கன்டிஷனர்கள் மட்டுமே பயன்தரும்.

தயவு செய்து விலை குறைவு என்று ஏர்கூலர்களை வாங்காதீர்கள். கிலோ கணக்கில் ஐஸையும், குளிர் நீரையும் ஊற்றினாலும், குளிர்ச்சிக்குப் பதில் எரிச்சலையும் உடல் கேட்டையுமே அது தரும். 

அதிக ஈரப்பதமுள்ள இடங்களில் ஏர்கூலர்கள் பலனளிக்காது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் போன்ற வறண்ட பிரதேசங்களில் ஏர்கூலர்கள் அற்புதமாக வேலைசெய்து குளிர்ச்சியைத் தரும். (ஏசியும் பலனளிக்கும்.) ஏசி, ஃபேன் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் அறை குளிர்ச்சியாக அதிக நேரம் பிடிக்கும். மின்சார செலவு அதிகரிக்கும்.

ஃபால்ஸ் சீலிங் எனப்படும் உள் அலங்காரங்கள், தெர்மொகோல் பயன்படுத்துவது போன்ற வீட்டினுள்ளே செய்யப்படும் விஷயங்களை நான் இங்கே எழுதவில்லை. வெளிப்புற வெப்பத்தடுப்பு பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். அதைப்பற்றிய விவரம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்களேன்!

நன்றி!!

Courtesy:

-தோழர் திரு இன்பா (Inba) அவர்கள் 

இவர் என்னுடைய ட்விட்டர் நண்பர், 
Vitalist என்ற பெயரில் மிக அருமையான கட்டுரைகள் எழுதுபவர். சீரிய சிந்தனையாளர்!
💫💫🌟🌟💫💫
https://x.com/im_inba1?t=pvfld3fgKNIYn_4EQVdaAg&s=09


திங்கள், 29 ஏப்ரல், 2024

நான் படித்த பார்ப்பன பள்ளியில் அவாள் ஆதிக்க கதைகள்!!


"இட ஒதுக்கீடு ஏன் தேவை?" என்ற விழிப்புணர்வு வலைத்தளங்களில் பேசப்படும் இவ்வேளையில்,

நான் படித்த சென்னை (கே கே நகர்) பாப்பார குரூப் பத்மா சேஷாத்திரி பள்ளியில் எனக்கு நடந்த நிகழ்வை பகிர விரும்புகிறேன்.

ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் அனைத்து பள்ளி மாணவர்களும் காணும்படியாக “ஜெனரல் அசெம்பிளி" (பொதுக் கூடுதல்) நடத்துவார்கள். இதில் பல வகை போட்டிகள் நடத்தப்படும் - வினாடி வினா, பாட்டுப் போட்டி, கருவிகள் இசைக்கும் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள்.

விவாதப் பேச்சுப் போட்டி (debate) ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். என் வகுப்பில் , மற்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் என் அளவுக்கு பேசும் திறமை இல்லாததால், என் அளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆகையால் பங்கேற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்கேற்றுக் கொண்டேன்.

எட்டாவது படிக்கையில் முதல் முறை பங்கேற்றுச் சிறப்பாக பேசினேன். ஆனால், பரிசு ஏதும் கிடைக்கவில்லை. 

ஒன்பதாவது படிக்கையில் மீண்டும் பங்கேற்றுக் கொண்டேன். ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. 

ஆனால், நான் அப்போது கவனித்தது, பரிசு பெற்ற இரண்டு பாப்பார மாணவர்கள் பேச்சை வெகு சுருக்கமாக முடித்துக் கொண்டவர்கள். பெரிதாக புள்ளிகளோ, விடயங்களோ, அவர்கள் பேச்சில் இல்லை. 

சந்திரா சீனிவாசன் என்ற ஆசிரியை போட்டியின் ஒருங்கிணைப்பாளர். அவரை சந்தித்து, என்னிடம் உள்ள குறைகள் என்ன, திருத்திக்கொள்ள உதவுமே, என்று பல முறை கேட்டேன். 

கடைசி வரை அவள் சொல்லவே இல்லை.

பத்தாவது படிக்கையிலும் பங்கேற்றுக் கொண்டேன். தோல்வி தான். இந்த முறை வகுப்பில் எனக்கிருந்த ஓரிரு நண்பர்கள் அவர்களாகவே முன் வந்து என்னைப் பாராட்டினார்கள். 

ஆனால், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பரிசு கிடைக்காததால், அப்பொழுது எனக்கு,“ ஒரு வேளை நாம் அவ்வளவு நல்ல பேச்சாளர் இல்லை போலிருக்கு” என்று முதல் முறையாக தாழ்மனப்பான்மையோடு எண்ணத் தொடங்கினேன்.

என் திறமையில் எனது நம்பிக்கை அடி வாங்கியதால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் நான் என் பெயரைக் கூட கொடுக்க முயற்சிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் எந்த மேடையும் ஏறாமல் கழிந்தன. பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமே மறந்து போனது. 

இப்படியிருக்க, சென்னையில் அப்பொழுது அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் ஒதுக்கும் ஒரு சாதாரண கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கல்லூரி எப்பொழுதாவது, மாணவர்களுக்கு உரை ஆற்ற, சாதனையாளர்கள், துறை வல்லுநர்கள், மற்ற கல்லூரி ஆசிரியர்கள், என்று பெரியவர்களை அழைப்பார்கள்.

அப்படி ஒரு முறை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி என்பவரை பேச அழைத்திருந்தார்கள். அவருடைய அமெரிக்க வாழ்க்கை அனுபவம், அமெரிக்க கல்வி முறை, அமெரிக்கர்களின் உளவியல், என்று இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற அவ்வளவு கருத்துக்களை தமிழிலே அவ்வளவு அழகாக, தெளிவாக பேசினார்.

அந்த பேச்சில் திரு.எம்.எஸ் உதயமூர்த்தி கூறிய ஒரு வாக்கியம் என்னை தட்டி எழுப்பியது:

“உங்களால் ஒன்றை சாதிக்க முடியும்! முடியும், என்று மீண்டும் மீண்டும் தோன்றினால், அது உங்களால் முடியும்!". என்றார்.

அந்த அரங்கில், என் தலையில் அவர் ஒரு ஆயிரம் வாட்ஸ் விளக்கை போட்டுவிட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்தது. மெய் சிலிர்த்தது.

“ஓ !! நாம் நல்ல பேச்சாளர் என்ற நம்பிக்கை வந்து கொண்டே இருக்கிறதே. நான் மேடையில் பல சைகைகள் செய்து, பல புள்ளிகளை எடுத்துரைத்து, அமோக கைதட்டல் பெறுவது போல் காட்சிகள் உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றனவே. ஒரு வேளை, இவர் சொல்வது போல் நம்மால் சிறந்த பேச்சாளராக வெல்ல முடியும் என்பது உண்மையோ?!! அதனால் தான் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ?!!!” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.

இரண்டே வாரங்கள் கழித்து, சென்னையில் ஒரு மிகவும் புகழ் பெற்ற பெண்கள் கல்லூரியில், ஒரு விவாதப்போட்டி இருப்பதாக அறிவிப்பு ஒட்டினார்கள். மூன்று ஆண்டுகள் மேடையே ஏறாத நான், துணிந்து என் பெயரை, என் கல்லூரியின் சார்பாகக் கொடுத்தேன்.

சென்னையின் பல கல்லூரிகளிலிருந்து, ஒரு 20 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள். லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ்..என்று பெரும் புகழ் பெற்ற கல்லூரிகளிலிருந்து போட்டியாளர்கள். போட்டி துவங்கும் முன் போட்டியாளர்கள் பலர் ஒருவருக்கொருவர் அறிந்த முகங்களாக இருந்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் பலரும் பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அனுபவமிக்கவர்கள். நான் தான் அதில் புதுமுகம். அனுபவம் இல்லாத எனக்கு, கல்லூரி அளவில் இது தான் எனக்கு முதல் பேச்சுப் போட்டியும் கூட.

ஒரு பதினைந்து பேர் பேசி முடித்த பிறகு எனது பெயர் அறிவிக்கப்பட்டது. கேட்பவர்கள் கவனத்தை ஈர்க்க ஒரு கவர்ச்சியான விதத்தில் வணக்கம் சொன்னேன். அரங்கமே எழுந்து கை தட்டியது !! அதற்குப் பிறகு தங்கு தடையின்றி ஆறு போல ஓடியது என் பேச்சு. இடை இடையே முக்கிய புள்ளிகள், சான்றோர்களின் கருத்துக்கள், நூல்களில் இருந்து மேற்கோள்கள், நகைச்சுவை, என்று பேச்சு செல்ல, ஆங்காங்கே நான் பேசுவதை நிறுத்த வேண்டிய அளவு கைதட்டல் வாங்கினேன் !!

பரிசுகள் அறிவிப்பு,

“மூன்றாம் பரிசு...”,

 “இரண்டாம் பரிசு...”

இரண்டிலும் என் பெயர் வரவில்லை.

முதல் பரிசு…..”காளி” !!!!!!!! 

அரங்கமே மகிழ்ச்சியில் கை தட்டியது. என் வாழ்வில் மறக்கவே முடியாத பொன் நாள். இன்றும் அந்த கணத்தை நினைக்கையில் என் உள்ளத்தில் அவ்வளவு பூரிப்பு. 

அன்றைய நாள் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மீதமிருந்த கல்லூரி வாழ்வில் கிட்டத்தட்ட 40 பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று, எத்தனையோ முதல் பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் என்று குவிந்தன. பிற்காலத்தில் இதில் வளர்ந்த என் ஆங்கில பேச்சுத் திறமையே என் வேலையிலும் தொழிலும் அவ்வளவு வெற்றிகளைத் தந்தது.

ஒரு வேளை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் உரையை நான் கேட்கவில்லை என்றால், எனக்கு அநீதி செய்த அந்த பாப்பார அயோக்கியர்களின் மதிப்பீட்டை உண்மையென நம்பி இந்த திறமை என் பள்ளிப்பருவத்திலேயே ஊக்கம் இல்லாமல் காய்ந்து கருகி காணாமல் போயிருக்கும்.

அந்த பாப்பார அயோக்கியர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து என் "முளைவிடும் திறமையில்" சத்தமே இல்லாமல் திராவகம் ஊற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இதில் திருட்டு, கொலை, குற்றம் எதுவுமில்லை. ஆனால், அவற்றை விடை கொடிய குற்றமாக, கல்வி கிடைக்கும் என்று நம்பி வந்த இடத்தில, அந்தக் கல்வியை ஒரு குழந்தைக்கு கிடைக்க விடாமல் செய்தார்கள், பாப்பார வஞ்சகர்கள்.

என் நீண்ட வாழ்வில் இன்று வரை மறக்க முடியாத, பொறுக்க முடியாத, பாப்பானின் அநீதிகள் இவை. ஒரு பேச்சுப் போட்டியிலேயே இவ்வளவு சூழ்ச்சி செய்கிறார்கள் என்றால், பாப்பான் அல்லாத பிள்ளையின் பாடப்படிப்பிலும், தேர்வுகளிலும், எவ்வளவு தடைகள் போடுவார்கள்? 

உங்கள் பிள்ளைகளை பாப்பான் ஆதிக்கம் இருக்கும் பள்ளிகளில் படிக்க வைத்திருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் அவர்களோடு அவர்கள் பள்ளி வாழ்வை பற்றி நிறைய பேசுங்கள். பள்ளியிலே நூல் படிப்பும் தேர்வும் மட்டும் பிள்ளையின் வாழ்வு இல்லை.

ஆசிரியர்கள், பாப்பான் அல்லாத பிள்ளைகளை மாண்புடன் நடத்துகிறார்களா? அடிக்கடி காரணம் இல்லாமல் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லி அவமானப்படுத்துகிறார்களா?, படிப்பு தவிர மற்ற நிகழ்வுகளில், போட்டிகளில், சரியான வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா?, பாடம் பாப்பாரப் பையனுக்கு ஒரு தரமாகவும், பாப்பான் அல்லாத பையனுக்கு மட்டமாகவும் சொல்லிக்கொடுக்கப்படுகிறதா ?, பிள்ளை கேட்கும் ஐயங்களுக்கு ஆசிரியர் 
பொறுமையாக விளக்குகிறாரா?, 

முக்கியமாக உங்கள் பிள்ளையுடன் மற்ற பிள்ளைகள் நல்லபடியாக பழகுகிறார்களா, இல்லை மறைமுகமாக ஒதுக்கப்படுகிறானா ….என்று உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் ஒரு பள்ளியின் பங்கு எவ்வளவோ இருக்கிறது... அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.

ஒவ்வொன்றிலும் பாப்பான், பிஞ்சுகள் உள்ளத்தில் இரக்கமே இல்லாமல், கண் இமைக்காமல், அமிலம் ஊற்றுவான். எச்சரிக்கையாக இருங்கள்.

சமூக நீதிக்கான போரை தந்தை பெரியார் விட்ட இடத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

ஓய மாட்டோம்!
களமாடுவோம்!
வெல்வோம்!!

Courtesy:

எனது twitter நண்பர் 
திரு. காளி அவர்கள் 

(அவர் மிகச் சிறந்த தமிழ் ஆங்கில எழுத்தாளர்; பேச்சாளர், சீரிய சிந்தனையாளர்! சமூகப் பற்று நிறைந்தவர்! சிறுக சிறுக இதை எழுதி ட்விட்டரில் போட்டு இருந்தார்... அவரிடம் கேட்டு வாங்கி, அவரது அனுபவம் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதனால் இங்கு பதித்து இருக்கிறேன்!)

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இதுக்கு பேசாம வெள்ளக்காரன் கிட்ட ....



I.T. கட்டிவிட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டிவிட்டேன்
CST கட்டிவிட்டேன்
Service Tax கட்டிவிட்டேன்
Excise Duty கட்டிவிட்டேன்
Customs Duty கட்டிவிட்டேன்
Octroi கட்டிவிட்டேன்
TDS கட்டிவிட்டேன்
ESI கட்டிவிட்டேன்
Property Tax கட்டிவிட்டேன்
Stamp கட்டிவிட்டேன்
CGT கட்டிவிட்டேன்.....

Water Tax கட்டிவிட்டேன்
Professional Tax கட்டிவிட்டேன்
Corporate Tax கட்டிவிட்டேன்
Road Tax கட்டிவிட்டேன்
STT கட்டிவிட்டேன்
Education Cess கட்டிவிட்டேன்
Wealth Tax கட்டிவிட்டேன்
TOT கட்டிவிட்டேன்
Capital Gain Tax கட்டிவிட்டேன்
Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன்
TOLL GATE FEE கட்டிவிட்டேன்...

மாமூல் கட்டிவிட்டேன்...

அப்பா... மூச்சு வாங்குது...!! 😭😭

இதுக்கு பேசாம வெள்ளக்காரன் 
கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாமேடா... !!

அவன் கேட்டது வெறும் 3% Tax தானே?!?!?

Courtesy:

-ட்விட்டர் நண்பர்
திரு. இன்பா (Mr.Vitalist)

சனி, 17 பிப்ரவரி, 2024

பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?"

சங்கீகளும், நாதக தற்குறி சகோதரர்களும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி... 

"பெரியார் தான் 
தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு இருந்தேன்.

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் பெரியார் தான் எல்லாம் பண்ணார்!'

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் தான் 
நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க?.. கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொல்ல ஒரு Guts வேணும்.. ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 20 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி
இடஒதுக்கீடு வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா,
எனக்கு காங்கிரஸே வேணாம்"னு சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,
மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.
1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே
'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?

👉- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...

15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் #பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர், இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,
பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.
- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட
எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.
- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...
💕🎊💕🎊💕

Courtesy:
From Facebook 
பகிர்வு - Peer Raja

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆரிய பார்ப்பன பாஜக தமிழகத்துக்கு ஆபத்து!!

நமது தமிழ் இளைஞர்கள், பொதுவாகவே திமுக ஊழல் செய்கிறது, அண்ணா திமுக ஊழல் செய்கிறது என்று யாராவது மனோவசியம் செய்தால் ஏமாந்து விடுகிறார்கள்!

ஏதோ பிற உலக கட்சிகள், இந்திய கட்சிகள் ஒரு ஊழலும் செய்யாத உத்தமர்கள் போல! சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிக தொகைகளுக்கு பல லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி ஆரிய பார்ப்பன பாஜக கட்சி தான்!

சரி, நான் திராவிட இயக்கங்களை போற்றுபவன்! அதற்கு என்ன காரணம் என்று சொல்கிறேன்!

திராவிட இயக்கம் என்னதான் ஊழல் செய்தாலும் நான் வந்து 70% திமுக 30% அதிமுக, அதன் பிறகு எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் திருமா அவர்களின் கொள்கை பிடிப்பு ரொம்ப பிடிக்கும்!

பாஜக என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் ஆரம்பித்த ஒரு அமைப்பு!

நமது சூத்திரப் பிள்ளைகளின் கல்வி உரிமையை ஒழித்து நம்மை பழையபடி சனாதன (அ)தர்ம சாக்கடையில் ஆழ்த்தி பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள்...
பிற 97% மக்கள் தாழ்ந்தவர்கள் 
என்ற ஆரிய பார்ப்பன ஜாதீய கருத்தை நிலை நிறுத்தத் துடிப்பவர்கள்!

அதனால் எனக்கு பாஜக அறவே பிடிக்காது!

இன்னொன்று
பற்பல துறைகளில்
360°
மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான்!

உலகத்திலேயே அதிக உயர் கல்வி படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்! அதற்கு காரணம் தொடர்ந்து வந்த இரண்டு திராவிட இயக்க ஆட்சிகள் தாம்!

அதற்கு மூல காரணம் தேடித் தேடி குழந்தைகளை ஊக்குவித்து, பள்ளிப்படிப்பு கல்லூரி படிப்பு வேலைவாய்ப்பு என்றெல்லாம் சூத்திர குழந்தைகளை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பெரியார் அண்ணா அம்பேத்கர் கொள்கைகள் தாம்!

அதனால் தான் வடமாநிலங்கள் நம்மை விட நூறு வருடம் பின்தங்கி இருக்கின்றன! இன்னும் கூட அங்க சராசரி பொதுமக்களுக்கு கக்கூஸ் கட்டவில்லை!

வடக்கிலிருந்து இளைஞர்கள் பாஜக காங்கிரஸ் ஆட்சியில் சிக்கி சீரழிந்து படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி கோடிக்கணக்கில் வந்து கூலி வேலை செய்து பிழைப்பது ஏன்?

ஏன் அவர்களுக்கு உயர்கல்வி இல்லை வேலை வாய்ப்பு இல்லை அங்கேயே வாழ்வதற்கு வசதி இல்லை? 

சுதந்திரம் பெற்று ஒரே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து, மாநில வளர்ச்சிக்கு அவர்களே பட்ஜெட்டில் அதிகம் கொள்ளையடித்துக் கொண்ட போதும் அந்த வட இந்திய மாநிலங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை!

அங்குதானே இவர்கள் போற்றுகின்ற வட இந்திய பெருந்தலைவர்கள் பலரும் பிறந்தார்கள்? 

ஆக, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இன்று வரை வாயில் வடை சுட்டு திராவிடத்தை திட்டிக்கொண்டு பிழைத்து வருகிறார்கள் என்பது மட்டுமே தெள்ளத்தெளிவான உண்மை!

சரி! ஊழல் என்பது உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது! தேன் எடுப்பவன் தன் கையை நக்குவான் தானே?

பணப்புழக்கம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மற்றும் எல்லா நாடுகளிலும் ஊழல் உள்ளது; அதன் விகிதம் மட்டுமே மாறும்!

என்னைப் பொறுத்தவரை தமிழன் ஊழல் செய்தால் அந்தப் பணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தான் உலவும்! அதனால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்!
ஏனென்றால் யாரும் பணத்தை தின்று விட முடியாது! 

அந்த வகையில் தமிழர்கள் செய்கிற ஊழல் மகா குற்றம் கிடையாது!

ஊழல் செய்த பணத்தைக் கொண்டு அவர்கள் அணுகுண்டு தயாரிக்கவில்லை! கல்வி நிறுவனங்கள் கட்டி, பாதி பணம் 'கோட்டா' வழியாக சம்பாதிக்கிறார்கள், மீதி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறிவு வேலை வாய்ப்பு பெற்று தருகிறார்கள்!

அதனால்தான் தமிழகம் உலகத்திலேயே அதிக உயர்கல்வி படித்தவர்களைக் கொண்டிருக்கிறது!

எனவே, நான் என்றென்றும் திராவிட கொள்கைகளை, சமத்துவம் சமநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பவன்!

நான் *பெரியார் கண்ணாடி* வழியாக இந்தத் தமிழ்ச் சமூக முன்னேற்றத்தைப் பார்க்கிறேன்!

ஆரிய பார்ப்பன 
ஆர்எஸ்எஸ் பாஜக என்பது, தமிழ் மொழி தமிழ்ப் பண்பாடு, தமிழின உரிமை, தமிழர்களின் உணவுத் தேர்வு, தமிழினக் குழந்தைகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகம், கருவறையில் தமிழ் பூசை போன்ற எல்லாவற்றிற்கும் எதிரானவை!

சுருக்கமாக சொன்னால் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தமிழகத்துக்கு ஒரு பெரும் ஆபத்து!

Yozenbalki
💫💫🎊🎊

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தமிழர் பாரம்பரிய அரிசி வகைகள் 1000 தெரியுமா?

நாம் உண்ணும் அரிசி வகை என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நம்மில் பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்! 

மிகவும் முக்கியமான இரகங்களான, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி இவை யாவும் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை தெரியுமா?

மேலும், நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசியானது பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவென தின்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பயிரிடப்படும் அத்தியாவசிய வகைகளில் ஒன்றுதான் நெல். பாரம்பரிய நெல் சாகுபடி சில வழிமுறைகளை உள்ளடக்கியது மற்றும் மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும். நமது பாரம்பரிய உணவு அரிசி அதிக ஆற்றலை அளிக்கிறது, உடல் பருமன், புற்றுநோய், அல்சைமர் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. 

செரிமான குணங்கள்:
நன்கு சமைத்த அரிசியில் 68% நீர், 28% கார்போஹைட்ரேட், 3% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது.

அத்துணை சிறப்புகள் பெற்ற அரிசியில் இன்று நாம் முழுக்க முழுக்க பாலிஷ் செய்துவிட்டு சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். 

அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்த்து விடாமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ 
திரு. நம்மாழ்வார் அய்யா கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. 

நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

தமிழகத்தில் இப்போதும் பலர் உங்களுக்காக அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகின்றனர்.

Thooyamalli Rice – Traditional Rice - Gramiyum  https://gramiyum.in

The nine traditional rice varieties of Tamilnadu - UlaMart https://www.ulamart.com

Traditional Rice: B&B Organics https://bnborganics.com

Buy Organic Traditional Rice Online https://www.thanjaiorganics.com

Buy Organic Rice online https://www.ulamart.com

தற்போது அமேசானில் கூட கிட்டத்தட்ட இவை எல்லாமே கிடைக்கிறது!
www.amazon.in 
www.amazon.com

சரி போகட்டும்!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள் இவை:

மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
 பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்

அரசர்களின் அரிசி:

"கறுப்பு கவுனி" அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி

கல்லுண்டை
முற்றின சம்பா
சேலம் சம்பா
மரத்தொண்டி
சிவப்புக்கவுனி
இலுப்பைப் பூச்சம்பா
திருப்பதி சாரம்
சிவப்புக் குருவிக்கார்
சண்டிக்கார்
குள்ளக்கார்
அனந்தனூர் சன்னம்
கைவரச்சம்பா
ஒட்டடையான்
பனங்காட்டுக் குடைவாழை
கொச்சின் சம்பா
பொன்னி
கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

கள்ளிமடையான்
 காட்டுச்சம்பா
 மாப்பிள்ளைச் சம்பா
 சிறுகமணி சம்பா
 சண்டிகார்
 நீலம் சம்பா
 மடுமுழுங்கி
 சேலம் சன்னா
 பாசுமுகி
 காலா ஜீரா
 கைவரச் சம்பா
 சிங்கார்
 சித்த சன்னா

மாப்பிள்ளை சம்பா

 வைகுண்டா
 தீகார்
 சன்ன சம்பா
 முற்றின சம்பா
 ராஜமன்னார்
 மிளகுச் சம்பா
 ரத்தசாலி
 பிசினி
 கொத்தமல்லிச் சம்பா
 வாழைப்பூ சம்பா
 பொலிநெல்
 பால் குடைவாழை
 காட்டுப்பொன்னி
 ராஜயோகம்
 யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா
 ராம ஜடாலே
வாலன் சம்பா
 இரவைப்பாண்டி
 ரசகடம்
 மரநெல்
 துளசி வாசனை சம்பா
 சீரகச் சம்பா
 காட்டுயானம்
 தூயமல்லி
 கல்லுண்டைச் சம்பா
 கண்டசாலி
 கந்தசாலா
 சிவன்சம்பா
 கலர்பாலை
 சீரகச் சன்னா
 ஒட்டடம்
 அனந்தனூர் சன்னம்
 பச்சை பெருமாள்
 கருத்தகார்
 கட்டச்சம்பா

செம்புளிச் சம்பா
 காலா நமக்
 சூரக்குறுவை
 கருப்பு சீரகச்சம்பா
 ராமஹல்லி
 குருவா
 கேரள சுந்தரி
 வெள்ளசீரா
 பாராபாங்க்
 காலாபத்தி பிளாக்
 மாலாபத்தி
 வடக்கன் சீரா
 தோடா பெருநெல்லு
 ஜீமாய்நாடு
 ஜீரக சாலா
 அரிமோடன்
 ஆனமோடன்
 பாளியாறல்
 குரியாகயாமா
 காலாச்சி பிட்

மரத்தொண்டி
 செந்நெல்
 கரிகஜனவள்ளி
 வெள்ளைக்கார்
  ரக்தாசுடி
 ராணிசால்
 நாசர்பாத்
 புல்பாப்ரி
 தங்கச் சம்பா
 மஞ்சள் பொன்னி
 அறுபதாம் குறுவை
 கொடகுவிளையான்
 துளுநாடான்
 சன்ன நெல்
 விஷ்ணுபோகம்
 ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
 சௌபாக்கி
 ஆம்பிமோகர்
 ஹரித்திகத்தி
 எளாய்ச்சி
 பாசுபதி
 தில்கஸ்தூரி

நமது தமிழக அரிசி வகைகள் யாவும் அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளன. நம்மிடம் 5000 அரிசி வகைகள் அந்த காலத்தில் இருந்தன, ஆனால் இப்போது கிட்டத்தட்ட 200 ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் சேமிக்க முடிந்தது. இந்த 200 வகைகளும் அழிந்துவிடக் கூடாது. 

குறைந்த பட்சம் நம் தமிழ்நாட்டின் மதிப்புமிக்க இத்தகு அரிசி இனங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டு அதை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்கு உண்டு.

மேற்படி அரிசி வகைகளை இணையம் மூலம் தேடி கண்டுபிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ ஒரு கிலோவாவது ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் நாம் மேற்கொண்டால் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அத்தகு அரிசி வகைகளை, கைவிடாமல் விளைவித்துக் கொண்டு வருவார்கள்! 

இல்லை என்றால் அந்த மிச்ச சொச்சம் இருக்கிற அரிசி வகைகளும், நம்மிடமிருந்து அழிந்து போய்விடும்! அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதை காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்!

இது பற்றி நமது பற்பல அரசியல் தலைவர்களும் தமிழக அரசாங்கமும் கூடிக் கலந்து பேசி "தமிழர் பாரம்பரிய நெல் ரகங்கள் காப்பாற்றும்" ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் மிக்க  அன்புரிமையுடன் கோருகிறேன்!

-YozenBalki 

(இவை இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்கள்! இது போன்ற நம் மரபு சார்ந்த செய்திகள், கடல் கடந்த நாடுகளில் வாழும் நம் தமிழின குடும்பங்களிலும் இது பரவ வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறேன்!)